Saturday 9 November 2013

சு.சாமி - நா.சாமி சந்திப்பு

கப்ஸா செய்திகள் ......

சுப்ரமணிய சாமி- நாராயணசாமி சந்திப்பு ...

சென்னை : மீனம்பாக்கம் ஏர்போர்ட்டிற்கு விமானங்களை விட அதிகமாக வந்து போகும் நாராயணசாமி வழக்கம் போல் இன்றும் வருகை புரிந்தார் நமது கப்ஸா நிருபர் தவிர வேறு யாரும் இல்லாதது கண்டு அது ஏன் என நம்மிடமே விசாரித்தார்.....

எப்படி சொன்னாலும் 15நாள்னு சொல்லபோறீங்க இதுக்காக இங்க வேஸ்ட்டா வந்துகிட்டு என்று உண்மையைகூறினோம்.பரவாயில்ல நீங்களாவது வந்திங்களே என்றவரிடம்....

சாரி சார் நாங்களும் உங்களை பாக்க வரலை சுப்பிரமணிய சாமிய பாக்க வந்தோம் அப்பிடின்னோம் உடனே நா.சா டென்ஷன் ஆகி இன்னும் 15 நாள்லன்னு ஆரம்பிக்கும் போது பின்னால இருந்து ஒரு குரல்இன்னும் 15 நாள்ல அமாவாசை  வரும் ஓய்... 

திரும்புனா நம்ம சுனா.பானா அவர பாத்ததும் நம்ம நா.சா வுக்கு முகம் கருத்திருச்சு (இல்லைனா மட்டும்) ரஷ்யாவுல KGB சதி ப ண்றா.. கூடங்குளம் ப்ராஜெக்ட்ல 2லட்சம் கோடி ஊழல் நடத்திட்டா எங்கிட்ட ஆதாரம் இருக்குனு ஆரம்பிச்சார்..

முதல்ல உம்ம கிட்ட ஆதார் கார்டு இருக்கா அப்பிடினு நா.சா கேக்க.... இருந்தது ஆனா CBI காரா சதி பண்ணிட்டா எம்பேர்ல வந்த ஆதார் கார்ட சுப்ரஜித்சிங் அப்படிங்குற பஞ்சாபிக்கு மாத்திட்டா.. அதுக்கும் எங்கிட்ட ஆதாரம் இருக்குன்னார் சு.சா....

பேசாமல் நீங்க ரின் சோப் விளம்பரத்துலநடிக்கலாம் எப்படி பாத்தாலும் ஆதாரம் இருக்கு சேதாரம் இருக்குன்னுட்டு சே...

ஏன் நீங்க ஒயாம15 நாள்னு சொல்றேளே அதுக்கு இது தேவல..

இங்க பாருங்க ஒரு உறைக்குள்ள ஒரு கத்தி தான் இருக்கணும்..

ஓ புரியறது 2 காமெடியன் இருந்தா டிராஜிடியா போய்டும்னு சொல்லவறேள் அதானே..

நாடாளுமன்ற தேர்தலில் இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்..

ஏன் இப்பவே சொல்றனே வர்ற எலக்‌ஷன்ல நீங்க ஜெயிக்க போறதே இல்லை...

பாக்கலாமா பாக்கலாமா இன்னும் 15நாள்ல இதுக்கு பதிலடி தர்றேன்.

இப்ப ஆதாரமே இல்லாம அடிச்சு சொல்றேன் 15 நாள் கழிச்சும் நீர் இதத்தான் சொல்லப்போறேள்..

டென்ஷனான நா.சா திரும்ப திரும்ப பேசற நீ ஸ்டைலில் கிளம்ப...

நம்ப சுனா.பானா கெத்தா கிளம்பிட்டாருய்யா... கிளம்பிட்டாரு....

கப்ஸா செய்திகளுக்காக
மீனம்பாக்கத்தில் இருந்து
ஊத்தவராயன்....

No comments:

Post a Comment