Wednesday 15 June 2016

தேவநேயப் பாவாணர் உரை

மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரின் இறுதிப் பேருரை என்பதிலிருந்து கொஞ்சம்...

இப்போது தொல்காப்பியத்தைப்பற்றி ஒரு தவறான கருத்து இருக்கிறது. தொல் காப்பியம்தான் முதல் இலக்கணம் என்பது போலத் தவறாக - மிக மிகத் தவறாக - சொல்லப்படுகிறது. அப்படி அந்தக் கருத்தை வைத்துக்கொண்டு நாம் ஒருக்காலும் முன்னேறவே முடியாது என்று நான் நினைக்கின்றேன் - சொல்கின்றேன். தொல் காப்பியம்தான் முதல் இலக்கணம் என்று சொல்கின்ற வர்கள் அதை வைத்துக் கொண்டு தமிழனுடைய பெருமையை நிலை நாட்ட முடியுமென்று கருதுகிறவர்கள் யார், எப்படிப்பட்டவர் என்று கேட்டால் - கொடிக்கம்பத்தின் கீழே பிள்ளையாரைக்

கண்ட உடனே இதுதான் கோயில் என்று வணங்கிவிட்டுப் போகிறவர்களைப்போல் 
இருக்கின்றார்கள். கொடிக் கம்பத்திற்குப் பின்னால் என்ன செய்ய வேண்டும். முதல் மண்டபம் தாண்டி அதற்கப்புறம் இடை மண்டபம் தாண்டி உண்ணாழிகைக்குப் போக வேண்டும். அந்த உண்ணாழிகையை இப்போது கர்ப்பகிரகம் என்று சொல்கிறார்கள். பழையகாலத் தமிழ்ப் பெயர் உண்ணாழிகை. திரு என்ற சொல் சேர்த்துத் திருவுண்ணாழிகை என்று சொல்லப்படுகிறது. இது கல்வெட்டில் இருக்கிறது  நான் அமைத்துக்கொண்ட சொல்லன்று திருவுண்ணாழிகை - அந்த கர்ப்பகிரகம் வரையிலே போக வேண்டும்.இதற்கு மூன்று அறிவியல்களைப் படித்திருக்கவேண்டும். 

"உலக வரலாறு" (the world history) அதற்குப்பின் "ஒப்பியன் மொழிநூல்" (Comparative Philology) அற்குப்பின்பு குமுகாயப் பண்பாட்டு மாந்தநூல் (Social and Cultural Anthropology) இந்த மூன்று நூல்களும் படித்தி ருந்தால்தான் உண்மையாகத் தமிழனுடைய பெருமையை அறியமுடியும். தொல்காப்பியத்தையும் உணரமுடியும். முதல் நூற்பாவில் எடுத்த அடியிலே அவர் என்ன சொல்கிறார்.
"எழுத்தெனப் படுப... முப்பஃதென்ப""என்று சொல்வார்கள் அறிஞர்கள்" - அவ்வளவுதான். நெடுகச் சொல்லிக் கொண்டே போகிறார், "என்மனார் புலவர்", "மொழிப", நெடுக எங்கெங்கே இடமிருக்கிறதோ அங்கங்கே எல்லாம் இந்தச் சொற் றொடரை ஆண்டு கொண்டே போகின்றார். ஓர் எழுத்திலக்கணத்தை எழுதக் கூட முடியாதுஎழுத்தென்றால் நான்கு நிலைகள் இருக்கின்றன.

