Monday 23 May 2016

தேவதை பரிமாறிய விருந்து - 1

மியாமியில் இன்னிக்கு நைட் டின்னர் ஹுட்டர்ஸ் ரெஸ்டாரெண்ட் போகப்போறோம்னு அழைத்துப் போகும் நண்பர் சொன்னதை மத்தவங்க கிட்ட சொன்ன போது ஹுட்டரா!அப்படின்னு ஒரு விஷமச் சிரிப்பு சிரிச்சாங்க.. அப்போ அதுக்கு அர்த்தம் புரியலை.ஏன் அங்க அப்படி என்னான்னு? கேட்டதுக்கு அது ஒண்ணுமில்லை அங்க போனா உங்களுக்கே புரியும் என்றார்கள் விஷமம் கொஞ்சமும் குறையாது. மாலை மங்காத 7 மணிக்கு (இங்க இரவு 8மணிக்கு மேல தான் இருட்டவே தொடங்கும்) காரில் நண்பர் வந்தார் கிளம்பினோம்.

35 நிமிட கார் பயணம் ஹுட்டர்ஸ் வந்தது.. நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் ஒரு ஃபுட் காம்ப்ளக்சில் சுற்றிலும் கார்கள் புடை சூழ பல கடைகளுக்கு நடுவே இருந்தது.. பல கடைகளை விட இங்கு தான் பொங்கி வழியும் பீர் போல கூட்டம் அள்ளியது.. அங்கு வாசலில் இருந்த  வரவேற்பாளினியைக் கண்டதும் ஒரு கணம் மூச்சு விட மறந்தோம்.!மல்லையாவின் கிங்ஃபிஷர் காலண்டரிலிருந்து அப்படியே இறங்கி வந்து அமர்ந்திருந்தார்..  எங்களை வசீகரிக்கும் சிரிப்புடன் வரவேற்றவர் எத்தனை பேர் வந்துள்ளீர்கள் எனக்கேட்டு அதை கம்ப்யூட்டரில் பதிவேற்றி 20 நிமிடம் டேபிளுக்கு காத்திருக்க வேண்டும் என்றார்.. அவர் அப்படி தலை சாய்த்து சொன்ன விதத்திற்கு 20 ஆண்டுகள் கூட காத்திருக்கலாம். 

சரி எனச் சொல்லிவிட்டு மெல்ல பார்வையைச் சுழல விட்டேன் அந்த ரெஸ்டாரெண்ட் முழுவதும் 80 டிவிக்கள் சுவற்றில் மாட்டப்பட்டு இருந்தன.. அன்றைய தினம் அமெரிக்க கூடைப் பந்து லீகில் உள்ளூர் அணியான மியாமி ஹீட் ஆடுவதால் கடையில் கூட்டம் அதிகம்.. எங்கும் உற்சாகம் கரவொலி என அந்த இடமே ஒரு மைதானம் போல இருந்தது. ஹுட்டர்ஸ் கடை சிக்கன் இரால் உணவுகளுக்கு புகழ் பெற்றது.. மது வகைகளும் இங்கு உண்டு.. ஆனால் விலை ரொம்ப அதிகம்.

(நம்மைப் போன்றவர்களுக்கு) முழுக்க முழுக்க பெண்கள் தான் ரிசப்ஷனிஸ்ட், பார் வெண்டர், சப்ளையர் எல்லாமே இவர்கள் அனைவருமே மாடல்கள் என்று அழைக்கப்படுகின்றனர். எங்கள் நேரம் வரும் வரை வாசலில் ரிசப்ஷன் மாடலையும் அவ்வப்போது டிவி மேட்சையும் பார்த்துக் கொண்டிருந்த போது.. ஹாய் கைஸ் யுவர் டேபிள் இஸ் ரெடி என தன் இனிமையான பிளாக் ஃபாரஸ்ட் வெல்வெட் கேக் குரலில் மொழிந்தார். கதவை திறந்து உள்ளே சென்றோம்.. அடடா.. கிங்ஃபிஷர் நூற்றாண்டு காலண்டர் போடும் அளவிற்கு குவியல் குவியலாய் மாடல் அழகிகள்..

ஹாய் அயாம் கிம்பர்லி யுவர் டேபிள் ஸ்டூவர்ட் என மெல்ல கண் சிமிட்டி சகஜமாக கை கோர்த்து எங்களை டேபிளுக்கு கூட்டிச் சென்றபோது.. மெல்லக் கிள்ளிப் பார்த்தேன்! (என் கையைத் தான்) வலித்தது.. நிஜம் தான்.. மனமெல்லாம் இனித்தது.. பெப்பர் ஷிரிம்ப் சில்லி சிக்கன் விங்ஸ், மோர் ஸ்பைசி என ஆர்டர் செய்த போது சிரித்துக் கொண்டே ஒரு 18+ கமெண்ட் அடித்தாள் கிம்பர்லி. அது இங்கு வேண்டாமே..

நான் ஆம்லேட் கிடைக்குமா எனக் கேட்டது அங்கிருந்த சல சலப்பில் அவள் காதில் விழவில்லை.. சட்டென்று என் அருகில் வந்து தோளில் கை போட்டு காதருகில் என்ன என்றாள்.. மெல்லிய லிப் கிளாஸ் மிண்ட் வாசமும் ஏதோ ஒரு லேடி லைம் மஸ்க் பெர்ஃப்யூமின் வாசமும் இணைந்து பரவ அவளது தங்க நிற கூந்தல் மென் பட்டாக காதில் உரச ஆம்லேட் கிடைக்குமா என்றேன் தமிழில்...

வரும்...

No comments:

Post a Comment