Saturday 9 November 2013

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு

கப்ஸா செய்திகள் ....
இன்றைய கப்ஸா.....

ஸ்டாலின்-ராகுல் சந்திப்பு.....

புதுதில்லி ஜுலை 2: நேற்று ஸ்டாலின் தங்கை கனியின் வெற்றிக்கு ஆதரவளித்த?! காங். தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், செல்லாத ஓட்டு போட்டவரை போட்டு கொடுக்கவும் புதுதில்லி வந்திறங்கினார்....

தளபதியின் வருகையை ஒட்டி கழகத்தினர் கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள், கட்-அவுட்கள், பிளக்ஸ் பேனர்கள் வைத்து புதுதில்லியை புரசை வாக்கம் ஆக்கினார்கள்....

தமிழ்நாடு இல்லத்தை பார்த்து பெருமூச்சு விட்டபடி கடந்து போய் 5நட்சத்திர ஓட்டலில் தங்கினார் ஸ்டாலின். அந்த ஓட்டலில் உணவருந்த சென்ற போது அங்கு ராகுல் தன் வெள்ளைக்கார தோழியுடன் வெள்ளை நிறக்கோழி சாப்பிட்டு கொண்டிருந்தார்....

தளபதியை பார்த்து திடுக்கிட்ட ராகுல் நிலமையை சமாளிக்க. ஓ.. நன்றி சொல்ல இங்கேயே வந்துட்டீங்களா? என்றார். சளைக்காத தளபதி நன்றி சொல்ல முடிவெடுத்தால் கழகத்தினர் கடலையும் தாண்டுவார்கள் எனக்கூறி வைக்கோல் அரிக்க வைத்தார்.....

பேச்சை மாற்ற ராகுல்...... பாத்திங்களா!Mr. ஸ்டாலின்... உத்தர்கண்ட் நிலமை கவலைக்கிடமா இருக்கு என்றார். இந்தியாவில் காங்கிரஸ் நிலமையே கவலைக்கி டமாத்தான் இருக்கு என்று நினைத்து கொண்டு அதை ஆமோதிப்பது போல் சிரித்தார் தளபதி....

சரி நீங்க ஏன் பிரதமர் பதவி வேணாங்கிறீங்க.. அதான் கூ ட பிறந்தவங்க யாரும் போட்டிக்கு இல்லையே என ஏக்கத்துடன் கேட்டார். நமக்கு வெரைட்டியா சாப்பிடணும் அது போதும் அண்ணனோ தம்பியோ இருந்தா அவங்களுக்கு வழி விட்டுருப்பேன் என்றார் ராகுல்....

சட்டென இவருக்கு அண்ணனாவோ இல்ல இவர் நமக்கு தம்பி யாவோ பொறந்திருக்க கூடாதான்னு தளபதி கண்கலங்கினார். ஏன் அழறீங்கன்னு ராகுல் கேட்க....

அன்னையின் பிள்ளைக்கு பதவி காத்திருக்கு தந்தையின் பிள்ளைக்கு காத்திருப்பதே பதவியாக இருக்கு... என்றார் தளபதி. இந்த ரணகளத்திலும் ரைமிங்கா என ராகுல் வியந்து ஆறுதல் கூறினார்...

கண்களை துடைத்து கொண்ட தளபதி சரி என்ன தமிழகத்துல ஒட்டு மொத்தமாக நிர்வாகிகளை மாத்திட்டீங்க என கேட்க ஆமாங்க கோஷ்டி கானம் கூரைய பிய்க்குது பேசாமல் சத்யமூர்த்தி பவனை சரவணபவனா மாத்திடலாம்னு கூட நெனச்சதுண்டு புது இளைஞர் படையை கொண்டுவர ஆசைப் படுறேன் என்ற ராகுல் திடீரென...

ஹேய்... உங்க கட்சிக்கு நீங்க தானே இளைஞரணி தலைவர் என்று கேட்க தளபதி வெட்கத் துடன் தலைகுனிந்து ஆம் என்றார்.nice very nice உங்க பேருக்கு முன்னாடி பட்டபேரு ஒண்ணு.. என்ன சொல்லுவாங்க..

அது ..அது. தளபதின்னு சொல்லுவாங்க...ஆனா நான் சொல்றேன் உண்மையில நீங்க தான் இளையதளபதி.. என்று விஜய்க்கு ஆப்பு வைத்தார் ஸ்டாலின்.

ஓ அவரா! முன்னாடி நம்பள மீட் பண்ணாரு படத்துல பஞ்ச் பேசுற ஆளை கட்சில வச்சா கட்சி பஞ்சராயிடும்னு வேணாம்னு சொல்லிட்டேன்....

ஆமாமா உங்களுக்கு பேசாத ஆள் தான் லாயக்கு என்று தளபதி நினைத்துகொள்ள அடுத்த கோழி ரெடி என தோழி கூவ கட்டி தழுவி விடை பெற்றார்கள் இரு தளபதிகளும்.......

கப்ஸா செய்திகளுக்காக புதுதில்லியில் இருந்து
ஊத்தவராயன்..

No comments:

Post a Comment