Saturday 9 November 2013

மோடி - மன்மோகன் சந்திப்பு

கப்ஸா செய்திகள் ....

மோடி-மன்மோகன் சந்திப்பு.......

புதுதில்லி: இன்று புதுதில்லியில் டிராபிக்கை கட்டுபடுத்த குஜராத் முதல்வர் மோடி விரைந்துள்ளார் சமீப காலமாக மீட்புபணிகளில் ஈடுபட்டு வரும் மோடி தில்லியில் வாழும் குஜராத்திகளை டிராபிக் தொல்லையில் இருந்து காப்பாற்றவே வந்ததாக நமக்கு போன் போட்டு தெரிவித்தார்....

சாலையில் துரிதமாக அவர் செயல் பட்டு கொண்டிருந்த போது அவ்வழியே காரில் பிரதமர் மன்மோகன் வந்துவிட்டார்.. முதலில் என்ன செய்வது என இருவருமே யோசிக்க சட்டென மன்மோகனுக்கு ஜெ& வை.கோ சந்திப்பு ஞாபகம் வர காரில் இருந்து இறங்கினார்....

பிரதமர் சாலையில் இறங்கியதால் மனமிரங்கி மோடி ஓடி சென்று அவருக்கு கை'குலுக்கினார் மன். அவர்கள் அர்த்த நோஞ்சானாக (புஷ்டி வேணாம்)கையைபார்க்க சுதாரித்து மோடி தயாராக வைத்திருந்த தாமரைப்பூ பொக்கேவை நீட்டினார்....

உத்தரகண்ட் வெள்ளத்தில் இடிந்த கோவில்களை கட்டித்தர எண்ணி இருப்பதாகவும் அதற்கு அனுமதிக்கும்படி கேட்டார். அதற்கு அர்த்தமில்லாமல் புன்னகைத்து தலையாட்டி மோடியை குழப்பினார் மோகன்..

வரும் தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிடுவீர்களா? என மோடி கேட்ட போது ஆகாயத்தை பார்த்தும் சட்டைபையில் உள்ள சோனியா புகைபடத்தை எடுத்தும் விரக்தியாக சிரித்தார் மோகன்...

பரிதாபப்பட்ட மோடியும் கண்கலங்கினார். அப்போது துரத்தில் அத்வானியின் கார் வருவதை பார்த்த மோடி அவரை கடுப்பேற்ற மோகனுக்கு மீண்டும் இறுக்கமாக கை குலுக்கினார்...

இது தெரியாத மோகன் சரி விடை பெறுகிறார் போல என்று சரி போய்ட்டு வாங்க என்றார் பிரதமர் பேசிய அதிசயத்தில் பாரதிராஜா படம் போல அசையும் பொருட்கள் எல்லாம் சில வினாடிகள் தில்லியில் freeze ஆனது.....

பேசாத பிரதமரையே பேசவைத்தார் எங்கள் அண்ணன் என மோடியின் அல்லகைகள் கோஷமிட.... தாமரைப்பூ போல மோடி சிரிக்க... அத்வானி முகம் தாமரை போல் சிவக்க கூலாக கார் ஏறி கிளம்பினார் மன்...

கப்ஸா செய்திகளுக்காக புதுதில்லியில் இருந்து ஊத்தவராயன்...

No comments:

Post a Comment