Tuesday 1 September 2015

இது நிஜம்..

#நிதர்சனம்

ஒரு சில காலம் ஜூலியஸ் சீசராக வாழ்ந்துவிட்டு அப்படியே வாட்டர்லூ போருக்கு முந்தைய காலத்து நெப்போலியனாக வாழ்ந்து , சோழர் கால சிற்பியாய் சில கோவில்களில் சிற்பங்கள் செதுக்கி, கொலம்பசாக கடலில் பயணித்து, பீதோவானாய் கொஞ்சம் இசை மீட்டி, 

மைக்கேல் ஏஞ்சலாவாக மாறி வெளவால் கோணத்தில் ஓவியம் வரைந்து, நியூட்டனாகி ஆப்பிள் விழுவதை கண்டு, ஷேக்ஸ்பியராகி சில புதினங்கள் எழுதி, ஷெல்லியாக பல கவிதைகள் வடித்து, ஹிட்லராய் ஒரு தினம் வாழ்ந்து, சேகுவேராவாய் ஒரு விடுதலை கண்டு, 

எடிசனாய் சிலவற்றை கண்டுபிடித்து, நேதாஜியாய் போரிட்டு மகாத்மாவை சந்தித்து, பாரதியுடன் சுற்றித் திரிந்து, பெரியாரிடம் வேலை பார்த்து, எம்ஜிஆர் போல பிறருக்கு கொடுத்து மகிழ்ந்து எல்லாராகவும் மாற ஆசை தான்.. 

ஆனால் "இந்த மாசம் பொண்ணுக்கு ஃபீஸ் கட்டணும் மறந்துடாதிங்க" என்ற மனைவியின் குரலில் இவர்கள் எல்லாம் மறைந்து கலைந்து போய் நான் நானாக வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது எனக்கு.

No comments:

Post a Comment