Thursday 2 January 2014

குத்து விளக்கெரிய.....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 19 ஆம் நாள் பாடல்...


குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல்ஏறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்

மைத்தடம் கண்ணினாய் நீஉன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனையேலும் பிரிவுஆற்ற கில்லாயால்

தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

தூங்கிக்கினு இருக்குற அறயில குத்துவெள்க்கு எறிஞ்சுகினு வெள்ச்சத்த பர்ப்பிகினு இர்க்கோ.. ஆன தந்தத்தால செஞ்ச அயகான கட்டுலு மேல அன்னிப்பறவியோட றக்க இல்வொம் பஞ்சு, செவுப்பு பஞ்சு, வெள்ள பஞ்சு அல்லாம் போட்டு நெர்ப்புன மெத்தயில..

அயகு,குளிரு,மெல்லிசு, வாஸ்ன, வெள்ளை அல்லாத்தையும் பீல் பண்ணிகினு இந்த அஞ்சயும் அந்த மெத்தயில விர்ச்சினு இருக்குறாங்கோ.. அந்த தூங்குற மெத்தயில ஏறிக்கினு கொத்து கொத்தா பூவ சூடிக்கின கூந்தலு வச்சினு இருக்குற நப்பின்ன பொண்ணே...

உன் மார் மேல வச்சினுருக்குற பூவு கண்க்கா நம்ம கண்ணன் இர்க்காரு;  உன் வாய தொர்ந்து நல்ல வார்த்தய சொல்லு..அகலமான கண்ணுல மய்ய வச்சினு இருக்குற நப்பின்ன பொண்ணே உன் மன்சுல நென்ச்சுக்கினுகிற கண்ணனை எயுந்திருக்க வுடமாட்யா?

ஒரு சிகண்டு கூட அவுர வுட்டு நீ பிர்ஞ்சு இர்க்க மாட்ட இல்லியா! இது உன்க்கும் நீ இர்க்குற கொண்த்துக்கும் பொர்த்தமா இருக்கா மேறி இல்லியே கண்ணு.

எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்....வர்ட்டா....

 


No comments:

Post a Comment