Sunday 14 May 2017

எர்த்தோ கிரகம்

மாறன் வெர்ஷன் ஹண்ட்ரட் என்றாள் மலர்.. மலர் வெர்ஷன் 67 என்றான் மாறன்.. என்ன இப்படி இளைத்துவிட்டாய் என் நினைவுகளோ.? இல்லை நம் கிரகத்தைப் பற்றிய சில ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தேன் சாப்பிடும் எண்ணம் வரவில்லை என்றான் மாறன்.. வானில் கிழக்கே ப்ளோசரண்ட் பச்சையில் உதித்தது முக்கோண நிலா.. நம் கிரகத்தின் நிலா எவ்வளவு அழகு பார்த்தாயா என்றாள் மலர்.. ஆம் அது குறித்தும் ஆய்வு செய்கிறேன் என்றான்.

எப்போதும் ஆய்வு தானா என் நினைவு வருவதில்லையா பொய் கோபத்துடன் சிணுங்கினாள் மலர். கேலியாக சிரித்தான் மாறன்.. பூமி அழிந்து ஒன்றரை மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டது மலர் நீ அந்த யுகத்துப் பெண்களைப் போலவே பேசுகிறாய் ஆச்சரியம் தான் என்றான்.. ஓ இதுவும் உங்கள் ஆராய்ச்சியில் ஒன்றா.! பெண்கள் எப்போதும் பெண்கள் தானே என்றாள் இப்போது மெய் கோபத்துடன் 

அதுதான் அதிசயிக்கிறேன் சூரியப்பாதையில் பூமி வெடித்து சிதறி இப்போது அப்படி ஒரு கிரகமே இல்லை பூமியில் இருந்து விண்வெளிக்கு தூக்கியடிக்கப்பட்ட படிமங்கள் சூரியன் தன் பாதையில் இன்னும் பின்னால் நகர்ந்து கொண்டபோது அதிலிருந்து பிய்ந்த இன்னொரு துண்டத்தில் வந்து படிந்து கொள்ள கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆண்டுகள் எரிமலையும் மழையும் மழையாக பொழிந்து உருவானதே இக்கிரகம் இதிலும் சிறு சிறு உயிரினங்கள் 

தோன்றி படிப்படியாக மனிதர்கள் போல நாம் பரிணாமம் எடுக்க அரை மில்லியன் வருடங்கள் ஆகியிருக்கிறது ஆனால் நீ மட்டும் அந்த பூமியின் குணத்தை மாறாது வைத்திருப்பது ஆச்சரியம் என்றான் இதிலென்ன ஆச்சரியம்.. சரி கேத்தி குடிக்கிறாயா என்றாள் மலர்.. வேண்டாம் பசியில்லை வந்தால் நினைத்துக் கொள்கிறேன்.. நீ நிறைய ஆச்சர்யப்பட வைக்கிறாய் மலர் என்றான் திரும்பவும்.. எப்படி சொல் என்றாள் அருகில் இருந்த சேம்பரில் சாய்ந்து அமர்ந்தபடி.

நம் எர்த்தோ யுகத்து மனிதர்கள் பூமியின் படிமங்களில் இருந்து தோன்றியதால் தான் நம் கிரகத்திற்கு எர்த்தோ எனப்பெயரிடப் பட்டது நம் கிரகத்தின் கடவுள் எர்த்ஜியஸ் தான் இப்பெயரை சூட்டினார் நாம் 16 அறிவுகள் படைத்தவர்கள்.. நமக்கு வாயு வேகம் மனோ வேகம் தெரியும்.. மனதில் நினைத்தவுடன் இந்த கிரகத்தின் எந்த மூலைக்கும் நாம் போகலாம் உடலை விட்டு விட்டு உயிர் மட்டும் வாக்கிங் போகலாம் நம் விரல்தொட்டு கரியை வைரமாக்கலாம்.



நமக்கு பசிக்காது ஆனால் உணவு உண்ணும் உணர்வு வரும்.. நமக்கு பிடித்த உணவை நினைத்துக் கொண்டாலே அதை சாப்பிட்ட உணர்வு நமக்குள் தோன்றி பசி மறைந்துவிடும்.. நாம் நினைத்தால் மழை பெய்யும் நினைத்தால் வெயிலடிக்கும்.. நாம் கடலில் நடக்கலாம் ஆகாயத்தில் பறக்கலாம்.. ஆனால் இந்த சக்தி உள்ளவர்களைத் தான் பூமியில் கடவுள் என்றார்களே என்றாள் மலர். ஆம் கடவுளை அறியும் சூட்சமத்தை மட்டும் மனிதர்கள் தேடினர்.

அவர்களுக்குள் இருக்கும் சக்தியே கடவுள் என்பதை அறிந்து கொள்வதற்குள் இனம் மதம் ஜாதி என அடித்துக் கொண்டே ஒழிந்தார்கள்.. இன்னும் சொச்சம் பேருக்கு அந்த ஜீன் குணம் இருக்கிறது என்பதை நம் கிரக தலைவர் அறிந்து தான் அதை களை எடுக்க சொல்லியிருக்கிறார்.. அதில் சிலரை தேர்ந்தெடுத்து இக்கிரகத்தின் இன்னொரு நிலவான சந்திராஸில் அடைத்து வைத்து இருக்கிறோம் என்ற போது திடுக்கிட்டு எழுந்தாள் மலர்.

வடக்கு திசையில் வானில் மூன்று சூரியன்கள் எழுந்தன.. பார்த்தாயா நிலவு உதிக்கும் போது வந்தாய் இதோ விடிந்துவிட்டது.. இதுவே கடைசி முறை மலர் இனி இப்படி வராதே என்றான் கெஞ்சலாக.. முகத்தை மறைத்து குலுங்கி அழுதாள் மலர்.. மனிதர்களின் ஜீன் குணம் கொண்டவர்களில் நானும் ஒருத்தி என்பதை சொன்னவனே நீ தானே என்றாள் கதறலாக.. பின் என்ன செய்ய மலர் கிரகத் துரோகம் தவறல்லவா அதுவும் இவ்வளவு சக்தி பெற்ற மனிதர்கள் நாமே 

தவறு செய்யலாமா.. நீ சந்திராசுக்கு உடனே திரும்பிப் போ.. சீக்கிரம் என் ஆராய்ச்சியில் மனித ஜீன்களின் குணத்தை அழிக்கும் மருந்தை கண்டுபிடித்துவிடுவேன்.. அதன் பின் உனக்கு விடுதலை தான்.. என்றான் ஆறுதலாக.. அவன் புறங்கை பற்றி முத்தமிட்டு பை.. மாறன் வருகிறேன் என்று வானில் பறந்தது மலரின் உயிர்.. 4 இலட்சம் மைல் தொலைவில் இருந்த சந்திராசில் கிடந்த மலரின் உடல் சலனம் இன்றி கிடந்ததை தன் மனக்கண்ணால் பார்த்து மாறன் அழுதான். ஆம் அந்த விநாடியில் மாறனுக்குள் இருந்த மனித ஜீன்கள் விழித்துக் கொண்டன.!

No comments:

Post a Comment