Monday 23 December 2013

ஓங்கி உலகளந்த....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

அறிமுகம்:

அல்லார்க்கும் சலாம் உட்டுக்கிறேன்.. நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால 
நம்ம தீனா அண்த்தே இங்க வந்து டெய்லி ஏத்தோ கொரலு உட்தாம்...தங்காச்சி நான்யும் இப்ப வந்து மார்களி மாசொம் பாட்ற பாட்ட எட்த்து வுட்றேன்..

ஏற்கனியே ரெண்டு நாளு பூட்ச்சாமாம்... செரி அத்த கண்டுக்காதிங்கோ கண்ணுங்களா... இன்னில இர்ந்து ஆர்ம்பிக்கலாம் குப்பத்து பொம்னாட்டி நானு பெர்ய பெர்ய பட்ப்பு பட்சதில்ல ஏத்தோ எனிக்கு தெரிஞ்சா மேறி தான் சொல்வேன் ராங்கா எதுனும் இர்ந்தா மன்ச்சிக்கோங்கப்பா...

மார்கழி 3 ஆம் நாள் பாடல்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி 

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரிபெய்து

ஓங்கு பெருங் செந்நெல் ஊடு கயலுகளப்

பூக்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ எம்பாவாய்.


ஆண்டாளு உரை...

வான் த்துக்கும் பூமிக்குமா அப்டியே எம்மாம் பெர்ய உசரமா வள்ந்து இந்த ஒல்கத்தியே அள்ந்தாரே நாராயணரு.. அவரு பேர் சொல்லி பொம்னாட்டிங்க அல்லாரும் மார்களி விர்தம் இர்க்கர்த்துக்கு குள்ச்சிடுவோம்..அப்டி குளிக்க சொல்லோ இன்னா நல்லது நட்க்கும் தெரிமா!!! சொல்றன் கேட்டுக்கோங்கோ..... ஊர்ல அல்லா கெட்டதும் அளிஞ்சு மாசாமாசம் மூணு தபா மய பெய்மாம்... நெல்லு பய்று அல்லாம் நல்லா புஷ்ட்டியா வள்ருமாம்... அந்த வயலாண்ட இர்க்குற காவால கெண்டி மீனு துள்ளி வெளாடுமாம்... பாக்கர்த்துக்கு சோக்கா இர்க்கற கர்நெய்தல் அப்டின்னு ஒரு பூவு அத்து மேல ஒட்ம்புல புள்ளி புள்ளியா டிசின் போட்ட வண்டுங்கோ தேன குட்ச்சினு இர்க்குமாம்... வூட்ல பால் கர்க்கறவங்கோ தயங்கிகினு இல்லாம அவங்க க்ய்ய வச்ச உட்னேயே தன்க்குன்னு வச்சிக்காம பெர்ய மடி வச்சினிருக்குற மாடு அத்தோட பால எப்டி வள்ளல் கணக்கா கொட்த்து பால் கொடத்த ரொப்புதோஅப்டி மாடுங்களோட நெர்யா துட்டும் வூட்ல நெர்ஞ்சு இர்க்குமாம்... 

எம்மாம் அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம் வர்ட்டா....



















No comments:

Post a Comment