Saturday 11 January 2014

கறவைகள் பின்....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 28 ஆம் நாள் பாடல்...


கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்

அறிவுஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்உடையோம்

குறைஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு

உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது அறியாத

பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை

சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே

இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை:

நாங்ய கறவ மாடுங்கள ஓட்டிகினு காட்டாண்ட போவோம், அப்பால அங்ய அல்லாரும் ஒண்யா கூடி கட்டு சோற துண்ணுவோம் : பெர்ய பெர்ய அர்வாளிங்கோ ஆரும் இல்லாத இடியரு கொலத்துல நீ புள்ளயா வந்து பொர்ந்தது நாங்ய செஞ்ச புண்ணியோம்...

எந்தய கொறயும் இல்லாத கோயிந்தா! உன்யோட நாங்ய வச்சினு இர்க்குற ஒரவு ஆராலியும் ஒன்யும் அயிக்க முட்யாது : உன்ய மேறி நாங்கல்லாம் அர்வாளி கெடியாத்து அதானால்ய மின்னாடி உன்னிய அப்டி இப்டி பட்ட பேரு வச்சி கூப்டத  பெர்சு பண்யாதே....

எங்ய அல்லார் தப்பையும் மர்ந்து மன்னாப்பு கொட்த்துரு! எங்ய கொல தெய்வமே! நாங்ய உன்னாண்ட வேண்டி கேட்ட பற அல்லாத்தியும் கொட்த்து  அருள கொடு.

எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா...

No comments:

Post a Comment