Friday 27 December 2013

புள்ளின்வாய்...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்

குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே

பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

வண்டு வந்து குந்தினிக்குதே தாமிரப்பூவு அதுங்கணக்கா கண்ணு வச்சுக்கிற பொண்ணே! நம்ம பெர்மாளு இர்க்காரே அவரு பர்வை மேறி வேசங்கட்டிகினு அரக்கனா வந்து பேஜார் காட்ன பகாசுரன் வாய பொள்ந்தவரு;

அத்த விட பெர்ய பிஸ்தா ராபணனோட பத்து தலியையும் கிள்ளி எர்ஞ்சு கில்லியா நின்னவரு; அப்டியா பட்டவரோட பெர்மய பாடிக்கினே பொண்ணுங்க அல்லாரும் விர்தம் இர்க்குற இட்த்துக்கு பூட்ச்சிங்க ; 

வான்த்துல வெள்ளி முள்ச்சிடுச்சி ! விசாளன் மர்ஞ்சிடுச்சி ! பர்வைங்க அல்லாம் மர்த்துல இர்ந்து கொரலுடுதுங்கோ ! இந்த மார்களி மாசம் நல்ல நாள்ல நீ எங்க அல்லாரோடவும் சேந்து குளுர குளுர குளிக்றத வுட்டுட்டு தூங்குறா மேறி ஆக்ட் குடுத்துனு இர்க்கியா பொண்ணே!


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல.... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா....

 

No comments:

Post a Comment