Saturday 9 November 2013

ஜெயலலிதா - கனிமொழி

கப்ஸா செய்திகள் ....

கனிமொழி / ஜெயலலிதா சந்திப்பு.....

ஜுன்30 ,நேற்று உழைப்பதற்காக ஊட்டி வந்த கனிமொழி அங்கு ஓய்வுக்காக வந்திருந்த ஜெயலலிதாவை சந்தித்தார்.... கனியின் வருகையை ஒட்டி கொட நாடு பணியாளர்களுக்கு 1 நாள் விடுமுறைவழங்கப்பட்டது....

கனியை வாசலுக்கே வந்து ஜெ. வரவேற்றதாக வதந்திகள் சொல்கிறது...ஜெ கனியை கனிவோடு நலம் விசாரித்ததாகவும் காபி போட்டு குடுத்ததாகவும் கனியே நம்மிடம் தெரிவித்தார்.....

கனி எம்.பி தேர்தலில் வெற்றி பெற்றதை விழுந்து விழுந்து சிரித்து கொண்டே ஜெ. வாழ்த்தியதாக செய்திகுரைப்பு ஒன்று தெரிவிக்கிறது. மானம் நிமித்தமாக (எவ்வளவு நாள் மரியாதைன்னே சொல்றது) நடைபெற்ற இச்சந்திப்பு 15 நிமிடம் நீடித்தது....

விடை பெறும் போது கனிக்கு 3G செல்போன் பரிசளித்தார் ஜெ. பதிலுக்கு கனியும் நெஞ்சுக்கு நீதி புத்தகம் பரிசளித்து கடுப்பு ஏற்றினார். உள்ளுக்குள் கடு கடு வென்றாலும் இருவரும் சிரித்துகொண்டே புகைப்படம் எடுத்து கொண்டனர்.....

கனி வெளியேறிய அடுத்த மைக்ரோ செகண்டில் ஊட்டிக்கு ஷாப்பிங் போயிருந்த சசி கொட நாடு நுழைந்தார். கனி சந்திப்பை தவிர்க்க நான் ஊட்டி போகவில்லை என வாண்ட்டடாக பேட்டி அளித்து அதை ஊர்ஜித படுத்தினார்.....

கனியும் ஜெவும் சந்தித்தது அரசியல் அல்ல என நமது எம்.ஜி.ஆரில் எம்.ஜி.ஆரே எழுதியுள்ளார் என்று முரசொலியில் கலைஞர் எழுதியுள்ளார்....

கப்ஸா செய்திகளுக்காக கொட நாட்டிலிருந்து ஊத்தவராயன்....

3 comments:

  1. நல்ல ஊத்தவராயன் நல்லா​வே ஊத்தியிருக்கிறார்

    ReplyDelete
  2. நன்றி. Rama kuppa....

    ReplyDelete
  3. ஊத்தவராயன் இன்னும் நெறையா ஊத்தனும்

    ReplyDelete