முதலாவது படவெழுத்து (Picture writing/ Arowgraph/ Pictograph) இரண்டாவது கருத்தெழுத்த மூன்றாவது அசையெழுத்து (Syllabary) நான்காவது ஒலியெழுத்து (Phonetic characters) இந்த நான்கு எழுத்தும் தலைக் கழகக் காலத்திலேயே கடந்து விட்டன. அந்த நிலையில் இத் தமிழ் தோன்றியது. முதலாவது இந்த நெடுங் கணக்கு ஏற்பட்டதே தமிழில்தான். எல்லாப் பொருள்களையும் அறிந்தாய்ந்து பார்த்தார்கள்மூன்றுவகைப்பட்டிருக்கின்றன பொருள்கள்ஒன்று தனி உயிர் (Life).
அடுத்த உயிர் அல்லாத ஒரு பொருள் (Lifeless)அடுத்த ஒர் உயிரும் ஓர் உடம்பும் கலந்தது - உயிர் மெய் (Living body)உயிர், மெய், உயிர்மெய். இப்பொழுது உயிர் ஆவி போகிறது என்கிறோம். பேய் பிசாசு என்கின்றனர் ஆவியினர். 

உடம்பு இறந்த பிற்பாடு அதையெல்லாம் உயிர் போயிற்று - ஆவி போகிறது என்று சொல்கிறோம். இறைவன் ஆவி வடிவாய் இருக்கிறான் என்று நாம் சொல்கிறோம். அதெல்லாம் "உயிர்" "மெய்"யென்று சொல்வது நாம் பார்ப்பதெல்லாம். உயிர் இல்லாத பொருள் எது எது இருக்கிறதோ அது எல்லாம் "உயிர்மெய்" என்று சொன்னால் மரம் முதல் மாந்தன் வரையிலே எல்லாம் உயிர்மெய்கள். இந்த மூன்று (நிலையையும்) இயல்பையும் கண்டார்கள். (சில எழுத்தானது) உயிர் எழுத்தானது தானே ஒலிக்கிறது. இயங்குகிறது. மெய்யெழுத்து உயிரின் உதவியின்றி இயங்குவதில்லை. இந்த உயிர்மெய் எழுத்தானது உயிரும் மெய்யும் ஒன்றாகச் சேர்ந்தது. இதைக் கண்டுபிடித்து அந்த மூன்றுக்கும் தனி வடிவம் முதன்முதலாக அமைத்தவன் தமிழன்தான். அதனால்தான் அதற்கு நெடுங்கணக்கு என்று பெயர்.

முதலிலே, உயிரும் மெய்யும் சேர்ந்தது குறுங்கணக்கு. உயிர்மெய்யும் சேர்ந்ததால் நெடுங்கணக் கானது. இதற்குப் பின்னாலேதான் அந்த சமற்கிருதமோ மற்றவையோ வருகின்றன.இந்த மாந்தன் - இங்கு - குமரி நாட்டிலே தோன்றினான். காலம் செல்லச் செல்ல மக்கள் தொகை பெருகுகிறது. அவ்வளவுதான். அறிவு வளர்ச்சியடைகிறது. மக்கள் தொகை பெருகுகிறது. வேறு இடம் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் பரவல் தொடங்குகிறது. தமிழரின் தோற்றமும் பரவலும் (Origin and Spread of Tamils) இந்த நூலை யாரும் படிக்காதிருந்தால் படித்துவிடுங்கள். இராமச்சந்திர தீட்சிதர் எழுதியது. நான் முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.

இப்போது பாராட்டப் படுகின்ற தமிழ்ப்புலவர்கள், சொல்லப்போனால் அவர்களைவிட மிகுதியாகப் போற்றப்படத் தக்கவர்கள் இரு வரலாற்று ஆசிரியர்கள் பி.டி. சீனிவாச ஐயங்கார் (P.T. Srinivasa Iyengar) அதற்கப்புறம் இராமச்சந்திர தீட்சிதர் (V.R. Rama Chandra Dikshithar). இந்த இருவரும் இல்லா விட்டால் நாம் பல செய்திகளுக்குச் சான்று காட்டமுடியாது. ஆகமம் எப்போது ஏற்பட்டது? கோயில் வழிபாடு எப்போது ஏற்பட்டது? யாரால் ஏற் பட்டது, எதனாலே, ஏன் ஏற்பட்டது? என்று நன்றாகத் தெளிவாக History of Tamils - தமிழர் வரலாறு என்ற புத்தகத்தில் குறித் துள்ளார்.அது ஒன்றே போதும். மற்றதை எல்லாம் போய்க் காட்ட வேண்டியதில்லை. 

