Sunday 10 November 2013

அரசியல் வெடி.....

தலைவர்களின் தீபாவளி வெடிகள்...... 

ப.சிதம்பரம் :  லக்ஷ்மி வெடி.... வெடிச்சா நிறைய காகிதம் பறக்கும்... எந்த காகிதத்துக்கும் மதிப்பு இருக்காது... வெடிச்சா வரி வரியா புகை வரும்.... இவரோட வெடி மக்களுக்கு இடி .... புஸ்சுன்னு போனாலும் படார்ன்னு வெடிச்சாலும் இவர் "உன்னிப்பாக" கவனித்து வருவார்......

வை.கோ : சங்கு சக்கரம்..... ஒரு இடத்துல நிக்காம சுத்திகிட்டே இருக்கும்.... பாக்க பம்பரம் மாதிரி இருக்கறதால இவருக்கு இது ரொம்ப பிடிக்கும்....ஆனா சுத்தி முடிச்சு எங்க போயி நிக்கும்ன்னு இப்பவே சொல்ல முடியாது.....

கலைஞர் : ஃபேமிலி பேக் வெடி..... எல்லா வெடியும் கலந்து இருக்கும்.....வீட்ல இருக்குறவங்களுக்கு வெடியை பிரிச்சு கொடுக்கும் போது வெடி வெடிக்காது...அதுக்கு பதிலா பிரச்சனை வெடிக்கும்... யாருக்கு எந்த வெடி கொடுக்குறதுன்னு தெரியாம கடைசியில் எல்லாமே அவரே வெடிப்பார்.......

நாராயணசாமி : ஏரோப்ளேன் வெடி..... பாக்க பாக்கு மாதிரி சிறுசா இருந்தாலும் சவுண்ட் ரொம்ப இருக்கும்.... விசிலடிக்கும் வெடி இது.... ஆனா எப்ப பத்த வச்சாலும் ஒரே மாதிரி விசில் தான் வரும்.... 15 நாளைக்கு முன்னால் வாங்கி வைக்கிறது நல்லது.....

ஜெயலலிதா : அணுகுண்டு..... இவங்க எப்ப பத்த வைப்பாங்கன்னு இவங்களுக்கு தான் தெரியும்... வெடியை எப்பவும் யார் நாற்காலிக்கு கிழே தான் வைப்பாங்க... நிறைய பேரு கிழே விழுகிறது இவங்களுக்காகன்னாலும் கிழே ஏதாவது வெடி வைச்சு இருக்கான்னு பாக்கதான்... ராகு காலம் இல்லாம நல்ல நேரம் பாத்துதான் வெடிப்பாங்க....

தா.பாண்டியன் : சர வெடி.... இவருக்காக வெடி போட்டதை விட மத்தவங்களை பாராட்டி போடவே சரியா இருக்கும்...படபடபடன்னு சத்தம் மத்தவங்க கவனத்தை திருப்பும்... சிவப்பு கலர் வெடிய சிவப்பு கம்பளம் போல விரிச்சு வெடிக்கிறது நாளைக்கு இவருக்கும் கம்பளம் கிடைக்குங்குற எதிர்பார்ப்புல தான்.....

ராமதாஸ் : கம்பி மத்தாப்பு..... கூட்டணி இல்லாம வெடிக்க முடிவு எடுத்தாச்சு... ஆனாலும் பெரிய வெடி எதுவும் வெடிக்கப் போறது இல்லை இப்போதைக்கு ஜாக்கிரதையா இருக்க இதை தான் வெடிக்கணும்... இல்லாட்டி கம்பிலதான் மத்தாப்பு....

தமிழக காங்கிரஸ் தலைவர்கள் : பொம்மை வெடி..... எல்லாம் ஒரே மாதிரி தான் வெடிக்கும்.... ஆனா ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.....பத்த வைச்சா எல்லாமே புஸ்சுன்னு தான் வெடிக்கும்... மேலிடத்துல வச்சா கொஞ்சம் அடங்கி இருக்கும்...

திருமா : புஸ்வாணம்...... நல்லா பெருசா எழுந்து வந்து அப்பிடியே அமுங்கி விடும் வெடி..... எழுவதும் விழுவதும் சூரியனோட வேலை.....கூட இருக்கறதால அதுவே இவருக்கும் பழகிடுச்சு...பெண் படம் போட்ட புஸ்வாண டப்பா இவங்களுது இல்லையாம்....

மன்மோகன் : பாம்பு மாத்திரை.... சத்தம் அதிகம் இல்லாத வெடி இது.... யாராவது நிதானமா பத்த வச்சாதான் பத்தவே ஆரம்பிக்கும்.... என்னமோ பெருசா வருதேன்னு பார்த்தா... கடைசியில "கரி" தான் மிச்சம் இருக்கும்...ஆனா அந்த "கரி"க்கும் இதுக்கும் சம்மந்தமில்லயாம்......

சோனியா : சாட்டை..... இவர் "கை"யில தான் இது இருக்கும்.... ஆனா வெடி அதுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி தொங்கும்...ரெண்டு பக்கமும் எரியும் வெடி இது...ஆனா இவர் பக்கம் எரியாது மறுபக்கம் தான் எப்பவும் எரியும்......

ராகுல் : ஓலை வெடி... இது குடிசைங்க பக்கம் கிடைக்குற வெடி.... அதனாலேயே இவருக்கு இது பிடிக்கும்... கூழை குடுச்சுட்டு வந்து வெடிச்சா நல்லா இருக்கும்... குடிசை பக்கம் வெடிக்கிறது பாதுகாப்பானது இல்லை தான் இருந்தாலும் பாதுகாப்பை மீறுறது இவருக்கு ரொம்ப பிடிக்கும்.....

மோடி : ராக்கெட்..... உயரப் போகிற வெடி இன்னும் உயர கொண்டு போக போகுதுன்னு இப்ப நினைக்க வச்சாச்சு... ஆனா இது சாய்ஞ்சா சைடுலயும் பாயும்...மேல போயி கலர் கலரா மாறினாலும் அது கொஞ்ச நேரம் தான் மறுபடி கீழ தான் விழுகணும்... இருந்தாலும் வாண வேடிக்கை கலர் கலரா காட்டுற இந்த வெடி கொஞ்சம் பேரை கவர தான் செய்யுது.

கேப்டன் : ரோல் கேப் & துப்பாக்கி..... என்னதான் ரோல் கேப்பை துப்பாக்கியில் மாட்டி பட படன்னு சுட்டாலும் கேப்புல சில கேப் எஸ்கேப் ஆகிடும்....வேணாம்னு தூக்கி போட்டா வேற ஆல் அதை எடுத்துக்குவாங்க... இந்த பிரச்சனைக்கு தான் கேப்டன் டெல்லி போயி புது துப்பாக்கி வாங்கப் போறாராம்.....

சுப்பிரமணிய சாமி : வெங்காய வெடி...எப்பவும் திரி கிள்ளி போடறதால திரியே இல்லாத வெடி தான் இவர் சாய்ஸ்... பத்த வைக்க நெருப்பும் தேவையில்லை எடுத்து அடிச்சாலே அதிரடி தான்..சில சமயம் பலர் கண்ணுல இருந்தும் தண்ணி வரவைக்கும் வெடி...இவர் வெடி அதிரடி... பேச்சு காமெடி.......

No comments:

Post a Comment