Tuesday 7 January 2014

அன்று இவ்வுலகம்....


அயிலுக் குப்பம் ஆண்டாளு வழங்கும்......

 திருப்பாவை விளக்கம்...


மார்கழி 24 ஆம் நாள் பாடல்...


அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி

சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி

கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி

குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி

என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.


ஆண்டாளு உரை : 

அன்னிக்கு ஒரு தபா ஒல்கத்தயே அள்ந்தவுரே! உன் காலத் தொட்டு கும்புட்டுக்றோம்: இலிங்கிக்கி போயி அங்ய ராபணன் கதய முட்ச்சவரே! உனுக்கு இர்க்குற தில்ல நென்ச்சு பெர்மப்படுறோம் : சனியன் சகடய எட்டி மிறிச்சவரே...உன்ய புகய்ந்து பாடுறோம்...

கன்னுக்குட்டி மேறி வேசங்கட்டிகினு வந்த வத்சாசுரன.. அப்டியே கபால்ன்னு கால புட்ச்சு தூக்கி பக்கத்துல மரொம் கண்க்கா வேசம்கட்டி நின்னுகினு இர்ந்த கபித்தாசுரன் மேல்ய விசிறி அட்ச்சி ஒர்யே கல்லுல ரெண்டு மாங்கா மேறி ரெண்டு பேரியுமே காலி பண்ணவரே! 

உன் பாதத்தில மாட்டினு இருக்குற வீரகழல தொட்டு கும்புட்டுக்றோம்: கோகுல்த்துல  குடபுட்ச்சது கண்க்கா அப்டியே அலேக்கா மலய தூக்கி மக்கள காப்பாத்ன கோவர்த்தனரே !உன் பாசமான கொண்த்த நென்ச்சு பெர்மப்படுறோம்!

உனுக்கு எதிரியா எப்டியாப்பட்டவன் வந்து நின்னாலும் கெலிக்குற உன் வேல்கம்ப புகயறோம் : இப்டி ஒன் அல்லா பெர்மயயும் வீர தீரத்தயும் பறயடிச்சு பாடினு இர்க்கதான் இங்ய வந்தோம்.. எங்க மேல்ய இர்க்கம் காட்டி ஒன் அருள கொட்த்துடு கண்ணு.


எம்மா அயகா சொல்லிக்கிராங்க இல்ல... நாளிக்கு பாக்கலாம்... வர்ட்டா..



No comments:

Post a Comment