Tuesday 31 December 2013

அம்பரமே தண்ணீரே.....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 17 ஆம் நாள் பாடல்...



அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்

எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே

எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்

அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உளகுஅளந்த

உம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா

உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை: 


போட்டுனுக்கிற சொக்கா, துண்றதுக்கு சோறு, தாகம் எட்த்தா குடிக்க தண்ணி இந்த அல்லாத்தியும் மன்சாளுக்கு கொட்த்து அருள்ற எங்ய பெருமாளே ! நந்த கோபரே ! எயுந்துருங்க சாமி!

எங்ய குல கொயுந்து! கொடி கண்க்கா இர்க்குறவங்கோ ! பொர்ந்த வூட்டுக்கும் புவுந்த வூட்டுக்கும் குல விள்க்கா வெளங்க வக்கிற பெரிவங்கோ! எங்க எசோதாம்மாவே!
தூங்கினது போதும் எயுந்திரிங்கோ...

ஆகாஸ்த்தை கிழிச்சிகினு வான்த்துக்கும் பூமிக்குமா ஓங்கி உசரமா வள்ந்து இந்த உல்கத்தியே ஒரு கால்ல அளந்தவரு ! தேவாதிதேவரு !சாமி நீங்ய துங்கிகினு இல்லாம எயுந்திரிக்க மாட்டிங்களா !

செவுப்பு பொன்னால செஞ்ச வீர கயல போட்னு இருக்குற் செல்வமே ! பல்ராமரே ! நீயும் உன் தம்பி கண்ணனும் தூங்கிகினு அல்லாம ரெண்ட்யு பெரும் எயுந்திரிங்கோ கண்ணுங்களா.


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்.... வர்ட்டா...

No comments:

Post a Comment