Friday 4 September 2015

கிருஷ்ணாஸ்டெல்லர்

#கிருஷ்ணாஸ்டெல்லர்

லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் அலுவலகத்தில் நான் கதை விவாதத்தில் இருந்தேன்.. பல கதைகள் விவாதிக்கப்படன எதுவும் நோலனுக்கு பிடிக்கவில்லை.. இன்னும் பெட்டரா என்பது போல பார்த்தார் இன்னும் எவ்வளவு சயின்ஸ் பிக்ஷன்கள் சொல்வது என நானும் விழித்தேன் வெளியே காலடியோசை கேட்டது.! 

படாரென உள்ளே நுழைகிறார் கிருஷ்ண பரமாத்மா.. வழியெங்கும் அவரது கால்தடம்.! கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணர் லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தருளியது மகிழ்வாக இருந்தது.. என்ன வெங்கடேசா கதை கிடைத்ததா என்றார் குறும்பாக.. இல்லை பரமாத்மா என்றேன்.. கிருஷ்ணலீலைகள் சொன்னாயா என்றார்.. நாங்கள் தேடுவது சயின்ஸ் பிக்ஷன் என்றேன்.

ஏன் கிருஷ்ணலீலையில் சயின்ஸ் இல்லையா என குறும்பாக கேட்டு தலை சாய்த்து கண்ணடித்துக் கேட்டார்.. வேதம்புதிது சத்யராஜ் வாங்கிய அறை இப்போது என் கன்னத்தில் ஆஹா வசுதேவருக்கு கடல் வழி விட்டது கோகுல கண்ணன் வாயில் உலகமே தெரிந்து முதல் கூகுள கண்ணன் ஆனது கிரிதர மலையை தூக்கியது காளிங்கா நர்த்தனம்.. அடடா..

கதையை இப்போது நோலனுக்கு சொல்ல மார்வலஸ் வாட் எ க்ரியேட்டிவிட்டி ஹு ரோட் தட் கான்செப்ட் என்றார்.. இது எங்கள் இதிகாசம் எனக்கூற அப்போதே 1200 கோடி பட்ஜெட்டில் படத்துக்கு புரொஜக்ட் நிர்ணயித்தார்.இதைக் கொண்டாட எதாவது சாப்பிடலாமா..

கேட்ட மறு வினாடி படாரென மறுபடி கதவு திறக்க கையில் உப்புமா தட்டோடு எதிரில் வந்தார் என் மனைவி.. வந்தவர்கள் உப்புமாவை ஆசையுடன் வாங்கிக் கொள்ள கடும் விரதத்தில் இருந்த நான் அது வேண்டாம் என மனைவியிடம் கண்களால் கெஞ்சினேன்.

பரமாத்மா அதை வாயில் போடப்போன போது குசேலர் வந்து கொஞ்சம் வாங்க நோலன் கொஞ்சம் வாங்க எங்களுக்கில்லையா என கோரஸ் குரல்கள் பார்த்தால் எனக்கு பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார்கள் அனைவரும் க்யூவில் உள்ளே நுழைந்தார்கள்.

எனக்கு மகா குழப்பம் கிருஷ்ண பரமாத்மா அமெரிக்கா வந்ததில் ஆச்சர்யமில்லை இவர்கள் எல்லாம் எப்படி என்ற போது புரிந்து கொண்ட கிருஷ்ணர் சொன்னார் இன்று ஆசிரியர் தினமல்லவா அதுதான் இப்படி ஓ இன்னிக்கு செப்டம்பர் 5 ஆனால் என் மனைவி...உப்புமா...இது எப்படி..?

இது எப்படியா..? தட்டுல உப்புமாவ போட்டு கிட்டு வெறிச்சி பார்த்துகிட்டு யாரை என்ன கேள்வி கேக்குறிங்க... மனைவியின் குரல் உலுக்க அடச்சே நேத்து நைட் இண்ட்ராஸ்டெல்லர் பார்த்துட்டு இன்று காலையில பேஸ்புக் வந்துட்டு சாப்பிட உக்காந்தா இப்படியா பிரமை புடிக்கும்.. பட் அந்த கிருஷ்ணலீலை சயின்ஸ் ஃபிக்ஷன் நல்ல ஐடியா இல்ல..

No comments:

Post a Comment