பிராமணர்களிடத்தில் நம் மதத்தலைவராக - எப்படித் தலைவராக இருந்தாலும் சரிதான். அவர்களிடம் நாம் போய்க் கேட்டோமானால், அவர்களுடைய கருத்துகளைத்தான் தெரிவிப்பார்கள். நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பது (To set the Fox to keep the Geese) என்பார்கள். ஆகையினாலே நம்முடைய கருத்திற்கு மாறானவர்களிடத்திலே நாம் போய் அவர்களுடைய கருத்தைக் கேட்கக் கூடாது. இப்படி ORIGIN AND SPREAD OF TAMILS (தமிழரின் தோற்றமும் பரவலும்). இதைக் கால்டுவெல் நன்றாக எழுதியிருக்கிறார். அந்த அசை நிலைக்காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? புணர்நிலைக் காலத்தில் பிரிந்து போனவர்கள் யார்? 

பகுசொல் நிலைக்காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? கொளுவு நிலைக் காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? பிறகு அந்த ஒட்டுநிலை (அதாவது இணை நிலைக் காலத்திலே) பிரிந்து போனவர்கள் யார்? பிரிநிலைக்காலத்திலே பிரிந்து போனவர்கள் யார்? பிறகு அந்த இடைநிலைக் காலத்தில் பிரிந்து போனவர்கள் யார்?
இவற்றையெல்லாம் அந்த மொழிநூல் வரலாற்றில் இருந்து நாம் அறிகிறோம். ஆங்கிலச் சொற்களை நான் மொழிபெயர்த்துச் சொல் கிறேன். தவிர, ஆங்கிலச் சொற்களையெல்லாம் இங்குச் சொல்லிக் கொண்டிருக்க நேரமில்லை. இப்படி பல் வேறு நிலையிலே தமிழ் பிரிந்து போயிருக்கிறது தமிழுக்கு அந்த Affiliation என்கிற இசைவே அந்தக் குறிப்பே தமிழுக்குப் பொருந்தாது.

பிள்ளையைப் பெற்றோரோடு இணைப்பது போலவும் கல்லூரியைப் பல்கலைக் கழகத்தோடு இணைப்பது போலவும் கிளைமொழியைத் தாய்மொழியோடு இணைக்கிற இணைப்பைத்தான் Affiliation என்று சொல்ல வேண்டும். பண்டாரகர் கால்டுவெல் (Dr. Caldwell) ஓர் உண்மையை நன்றாக அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டுப்போய்விட்டார். எல்லா மொழிகளிலும் சிறப்பாக ஆரிய மொழிகள் எல்லாவற்றிற்கும் எந்தச் சுட்டுச் சொற்களுக்கும் மூலம் தமிழிலுள்ள ஆ(அ), ஈ(இ), ஊ(உ) தாம். இந்த மூன்று சுட்டெழுத்துக்களிலிருந்துதான் எல்லாச் சுட்டெழுத்துச் சொற்களும் (Demonstrative pronouns) தோன்றின. 

எப்படி அந்தந்தச் சொல் - அ - விலிருந்து அவன், அங்கே இந்தச் சொற்க ளெல்லாம் எப்படி அகரத்திலிருந்து உண்டாயினவோ அப்படித்தான் என்பது இகரத்திலிருந்தும் உண்டு என்பது உகரத்திலிருந்தும் வந்தன என்பது கருத்து. இந்தச் சொற்கள்தான். மூன்று சுட்டுச் எழுத்துக்களிலிருந்து தான் ஆரிய மொழிகளிலுள்ள அத்தனைச் சுட்டுச் சொற்களும் தோன்றியிருக் கின்றன. மிகத் திட்டவட்ட மாகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். அதை இப்போது நாம் ஆய்ந்து பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment