Saturday 18 January 2014

முகநூல் கண்காட்சி....

புத்தக கண்காட்சியை தொடர்ந்து ....

மாபெரும் முகப் புத்தக கண்காட்சி...!

நமது முகநூல் நண்பர்களின் ஸ்டால்கள்.... (கற்பனையில்)

டிமிட்ரி ஸ்டால்: கண்காட்சியின் நுழைவாயில் அருகே இருக்கும்... எந்த புத்தகமும் இருக்காது ஆனால் எந்தெந்த புத்தகம் வாங்கலாம் என்ற விவரங்கள் விளம்பர படுத்தப்படும். அவ்வப்போது இவர் போற்றுகிறாரா! தூற்றுகிறாரா! என்ற குழப்பம் இருப்பினும் அப்பனே விநாயகா, முருகா என்று வேண்டிக் கொண்டால் நமக்கும் புரியும்...! புரொமோஷன் ஸ்டால்.

செல்லி ஸ்டால்: ஸ்டால் பணியாளர்களே டெரராக இருப்பார்கள்,பில் போடுங்க என்றால் பில்லை கிழே போட்டு நீங்க தானே போட சொன்னிங்க என்பார்கள்.அவ்வப்போது புர்ர்ர் என்ற சப்தம் கேட்டால் அது உங்கள் சட்டை கிழியும் சத்தம் மட்டுமல்ல செல்லி சிரிக்கும் சத்தமும் தான்...சில நேரம் கிக்கிக்கிக்கி என்று அழைப்பு மணி சத்தத்திலும் சிரிப்பார்.... சிரிப்புக்கு கியாரண்டியான ஸ்டால்....

சித்தன் கோவை ஸ்டால்: நடையாய் நடந்து வந்து யாரும் புத்தகம் கேட்டால் பயங்கர கோபம் வரும். கோபால் என்பவர் எழுதிய சாட்டை இல்லாத பம்பரம் என்று ஒரு புத்தகம் அதை மொத்தமாக வாங்கி டார் டாராக கிழிப்பது இவருக்கு பிடிக்கும்.. பெற்ற தாயாக இருந்தாலும் இவர் கடையில் வந்து அம்மா என்றழைத்தால் சூரியப்பார்வையில் சுட்டெரித்து விடுவார்... இறுதியாக எல்லோரும் கடையை ஸ்டால் என்பார்கள் இவர் மட்டுமே ஸ்டாலின் என்பார்... அனல் பறக்கும் ஸ்டா(லின்)ல்...

ஹன்ஸா ஸ்டால் : சட்ட புத்தகங்கள் விற்கும் கடை.. மியூஸிக் சம்மந்தமான புத்தகங்களும் கிடைக்கும்... இலவசமாக சமையல் ஆலோசனைகளும் கிடைக்கும்... பக்கத்து கடையில் நல்ல புத்தகம் விற்றால் இவர் வியாபாரத்தை விட்டு ஓடிச் சென்று பாராட்டுவார்... அந்த நல்ல குணம் தெரிந்து கொண்ட பலர் இவரிடம் ஆலோசனை இலவசமாக பெற்றுக் கொண்டு புக் வாங்காமல் நடையை கட்டிவிட்டுவார்கள்.. ஆனால் அது பற்றி கவலைப்பட மாட்டார்.. வருத்தமில்லாத வக்கீல் ஸ்டால்....

தொடரும்.....

புத்தக கண்காட்சியை தொடர்ந்து ....

மாபெரும் முகப் புத்தக கண்காட்சி...! PART - 2

நமது முகநூல் நண்பர்களின் ஸ்டால்கள்.... (கற்பனையில்)


Viji connect ஸ்டால்: பாட்டு புத்தகங்கள் விற்கும் ஸ்டால்... ஏராளமான மியூசிக் டிவிடிக்கள் யூ ட்யூப் லிங்க்குகளும்  நிறைந்த ஸ்டால்... 21 வருடத்திற்கு முன் இளையராஜா குளிக்கும் போது ஹம் செய்த லிங்க்.... ஏ.ஆர். ரஹ்மான் ஸ்கூலில் 5வது படிக்கும் போது பாட்டு போட்டியில் பாடிய லிங்க் என எல்லாம்வைத்திருப்பார்.மறக்க இயலாத கானங்கள் என்ற தொகுப்பும் கிடைக்கும், பாடல்களை அலசி ஆராய்ந்து காயப்போட்டிருப்பார்.... செவிக்கினிய ஸ்டால்....

Lalitha murali ஸ்டால்: தேன் மிட்டாய், மாங்காய் பத்தை, புளிப்பு மிட்டாய் எல்லாம் கிடைக்கும், இது ஸ்டாலா கேண்டினா என்ற சந்தேகம் வரும். நாக்கை துருத்திய படி, கண்களை உருட்டியபடி, நிறைய சிரித்தபடி இவர் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருப்பதால் இங்கு வர சிறு குழந்தைகள் பயந்து அலறும். எனவே அவர்களை இங்கு கூட்டிச் செல்வதை தவிர்க்கவும்... ஆன்மீகத் தலங்கள் பற்றிய புத்தகங்கள் கிடைக்கும் இருப்பினும் இந்த ஸ்டால் அமானுட ஸ்டால்...

