Sunday 5 January 2014

அம்கண்மா ஞாலத்து....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 22 ஆம் நாள் பாடல்...


அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அம்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

இந்தய ஒல்கத்தயே எம்மாம் பெரிய கடலுங்கோ சுத்தி சூள்ந்துகினு தாலாட்டு பாட்றா மேறி அலயடிச்சுனு கீது அப்டியாப்பட்ட கட்லோட சேத்து இந்த பூமியவே ஆண்டுகினு இர்க்க பெர்ய பெர்ய மவராசனுங்கோ அத்தினி பேரும் அவுங்கோ மண்டயா இர்க்கற குண்த்த தூக்கி கடாசிட்டு...

உன்னாண்ட அட்ங்கி போயி... நீ தூங்கிகினு இர்க்க கட்லாண்ட வந்து கும்பலு கும்பலா தர்யில குந்திகினாங்கோ... அதே மேறி நாங்களும் உன்னாண்ட வந்து  செவுப்பா இர்க்குற ஒன் காலு பாதத்துக்கு கீய வந்து கும்புட்டுகினே நிக்கிறோம்... கிண்கிணியோட்ய அயகான வாய் மேறியும்....

மொள்ளமா மல்ருதே செந்தாமிர பூவு அது மேறியும்... செவுப்பாகீதே உன் கண்ணு அத்த மொள்ள மொள்ள தொர்ந்து எங்ய மேல ஒன் பார்வ படாதான்னு காத்துனு இர்க்கோம்! நெலாவும் சூர்யனும் கூட்டா சேந்து ஒண்ணா வந்தா எப்டி இர்க்குமோ அதே மேறி தான்...

உன் பார்வை எங்க மேல படணும்.. அப்டி நீ பாக்கொ சொல்லோ மின்னாடி நாங்க செஞ்ச பாவமெல்லாம் அயிஞ்சு போய்டணும்! அப்டி ஒரு தபா எங்க அல்லாத்தயும் கண்டுக்க கண்ணா.


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா....





No comments:

Post a Comment