Sunday 12 January 2014

சிற்றம் சிறுகாலே...

அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 29 ஆம் நாள் பாடல்...


சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்

பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்

பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ

குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை : 

மார்களி மாஸ்சம் காலங்காத்தால உன்னிய வந்த்யு கண்டுக்கினு அப்டியே கும்புட்டு சலாம் உட்டுக்குறோம்: ஒன் பொன்னான கால்ல உயுந்து ஒன் பேர சொல்லினு இர்க்கமே அது இன்னாத்துக்காக? ஏன் இப்டி வேண்டிகினு இர்க்கிங்கோ? அப்டின்னு எங்களாண்ட கேளுப்பா..

நீ பெர்ய மன்சன் கடவுளு ஆன்யா அந்த பந்தா ஏத்யும் இல்லாம மாடுங்கள மேச்சி கட்டு சோறு சாப்பிடுற ஆயரு கொல்த்துல வந்து பொர்ந்தியே! உனுக்கு எதுனாச்சும் பண்ணாம இர்ந்தா அத்து எங்கயளுக்கு தான் அவுமானம்! அதுனால உனுக்கு எடுபிடி வேல செய்ய எங்கள தட்க்காதே...

ஒன்ய இப்ப திர்ம்ப திர்ம்ப கும்புட்றதும், உன் கால்லியே வுயுந்து கெடக்கறதும் அந்த பறய உன்னாண்ட இர்ந்து வாங்கிக்கதான் ,அத்தயும் நீ கொட்த்துட்ட இப்பொ இன்னொன்யயும் கேக்குறோம்.. எப்பா கோயிந்தா! இந்தய பொறவி மட்யுமில்லை...

இன்னும் ஏயேயு பொறவி எட்த்தாலும் உன் கூட்யவே சேந்து இர்க்கணும்! உன் அடிம மேறின்னா கூட செரி உனுக்கு தான் தொண்டு செய்வோம்.. இத்த மீறி எங்கய அல்லாத்துக்கும் வேறு ஆச எத்துவும் தோணிச்சுன்னா.. அப்டி தோணாம இர்க்க நீ தான் காத்து அருளணும்.

எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா...

 

No comments:

Post a Comment