Monday 6 January 2014

மாரி மலை முழைஞ்சில்...

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 23 ஆம் நாள் பாடல்...


மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி

மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை : காயாம்பூ கலிர்ல்ல இர்க்க கண்ணா ! அட மய கால்த்துல மலிகொக உள்ளாற தூங்கிகினு இர்க்குற சிங்கொம் அப்டியே வீரமா எயுந்து கண்ணுல நெர்ப்பு கக்க ஒரு லுக் வுட்டு அது பொடறிய சிலித்துகினு நாலா பக்கமும் திர்ம்பி திர்ம்பி ஒட்ம்பை உதறி...

அப்டியெ நெட்டி முர்ச்சி நிமிந்து பந்தாவா கொரலுட்டு அந்த கொகய வுட்டு சோக்கா வெள்ய வர்ற மேறி, நீயும் உன் பங்களா கண்க்கா இர்க்குற வூட்ல இர்ந்து எயுந்துஇங்க வந்துரு! உனுக்காண்டி போட்டு வச்சிகிற இந்த அயகான சிம்மாசன்த்துல குந்திகினு...

நாங்கோ உன்னாண்ட கேக்குறத அல்சி ஆராஞ்சி அத்த எங்களுக்கு ஒன் அருளோட்ய கொட்த்து ஒதவிபண்ணு கண்ணு..


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா...

No comments:

Post a Comment