Sunday 14 May 2017

JPL

தருண் தவமணி தன் கை முஷ்டிகளை மடக்கி அவன் இன்னொரு உள்ளங்கைகளில் மாறி மாறி குத்திக்கொண்டான்.. "டாமிட் என்னடா சொல்ற நமக்கு அந்த  டீம் ஏலத்தில் கிடைக்கலியா!? என்றான் அலறலாக.. "ஆமா பாஸ் எல்லாம் பெரிய கைகள் நம்மால ஒண்ணும் பண்ண முடியலை" என்றான் உதவியாளன் ரகு. தருண் தவமணி மதுரையைச் சேர்ந்தவன் ஆனால் வாழ்வது..

மும்பையில் அவனது தந்தை தவமணி மதுரையில் பெரும் நிலக்கிழார் அவனியாபுரம் தொடங்கி அருப்புக்கோட்டை வரை பல ஆயிரம் ஏக்கர்கள் அவர்களுக்கு சொந்தம் தவமணியின் தந்தை வெள்ளைச் சாமி ஜமீன்தார் வழி வந்தவர்.. தருண் மிகப் பெரிய கோடீஸ்வரன் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில்.. லண்டனில் மேற்படிப்பு படித்தவன்.. உலகெங்கும் சுற்றிவருபவன்.

ஒருமுறை ஒரு விழாவில்.. கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரியுடன் ஒரு சந்திப்பில் நெருக்கமானான்.. அதன் பின் பிற இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் எல்லாம் அவனுக்கு அறிமுகமாக அவர்களது விளம்பர பொறுப்புகளை நிர்வாகிக்கும் காண்டிராக்ட் கிடைக்க மும்பைக்கு குடியேறினான் வருமானம் வானத்தை பிய்த்துக் கொண்டு கொட்டியது.. இப்படிப் பட்ட நிலையில் தான் ஜே.பி.எல் எனும் புதிய லீக் ஒன்றிற்காக ஒரு ஏலம் நடைபெற்றது.

அதில் தருணும் கலந்து கொண்டான் ஜே.பி.எல் எனும் அந்த லீகில் மும்பை டீமை சச்சினும், டெல்லி டீமை சேவாக்கும், கொல்கத்தாவை கங்கூலியும், குஜராத்தை ரெய்னாவும், பெங்களூரை கோஹ்லியும் எடுக்க ஜார்கண்ட்டை சேர்ந்த தோனிக்கு சென்னை டீம் போனது.. அந்த சென்னைக்கு தான் தருணும் குறி வைத்து இருந்தான்.. இப்ப எந்த டீம் தாண்டா இருக்கு என்றான் கோபத்துடன்.. சிக்கிம் மட்டும் தான் சார் என்றான் ரகு.!

"எவ்வளோ சொல்றாய்ங்க" கோபத்தில் மதுரை வழக்கு வாயில் இருந்து உதிர்ந்தது.. அட போங்க பாஸ் அந்த ஊர் டீமுக்கு நாம பார்த்து கொடுக்கிறது தான் காசு என்றான் ரகு.. ஒரு நிமிடம் யோசித்தவன் தீர்க்கமாகச் சொன்னான் "அப்போ தூக்கு" என்றான் தருண்.. அந்த வருட லீக்கில் சிக்கிம் தான் சாம்பியன் ஆகி வரலாறு படைத்தது.. ஆம் அந்த ஜே.பி.எல்லில் சிக்கிம் அணிக்காக கலந்து கொண்ட அத்தனை காளைகளும் தமிழகத்தை சேர்ந்தவை.

ஜே.பி.எல். = ஜல்லிக்கட்டு ப்ரிமியர் லீக்..

No comments:

Post a Comment