Sunday 14 May 2017

தெருப்பாவை

#தெருப்பாவை


வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் வங்கிக்கு தினம் சென்று


நொந்து வரிசைகளில் நின்று கேளீரோ நம் பணத்தை


பைய அதனை இல்லையென்று காசாளரவர் கூற


சோறின்றி பாலின்றி அரைவயிற்று பட்டினியில் நாலு நாளாகி


நீராடி நேராக வந்து காத்திருந்து சலான் எழுதியளித்து


முடிந்தவரை பணம் கேட்டோம் அய்யா வென அழுதோம்


தீர்ந்த பணத்தை சென்று கேட்டோம் ஐயா பிச்சை இடுவீர்


எனக் கேட்காமல் கேட்டு கைகட்டி வாய் பொத்தி நின்று


ஏதேனும் செய்யுமாறு கேட்டால் எண்ணித் தருவாரோ நம் ரூபாய்.!!!


#நாலாயிர_ரூபாய்க்கு_பணப்பஞ்சம்ம்


வங்கியில் நிற்கவிட்ட உத்தமன் பேர் மோடி 


நாம் நம் தேவைக்குச் சலான் எழுதி நீட்டினால்

தீங்கின்றி தருகிறார் கத்தரிப்பூ நோட்டொன்று
சங்கொலிக்கும் ஓசை அது உடனே கேட்டுடிமே 
அந்தத் தாள் நம்மிடம் வந்த கணம்.. பூக்கடை 
முதல் கறிக்கடை வரை கதறியழுது தேம்பாதே 
அடக்கிருந்த நீர்த்த விழிகள் பார்த்து இரங்கி
வாங்கி சேஞ்ச்  தருவாரே வள்ளல் பெரும் மக்கள்

நீங்காத செல்வம் வேண்டாம் மாற்ற முடியுமா எம்ரூபாய்.

No comments:

Post a Comment