Monday 11 November 2013

இளையராஜாவுக்கு....

இளையராஜாவுக்கு ஒரு வாழ்த்து .....

தமிழகத்தில் அமைச்சர்கள் அம்மா பாடல்கள் பாடுவதற்கு
 முன்பே அம்மா பாடல்கள் பாடியவன் நீ... 
அவர்கள் பாடலில் அரசியல் இருந்தது..ஆனால் 
உன் பாடலில் தான் அன்பு தெரிந்தது.....

 எங்களது ஊர் பயணங்களில் உனது பாடல்கள் இல்லாத 
பயணங்கள் இது வரை இல்லை.. அப்படி இருந்தால்
 அது பயணமே இல்லை....பாவலரின் அன்புத்தம்பியே.. 
பாக்கள் பாடி வரும் இசைத்து ம்பியே.. 

சரஸ்வதி அருளின் மொத்த குத்தகைகாரனே.. பண்ணைபுரமே
 கலைவாணி இல்லத்து கொல்லைபுறம் என்றால் அதில் மிகையேது...
 நான் படித்து இருக்கிறேன்..அன்று வைகை அணை கட்டும் போது
 அங்கு நீ ஒருதொழிலாளி...இன்று இசை ஆற்றுக்கே நீ முதலாளி....

.காதலித்த அனைவரையும் கேட்டுப்பார்த்தால் அந்த காதலுக்குள்
 உன் பாட்டு ஒன்றாவது இருக்கும்... இல்லையெனில்
 அந்த காதல் எப்படி பிழைக்கும்.?ஜனனி..ஜனனி என்று நீ பாடிய
 போது மூகாம்பிகை உனக்கு தாயானாள்...அதை கேட்ட நாங்கள்
 உனக்கு வாலாட்டும் நாயானோம்..

பாடல்கள் பல இசைத்தாய்...தமிழர்களுக்கு நீயே இசை தாய்...
 ஒரு ஆர்மோனியத்தின் விசையாகவோ,வீணையின் தந்தியாகவோ,
குழலின் துளையாகவோ பிறக்கவில்லையே என இப்போது வருந்துகிறேன்.. 
உனது விரல் படும் என்றால் மறு பிறவியில் இதில் ஒன்றாக பிறக்க விழைகிறேன்...
 இசைக்கு நீ செய்வதே தொண்டு... நீ வாழ வேண்டும் நூறாண்டு...


வாழ்த்து-2

இது இசைக்கு ஒரு நாள்...ராகத்தின் திரு நாள்.
. இசை பிறந்த தேதி இது...இதை மறந்தால் நீதி ஏது?
 ஸ்வரங்கள் புதைந்து இருக்கும் ஆர்மோனிய கட்டை..
அதை ஆட்சி செய்தது ஒரு வேட்டி சட்டை..
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்
...ஆனால் திரு வாசகமே உருகியது உன்னால்...
.சிம்பொனியையும் அடக்கியது உன் தொனி...
ஏனெனில் நீ சங்கீத கேணி...
உம் பிழை கூட சங்கீத மழை...
ஆண்டாள் சூடிய மாலை கிருஷ்ண தேவனுக்கு.. 
நீ சூடிய மாலை ராக தேவனுக்கு.
சூடி கொடுத்த சுடர் கொடி போல் நீபாடி கொடுத்த
 சுடர் கொடி...இசையே உனது ராஜாங்கம்..
இதை மறுப்பவர் பழைய பஞ்சாங்கம்...
இசை ஒரு மதம் என்றால் நீயே அதன் கடவுள் என்பேன்..
இதை மறுத்து எவரும் பதில் சொன்னால் அவருக்கு நான் எமன் என்பேன்...


கவிஞர் வாலி அவர்களது பாணியில் இசை ஞானி 

இளையராஜாவுக்கு என் வாழ்த்து...!


ஸ்வரங்கள் புதைந்து இருக்கும் ஆர்மோனிய கட்டை..

அதை ஆட்சி செய்தது ஒரு வேட்டி சட்டை..!

தலையில் நீ மயிர் வளர்த்ததில்லை ஆனால் - 

இசையென்னும் பயிர் வளர்த்தாய்.! ஏனெனில் 

இசை உனக்கு தாய்.! அதைத்தான் நீ இசைத்தாய்.!

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் 

ஆனால் திரு வாசகமே உருகியது உன்னால்.!

நீ பாட்டுக்கள் ஊற்றெடுக்கும் கேணி..! 

ஸ்வர வேள்விகள் பல கண்ட இசை ஞானி.! 

எனவேதான் சிம்பொனி கடலிலும் ஏறியது உன் தோணி.!

உம் பிழை கூட சங்கீத மழை..! 

ஆண்டாள் சூடிய மாலை கிருஷ்ண தேவனுக்கு.! 

நீ சூடித் தந்த மாலை தான் ராக தேவனுக்கு.!

சூடி கொடுத்த சுடர் கொடி போல் நீபாடி கொடுத்த சுடர் கொடி.! 

இசையே உனது ராஜாங்கம் இதை மறுப்பவர் பழைய பஞ்சாங்கம்.!

இசை ஒரு மதம் என்றால் நீயே அதன் கடவுள் என்பேன்..!

இதை மறுத்து எவரும் பதில் சொன்னால் அவருக்கு நான் எமன் என்பேன்...!!

வெங்கடேஷ் ஆறுமுகம்...


1 comment:

  1. இசை ... இசைக்கு தேவன் இளையராஜா ...இந்த இசைதேவனை நகைசுவை மன்னன் பாராட்டும்போது நாங்களும் தலை ஆட்டிகொள்கிறோம்...

    ReplyDelete