Monday 30 December 2013

நாயகனாய் நின்ற....


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....



மார்கழி 16 ஆம் நாள் பாடல்...



நாயகனாய்நின்ற நந்தகோ பன்உடைய

கோயில்காப் பானே கொடித்தோன்றும்

தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ

வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.



ஆண்டாளு உரை : 


அல்லா உலகத்துக்கும் தலிவிரா இர்க்குற நந்தகோபரோட்ய மாளிக கணக்கா இர்க்க பெர்ய வூட்ட காத்துகினு இர்ப்பவரே ! பறந்துகினு கீற கொடி தோர்ணமா இர்க்குற வாசலயும் காத்துகினு இர்ப்பவரே ! 

அம்மாம் அயகாகீற கதவொட தாப்பாள தொற! பாலு கறக்குற கொலத்துல பொர்ந்த சின்னஞ்சிறுசுங்க கேக்குறோம்....நாங்கோ இர்க்குற விர்தத்துக்கு மோளம் ஒன்யு சத்யமா தர்ராதா நேத்திக்கு சொன்னாரு மாய கண்ணரு... மணிவண்ணரு...

அவுரு தூங்கிகினு இர்க்க சொல்லோ அவுர எயுப்ப பாட்டு பாடிகினு நாங்கோ உள்ளாறயும் வெள்யேயும் சுத்தபத்தமா இர்ந்துகினு இங்க வந்துக்கிறோம்..இந்த நல்ல கார்யத்த வோணாம்ன்னு  சொல்லாம வாசக்கதவோட நெலயில சேத்து போட்னு இர்க்குற தாப்பாள தொர்ந்து வுடு கண்ணு..


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா...




1 comment:

  1. சென்னை பாஷை கேட்கும் போது புரிவது மாதிரி படிக்கும் போது புரிவது கொஞ்சம் கஷ்டமா இருக்கு..... :)

    ReplyDelete