ராகவன் ஶ்ரீனிவாசன் ஸ்டால்: பாதிக் கதை இருக்கும் புத்தகங்கள் நிறைய இருக்கும்... ஆனால் முழுப்பணமும் கேட்பார்.. வெண்பா ஆசிரியப்பாவோடு ரம்பா பற்றியும் சொல்லுவார். ஹாங்காங்கில் நடந்தது என்ன என்ற புத்தகத்தை நீங்கள் புரட்டினால் அது இவர் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடும் என்பதால் டிரைலரோடு நிறுத்திக் கொள்வார். திடீர் திருப்பங்கள் மலைப்பாதையில் மட்டுமல்ல இவர் கதையிலும் இருக்கும்.. திருப்பு முனை ஸ்டால்....

தமிழ் அரசி ஸ்டால்: இங்கு என்ன புத்தகம் விற்கும் என்று கேட்டால் அவர்கள் ஃபேஸ்புக்கில் இருக்கவே லாயக்கில்லை... இவர் கடையில் புத்தகம் வாங்காத ஆண்கள் "அதி அரூபனாகவும்" பெண்கள் "கொரில்லா"க்களாகவும் தெரிவார்கள்.. வாங்கினால் அதிரூபனும் ஸிண்ட்ரெல்லா வாகவும் மாறுவார்கள்..தமிழ் கடையில் இருந்தால் வியாபாரம் அமோகமாக இருக்கும்..! ஏனெனில் வாய் திறந்து கவிதை சொல்லிவிடுவாரோ என்ற பயத்திலேயே அனைவரும் வாங்கிக் கொண்டு விரைந்திடுவர்... கவிதையான ஸ்டால்.

தொடரும்....


புத்தக கண்காட்சியை தொடர்ந்து ....

மாபெரும் முகப் புத்தக கண்காட்சி...! PART - 3

நமது முகநூல் நண்பர்களின் ஸ்டால்கள்.... (கற்பனையில்)

Nithya kandasamy ஸ்டால் : பெண்கள் கூட்டம் அலைமோதும் ஸ்டால்! ஆண்களை அடக்குவது எப்படி, ஆண்களை நம்பாதே, ஆணாதிக்கம் என்ற மாயயை போன்ற புத்தகங்கள் கிடைக்கும்... ராங்கு பண்ண அல்லாம் ராங்கா பூடும் என்று மெட்ராஸ் பாஷையில் இவர் எழுதின புத்தகம் இப்போது பரபரப்பான விற்பனையில்... கம கம வென்று மட்டன் பிரியாணி வாடை வந்தால் ஸ்டாலுக்குள் மதிய உணவு நித்யா சாப்பிடுகிறார் என அர்த்தம் வம்பிழுப்போர்க்கு டெரர் ஸ்டால்...

Erode Kathir ஸ்டால் : கலாச்சார புத்தகங்களும், வேளாண்மை புத்தகங்களும் கிடைக்கும் சேகுவாரா பனியனோடு போய் புத்தகம் வாங்கி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு நீட்டினால் அடுத்த நாள் நீயெல்லாம் புரட்சியாளனா என ட்விட்டர் பறக்கும்.. அரங்கில் அடிக்கடி ரத்த தானம் நடப்பதால் மது அருந்தி செல்ல வேண்டாம்.. மீறி சென்றால் என் முதல் பீரும் அக்கப்போரும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும்... மீடியா வெளிச்சம் உள்ள ஸ்டால்.

Kirthikatharan ஸ்டால்: குழந்தைகளுக்கு கதை சொல்லும் ஓஜுவும் நானும் புத்தகம் அம்மாக்களுக்கு பயன்படும்( நம் முதல்வர் அல்ல) அஞ்சலையின் சமையல் குறிப்புகளும் வீட்டுக்குறிப்புகளும் புத்தகதை பெண்கள் கட்டாயம் விரும்புவார்கள் ஏன்னா அவங்க மனசு இருக்கே அங்க நிக்குறா அஞ்சலை.. டவுட்டு டானியா புத்தகங்களோடு லேட்டஸ்ட் அப்பா ஸ்பெஷல் கதைகள் பரபரப்பாக விற்பனையாகும் ஜனரஞ்சகமான ஸ்டால்...

ரா புவன் ஸ்டால் : பிரியாணி செய்வது எப்படி!சுவை மிகுந்த 200 வகை பிரியாணிகள்!போன்ற பிரியாணி சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எல்லாம் கிடைக்கும்... 1000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கினால் ஒரு பிரியாணி லெக் பீசுடன் free... வீட்டில் இருந்து பிரியாணி செய்து கொண்டு வந்து கொடுத்தாலும் பண்ட மாற்று முறையில் புத்தகம் தரப்படும் வேலை இல்லாதவனும் வெற்றி பெறுவான் என்ற லேட்டஸ்ட்  புக் விற்பனையில் ஜோர்...மசாலா மணம் வீசும் ஸ்டால்....

நிறைந்தது...





No comments:

Post a Comment