Monday 11 November 2013

வாலிக்கு.....

நீ ஸ்ரீரங்கத்து தேவதை...
உன் சிறப்புக்கு ஓர் கவிதை...

எதுகை உன் பதாகை....
மோனை உன் சேனை...

சீர் பிழிந்து தமிழ்ச் சாறும் எடுப்பாய்... 
சினிமாவிற்கு அதை ஊ(மா)ற்றிக் கொடுப்பாய்....

உனக்கு வயது ஏற ஏற வாலிபமும் ஏறியது....
உன் வார்த்தை வரிகளில் அது இளமையாய் மாறியது.

உன் பாடலில் துள்ளலும் இருக்கும்... சிறு இழையாய் 
எள்ளலும் இருக்கும்.... காமத்தின் விள்ளலும் இருக்கும்...

பல இசை ரதங்களுக்கு நீயே சாரதியானாய்... 
திரை இசைக்கென பிறந்த பாரதியானாய்..

உன் தத்துவப் பாட்டில் காதலும் வரும்...
 உன் காதல் பாட்டில் சில தத்துவமும் வரும்...

பாமரனுக்கும் பாட்டெழுதிய பாமரமே... 
தமிழ் உள்ளங்களில் வியாபித்து இருக்கும் பராபரமே...

நீ நேர் நேர் தேமா என்றால் தமிழரங்கம் குலுங்கும்...
பார் பார் பாமா என்றால் திரையரங்கம் அதிரும்..

பெரிய தத்துவங்களை வார்த்தையில் சுருக்கினாய்..
உன் கவிப் புலமையால் தமிழ் பெருக்கினாய்..

தமிழுக்கு எதிரே நின்று அதன் பலத்தை நீ பெற்றுக் கொண்டாய்... 
ஏனெனில் நீ வாலியல்லவா...

உன் வார்த்தைகளோடு நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..... 
நீ இன்றும் வாழ்வாய் , என்றும் வாழ்வாய்...

வாலி நீ வாழி....

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அய்யா....

கவிஞர் வாலிக்கு..! அவரது பாணியில் என் வாழ்த்து...

நீ ஸ்ரீரங்கத்து தேவதை...
உன் சிறப்புக்கு ஓர் கவிதை...

எதுகை உன் பதாகை....
மோனை உன் சேனை...

நீ சீர் பிழிந்து தமிழ்ச் சாறையும் எடுப்பாய்... 
சினிமாவிற்கு அதை ஊ(மா)ற்றியும் கொடுப்பாய்....

உனக்கு வயது ஏற ஏற வாலிபமும் ஏறியது....
உன் வார்த்தை வரிகளில் அது இளமையாய் மாறியது.

உன் பாடலில் துள்ளலும் இருக்கும்... சிறு இழையாய் 
எள்ளலும் இருக்கும்.... காமத்தின் விள்ளலும் இருக்கும்...

பல இசை ரதங்களுக்கு நீயே சாரதியானாய்... 
திரை இசைக்கென பிறந்த பாரதியானாய்..

உன் தத்துவப் பாட்டில் காதலும் வரும்...
உன் காதல் பாட்டில் சில தத்துவமும் வரும்...

பாமரனுக்கும் பாட்டெழுதிய பாமரமே... 
வெண்தாடியில் வீசினாய் சாமரமே....

தமிழ்ப் பூத்துக் குலுங்கும் பூமரமே...
ரசிக உள்ளங்களில் வியாபித்து இருக்கும் பராபரமே...

நீ நேர் நேர் தேமா என்றால் தமிழரங்கம் குலுங்கும்...
பார் பார் பாமா என்றால் திரையரங்கம் அதிரும்..

பெரிய தத்துவங்களை வார்த்தையில் சுருக்கினாய்..
உன் கவிப் புலமையால் தமிழ் பெருக்கினாய்..

தமிழுக்கு எதிரே நின்று அதன் பலத்தை நீ பெற்றுக் கொண்டாய்... 
ஏனெனில் நீ வாலியல்லவா...

உன் வார்த்தைகளோடு நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..... 
நீ இன்றும் வாழ்வாய் , என்றும் வாழ்வாய்...

வாலி நீ வாழி....

No comments:

Post a Comment