Monday 23 December 2013

கீழ்வானம் வெள்ளென்று...


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் வந்து மார்களி பாட்ட எட்த்து வுட்றேன்.பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எதும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....

மார்கழி 8 ஆம் நாள் பாடல்....


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்

கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

விர்தொம் இர்க்குறதுன்னாலே ரொம்ப இஷ்டாமாயிருக்குற பொண்ணே...கியக்குல வானொம் வெள்த்துருச்சு... பால கர்ந்து முட்ச்ச உட்னேயே அவுத்துவுட்ட எர்ம மாடுங்கோ புல்லுமேய கிள்ம்பி பரவலா அல்லா இட்த்துலயும் உலாத்திகினு இர்க்குதுங்கோ... விர்தம் இர்க்குற இட்த்துக்கு நிறியா பேரு பூட்டாங்கோ... 

மிச்யம் மீதி இர்க்கறவங்களும் அங்க போர்த்துக்கு புறப்ட்டுகினு இர்க்காங்கோ.... 
அவுங்கோ அல்லாத்தயும் தட்த்து நிர்த்தி உன்னியவும் இட்னு போர்துக்கு வந்து ஒன் வுட்டாண்ட நின்னுகினு இர்க்கோம்...எயுந்து வா கண்ணு... குதுர மேறி வேசம் கட்டிகினு வந்த அர்க்கன் கேசின்ற கேடியோட வாய பொள்ந்தவரு நம்ம கண்ணன்... 

அத்து மட்டுமில்ய... மாமங்காரன் கம்ச்ன் அவுர வூடு கட்டி அடிக்க அன்ப்புன குஸ்தி பயில்வானுங்கோ சாணூரன் முஷ்டிகன் அல்லாத்தயும் மண்ண தின்ன வச்சபரு நம்மோ கண்ணன்...அவருதான் பெர்ய பெர்ய சாமிக்கில்லாம் சாமி..அவுர போய் கண்டுக்கினு அவர் பெர்மய பாடி கும்பிட்டுகினா... 

அவுருயே நென்ச்சிகினு இர்ந்தா ஆ" அப்டின்னு வாய தொர்ந்து நம்ம மேல பாஸ்த்தோட வா" அப்டின்னு கூப்ட்டு நாம அவுரு கிட்ட வேண்டிக்கினுத அல்சி ஆராஞ்சு நல்தயே கொடுப்பாராமாம்...பொண்ணே.


எம்மாம் அயகா சொல்லிக்கிராங்க இல்ல... 

நாளக்கி பாக்கலாம் ....வர்ட்டா....

No comments:

Post a Comment