Saturday 4 January 2014

ஏற்ற கலங்கள்....

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்....

 ( அறிமுகம்.....)

வண்க்கம் கண்ணுங்களா! நானும் இந்த மாசந்தான் பொர்ந்தனாமாம் அத்துனால்தான் எங்க நைனா என்க்கு ஆண்டாளுன்னு பேர் வச்சுதாம்..அப்பால நான் ஒன்யும்பெர்ய பெர்ய பட்ப்பு பட்ச்சதில்ல எத்தும் ராங்கா இர்ந்தா ஒன்யும் கண்டுக்காதிங்கோ....


மார்கழி 21 ஆம் நாள் பாடல்...



ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்

மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்

ஆற்றாது வந்துஉன் அடிபணியு மாபோலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை : 


பால் கர்க்க சொல்லோ கய்யில வச்சினு இருக்குற பாத்திரத்துக்கு உள்ய பட்டு அப்டியே எதித்துகினு பாத்திரம் வயிய வயிய பொங்கினு வர்தே பாலு.. அந்த மேறி நிர்த்தாம பால கொட்த்துனு இருக்க பசு மாடுங்கோ நெர்யா வச்சினு இர்க்க நந்த கோபருக்கு மகனா பொர்ந்த மகராசா! எயுந்துரு கண்ணா!

உல்கத்தை காத்துனு இர்க்குறதுல கில்லாடி நீ! அல்லாத்தையு வுட பெர்ய மன்சன் நீ! இந்த பூமியில அவுதாரம் எட்த்து வந்து நின்னு எங்க அல்லார் மன்சுலயும் குந்திகினப்பா நீ! தக தகன்னு வெள்ச்சமா ஜொலிக்கிற சொடர் கணக்கா உர்வம் எட்த்தவன் நீ! கண்ண மூடி தூங்கினது போதும் எய்ந்துருய்யா!

உன்ய  எதுத்தவங்க கூட உன்னாண்ட மோதுனா வேல்லிக்கு ஆகாத்துனு தெர்ஞ்சுகினு உன் வலு இன்னான்னு புர்ஞ்சிகினு அவுங்க உதார் எல்யாத்தயும் துக்கி கடாசிட்டு நீயே கதின்னு உன் வூட்டாண்ட வந்து உன் காலடியில உய்ந்துடுறாங்கோ..அதே மேறி நாங்களும் வந்து உன்ய பத்தி பெர்மயா பாடி புகய்ந்துகினு இர்க்கோம்.

எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்.... வர்ட்டா...




No comments:

Post a Comment