Monday 23 December 2013

மாயனை மன்னு

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....


 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் வந்து மார்களி பாட்ட எட்த்து வுட்றேன்.பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எதும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....

மார்கழி 5 ஆம் நாள் பாடல்......


மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

அவ்ரு மாயமான்வரு... நெல்ச்சு நிக்கும் வட மதுர ஊர்ல பொர்ந்தவரு...கலீஜ் இல்லாம க்ளீனா ஜபர்தஸ்தா ஓட்ற யமுன ஆத்தை கட்ந்தபரு... ஆயருபாடில எசோதா அம்மாவுக்கு மவனா வளந்து அந்த ஆயரு கொல்த்துக்கே அயகான கொல விள்க்கு ஆனபரு... தான் பெத்த தாய் வய்த்த பரிசுத்தமாக்குனபரு... எசோதாம்மாவால கய்த்தால கட்டி போடபட்ட தாமோதரரு...அவுரை நாமொ உட்ம்பு,மன்சு, அல்லாத்தயும் சுத்தமா வச்சிகினி அத்த விட சுத்தமேன பூவ எட்தாந்து அவரு பேர சொல்லி கும்பிட்டுக்குவோம்... அவர்ரோட பெர்மைய பாடிகினு இருப்போம்... மன்சால அவரோட தன்மியான கொண்த்த நின்ச்சுக்குவோம்.. இப்டி அல்லாம் செய்ய சொல்லோ நாம யார்க்கோசரமாவது மின்னாடி செஞ்ச தப்பும் இனிமேட்டி அத்து மேறி செஞ்சாலும் கூட அத்தெல்லாம் நெர்ப்புல போட்ட பஞ்சு கணக்கா பொசுக்குன்னு பொஸ்ங்கி போய்டும்..அதனால அவரு கீர்த்திய அவரு பெர்மய பேசிகினே இருப்போம் கண்ணுங்களா....

எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா...


No comments:

Post a Comment