Thursday 26 December 2013

கனைத்து இளம்....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 12 ஆம் நாள் பாடல்.....


கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்

பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்

அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.



ஆண்டாளு உரை :


காலங்காத்தால வுட்ல இர்க்குற எரும் மாடுங்க அல்லாம் அத்தோட குட்டிங்கள 

நென்ச்சிகினு அப்டியே பீல் ஆகி குரல் கொட்க்க சொல்லோ.. அப்டியே பாசத்துல்ல மெல்ட் 

ஆயி அதுங்கோ மடில இர்ந்து பால் சொர்ந்து வூடு முயுக்கா அப்டியே காவா கண்க்கா ஓடி 

சேறா ஆய்ட்ச்சி... இப்டியாப்பட்ட மாடுங்க நெர்ய வச்சினு இர்க்க பெர்ய சீமானோட 

தங்காச்சியே.... மார்களி மாசொம் கொட்டினு இர்க்குற பனி அப்டியே தலயில உயுந்து எங்க 

மண்ட மேல்யே ஒட்டினுருக்க உன் வூட்டாண்ட வந்து நின்னுக்கினு இர்க்குறோம்... பத்து 

தல இராவ்ணன் மேல காண்டாகி அவுன குளோஸ் பண்ண இராமர நெஞ்சில நென்ச்சுக்கினு 

குஜாலா பாட்டு எட்த்துவுட்றோம்... கதவ தொற கண்ணு ! இம்மா நேரமா தூங்கினு இர்க்க? 

உன் வூட்டாண்ட நின்னு நாங்க குரல் உடறது அக்கம் பக்கம் அல்லா வூட்டுக்கும் தெர்ஞ்சு 

போச்சும்மே... சுகுரா எயுந்து வா கண்ணு....


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்...வர்ட்டா....







No comments:

Post a Comment