Monday 6 January 2014

மார்கழி 23 ஆம் நாள்....

மார்கழி 23 ஆம் நாள் பாடல்.....

இப்பாடலில் சிங்கத்தின் பிடரியில் உள்ள வேரி மயிற்களுக்கு  மணம் உண்டு!அதை தலை உதறி சிலிர்த்து கொள்வது அதன் ஈரப்பதத்தை போக்கவே என்று பொருள் பட ... இப்பாடலில் வருகிறது..! 


சிங்கத்தின் ஊளை மயிர்கள் வியர்த்து தலையில் ஒட்டிக்கொள்ளுமாம் அந்த மயிரை சிலிர்க்க செய்யவே சிங்கம் தன் பிடரியை உதறி சிலிர்க்கிறது... மேலும் சிங்கத்தின் பிடரிமயிர் மணத்தை வைத்து தான் பிற சிங்கங்கள் தன் கூட்டத்தின் தலைவனை இனம் கண்டு கொள்கின்றன.. ( சிங்கத்தை பற்றிய ஆராய்ச்சியாளர்கள் எழுதியது ) 

இத்தகவலை ஆண்டாள் கற்பனையில் சொன்னாரா அல்லது அறிந்து சொன்னாரா ஆச்சர்யம்!.!.!மேலும் கண்ணனை சிங்கம் என குறிப்பிடக்காரணம் அவர் நரசிம்ம அவதாரத்தை நினைவு கூர்தலே!என்பதும் தெரிகிறது.. இனி பாடல்.....


அடாணா ராகம்........                 ஆதி தாளம்...........


மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி

மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்

போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


விளக்க உரை : 


காயாம்பூ நிறத்தானே! மழைக்காலத்தில் மலை குகைக்குள் தூங்கும் வீரமிக்க சிங்கமானது உறக்கம் தெளிந்து எழுந்து ,நெருப்பு உமிழ விழித்து பிடரி மயிர் சிலிர்க்க நாற்புறமும் திரும்பி திரும்பி உதறி,சோம்பல் முறித்து,நிமிர்ந்து கர்ஜித்து அந்த குகையிலிருந்து வெளி வருவதைப்போல...

நீயும் உன் திரு மாளிகையிலிருந்து இங்கு எழுந்தருள்வாயாக !வனப்புடைய சீரிய சிம்மாசனத்தில் வீற்றிருந்து  நாங்கள் வந்த காரியத்தை கேட்டு ஆராய்ந்து அருள் புரிவாயாக..


பதவுரை:

மாரி

மழைகாலத்தில்

மலை முழஞ்சில்

மலையிலுள்ள குஹைகளில்

மன்னி கிடந்து

(பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து

உறங்கும்

உறங்காநின்ற

சீரிய சிங்கம்

(வீர்யமாகிற) சீர்மையையுடைய சிங்கமானது

அறிவுற்று

உணர்ந்தெழுந்து

தீ விழித்து

நெருப்புப்பொறி பறக்கும்படி கண்களை விழித்து

வேரி மயிர்

(ஜாதிக்கு உரிய) பரிமள முள்ள உளைமயிர்களானவை

பொங்க

சிலும்பும்படி

எப்பாடும்

நாற்புறங்களிலும்

பேர்ந்து

புடைபெயர்ந்து (அசைந்து)

உதறி

(சரிரத்தை) உதறி

மூரி நிமிர்ந்து

சோம்பல் முறித்து

முழங்கி

கர்ஜனை பண்ணி

புறப்பட்டு போதரும் ஆ போலே


வெளிப்புறப்பட்டு வருவது போல,

பூவை பூ வண்ணா

காயம் பூப்போன்ற உறத்தை யுடைய பிரானே!

நீ


உன் கோயில் நின்று


உன்னுடைய திருக்கோயிலினின்றும்

இங்ஙனே போந்தருளி

இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி

உன் கோயில் நின்று

கோப்பு உடைய

அழகிய ஸந்நிவேசத்தை யுடைய

சீரிய

லோகோத்தரமான

சிங்காசனத்து

எழுந்தருளியிருந்து

யாம் வந்த காரியம்


நாங்கள் (மநோரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை

ஆராய்ந்து

விசாரித்து

அருள்

கிருபை செய்ய வேணும்’

ஏல் ஓர் எம் பாவாய்

No comments:

Post a Comment