Tuesday 24 December 2013

கற்றுக்கறவைக் கணங்கள்...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 11ஆம் நாள் பாடல்.....


கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே

புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.



ஆண்டாளு உரை:


கறவ பசுவோட கன்னுங்களும் கூட்ட கூட்டமா இர்க்க சொல்லோ அங்கியே பால கர்ந்துக்கினு இர்ப்பாங்கோ.. அதே நேர்த்துல எவுனாவுது ராங் காட்னா அவுனயும் போயி வூடுகட்டி அட்ச்சி ஜெயிச்சுனு வருவாங்கோ....

ஏன்னா இவுங்க அல்லாரும் நம்ம கோபால்ரு கொலத்துகாரங்கோ, அப்டியாப்பட்ட கொற இல்லாத கொல்த்துல பொர்ந்த தங்க கொடி மேறி இர்க்குற பொண்ணே ! புத்துக்குள்ள இர்க்குற நாகொம் கணக்கா மர்ஞ்சி இருக்குற இட்ப்பு ஒன்க்கு! 

காட்டாண்ட ஆடுகினு இர்க்குதே அயகான மயிலு அத்தும் உன்ன மேறியேவா இர்க்குமாம் ! எயுந்து வா கண்ணு! உன் தோஸ்த்துங்க அல்லாரும் உன் வூட்டுக்குள்ள வந்து மின்னாடி இர்க்குற வர்ண்டால நின்னு கார்மேகொம் கணக்கா இர்க்குற கண்ணன் பேர பாடிகினு இர்க்கோம்...

சீமான்பெத்த செல்வுமே,செல்லமான பொண்ணே...எதுக்யுமே அசஞ்சி கொட்க்காம இன்னாத்துக்காக இப்டி தூங்கினுக்குற? இதுக்கு இன்னாம்மே மீனிங்கு? சொல்லு கண்ணு.



எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளக்கி பாக்கலாம்.... வர்ட்டா.....



No comments:

Post a Comment