Friday 10 January 2014

கூடாரை வெல்லும்....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 27 ஆம் நாள் பாடல்...


கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை : 

உன்னிய எதுத்த கம்சன்,எரண்யன்,ராவுணன் அல்லாத்தையும் கெலிச்ச பெர்மையான கோவிந்தரே! ஒன் பெர்மய வாயாற பாடி உன்னாண்ட இர்ந்து அந்த பறய வாங்கிக்கினோம்.. இன்மே இன்னா இன்னா பரிசுங்கோ எங்க அல்லாத்துக்கும் தரப்போற?

கய் வளைலு, தோள் வளைலு, தோடு, காதுல மாட்டிக்கிற தங்கபூவு, படாகொம் அல்லா நகியயும் போட்டுகினு அத்தோட நல்ல நல்ல துணிமணிங்க்கோ எட்த்து அலங்காரமா இந்தய ஒல்கமே மெச்சினு இர்க்கா மேறி நாங்ய  போட்டுக்றோம்..

அப்பால தட்டுல இர்க்குற பால் சோத்துல சோறே மூட்றா மேறி நெய்யி ஊத்துவோம்! அந்த பால் சோற கய்யால எடுத்து துண்ண சொல்லோ ஊத்திருக்குற நெய்யி அப்டியே பிரேக் புடிக்காத்ய ரிக்ஷா மேறி முயங்கைல சர்ன்னு ஓடி ஒயுகுறா மேறி..

அல்லாத்துக்கும் சோத்த குடு..! அந்த சோத்த ஒத்துமியா சேந்து துண்ற புத்திய கொடு!குளிந்து போன ஒன் மன்சோட எங்க அல்லாத்துக்கும்  இத கொட்த்துரு.

எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா....

 

No comments:

Post a Comment