Tuesday 24 December 2013

வையத்து வாழ்வீர்காள்...

திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 2 ஆம் நாள் பாடல்.....


வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்

செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.



ஆண்டாளு உரை : 


இந்த நெல்த்து மேல்ய வாயுற அல்லாரும் கேளுங்கோ.! பொண்ணுங்க அல்லாமே விர்தம் இர்க்க சொல்லோ இன்னா வோணுமோ அத்த கேளுங்கோ.. பால் கடல்ல தூங்கிக்கினு கீராரே பெரிவரு அவுரு கால் அடிய பாடுவோம்...

 விர்தம் இர்க்க சொல்லோ நெய்யி துண்ணமாட்யோம், பால குடிக்க மாட்யோம், கார்த்தால எயுந்து குள்ச்சுடுவோம்: மைய எட்த்து கண்ல பூஸ்மாட்யோம், கொண்டியில பூவ வச்சிக்க மாட்யோம், இன்னாத்த செய்ய கூடாத்தோ அத்த செய்ய மாட்யோம், 

ஆரப்பத்தியும் வம்ப்பா பேஸ்மாட்யோம், கோள் மூட்டினு இர்க்க மாட்யோம்,வய்சுல பெர்ய மன்சங்கள மதிச்சு அவுங்களுக்கு இன்னா தேவயோ அத்த கொடுப்பொம், தர்மமா கேட்னு வர்ற இல்லாதவங்களுக்கு இல்லின்னு சொல்லாம முட்ஞ்ச அள்வுக்கு கொடுப்பொம்... 

இதெல்லாம் நாம செய்ற புண்யத்துல போயி சேந்துடும்ன்னு நென்ச்சு சந்தோஸ்மா இர்ந்துடுவோம்...

No comments:

Post a Comment