Monday 11 November 2013

தீனா கொரலு

திடீர் குப்பம் தீனா...

இவரு குப்பத்து ராஜா...அநியாயத்துக்கு குரல் கொடுப்பார் (இதில் சிலேடை ஒளிந்து இருக்கிறது) மக்களுக்கு எதுனா செய்யணும்ன்னு ஆசை.... பஸ்ல எழுதியிருக்குறத பாத்தும்... காலைல டிவியில் பாப்யா பேசறதை ( சாலமன் பாப்பையா ) கேட்டும் திருக்குறள் மேல ஆசை வந்துருச்சு.... ரொம்ப நாளா இவரு அத எழுதினதே பாப்யா தான் நினைச்சுகிட்டு இருந்தாரு... திருவள்ளுவர்ன்னு தெரிஞ்சதும் இப்ப வெள்ளிக்கிழமை தோறும் வள்ளுவர் கோட்டம் போக ஆரம்பிச்சிட்டாரு...( அது கோயிலாம் ) படிக்காத பாமர ஜனத்துக்கு இவர் அப்ப அப்ப தினம் ஒரு திருக்குறள் சொல்ல முடிவெடுத்து இன்னைல இருந்து செயல் படுத்த ஆரம்பிச்சுட்டாரு.. சென்னைத் தமிழில் இவரின் குறள் சேவை ஆரம்பம்... தினமும் வரமாட்டாரு அப்ப அப்ப தான் வருவாரு இனி....

                                    தெனம் ஒரு "தீனா கொரலு"....

வண்க்கம்பா... இன்னைக்கு இன்னா கர்த்துன்னா.... ஒருத்தரு உனக்கு இன்னா டார்ச்சர் இஸ்துவுட்டாலும் சொம்மா பேஜார் பண்ணிக்கினே இர்ந்தாலும்... நம்க்கு ஒருதபா இஸ்சான்ஸ் கெட்ச்சா அல்லாத்தையும் மன்சுல வெச்சுக்காம ... வுடு வாத்யாரே நான் அல்லாத்தையும் மர்ந்துட்டேன்.....இப்ப உன்க்கு இன்னா எல்ப் வோணும் சொல்லு... நான் செய்றன்பான்னு சொல்லி அப்டியே தோள்ல கைப் போட்டேன்னு வையி.. அந்தாளு அப்டியே மெர்சலாயிடுவான்... சோக்கா சொல்லிருக்குபா நம்ம  "தல" ( திருவள்ளுவரை தான் "தல" என்பார் தீனா)


இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.


தீனா "கொரலு"....

வண்க்கம்ப்பா இன்னிக்கு இன்னா கர்த்துன்னா....

துட்டு வச்சினிர்க்கறவங்கோ பொறத்தியார்க்கு ஒதவி செய்வாங்கோ.... இல்ல நான் கேக்கறன்....அவன் ஒண்டி தான்  இல்லாத்தவங்களுக்கு ஒத்வி செய்பானா? துட்டு ஏதும் இல்லாத உனுக்கும் அந்த பேரு வரும் எப்டின்னு கேக்றியா? 

நல்ல சிர்ச்ச மூஞ்சோட நல்ல மன்சோட கேக்குற மன்சன் குஷியாவுற மேறி நாலு நல்ல வார்த்த பேஸ்ற பாரு அப்ப நீ தான்பா பண்க்காரன்.... நீ அப்டி பேஸ்றது எப்டியாப்பட்டது தெர்யுமா ! மன்சு நெர்யா சந்தோஸ்த்தோட வள்ளலுங்கோ அள்ளிஅள்ளி கொடுப்பாங்க பாரு... 

அத்த விட நீ பேஸ்ற நாலு நல்ல வார்த்த தான் பெர்சாம்... சுர்க்கமா பிரியற மேறி சொன்னா.. 

நல்லா அள்ளி தர்றவன வுட நல்லதா 

சொல்லினு இர்க்கவன் தான் வள்ளலு... 

சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"....


அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து

இன்சொலன் ஆகப்பெறின்.

No comments:

Post a Comment