Thursday 9 June 2016

சாண்டாக்ரூஸ் சந்தோஷம் 2

#சாண்டாக்ரூஸ்_சந்தோஷம்

பார்ட் - 2

ஸ்போர்ட்ஸ் காரில் வந்தவர் அந்த ஊர் கூடைப்பந்தாட்ட பிரபலம் இந்த பாலத்தின் மீது கார்கள் வரலாம் ஆனால் அதற்கு கட்டணம் மும்மடங்கு.. அதைப்பற்றி கவலைப்படாத செல்வந்தர்களின் சொகுசுக் கார்கள் அந்த பாலத்தின் பார்க்கிங் பகுதியை அலங்கரித்தன, பாய்மரக் கப்பலின்மாதிரி, மீன்களின் வெண்கலச் சிலைகள் என ஆங்காங்கே இருந்தன.. எங்கு பார்த்தாலும் பிகினியில் கவர்ச்சியான வெண்ணை நிற பெண்கள் கூட்டம்.!

எங்களுக்கு ஏன் காலையில் மூலிகை சக்தி மிக்க உணவு தரப்பட்டது என்பதன் ரகசியம் இப்போது தெரிந்தது புலனடக்கி நடந்தோம்.. இன்றைய ஸ்பெஷல் போண்டா என நம்ம ஊர் ஓட்டல்களில் எழுதப்பட்டு இருப்பதைப் போல அங்கு ஆக்டோபஸ் பக்கோடா சூடாக கிடைத்தது.. கண்ணாடித் தொட்டியில் உயிருடன் இருந்த நண்டுகளில் நமக்கு பிடித்ததை காட்டினால் பிடித்து உரித்து மசாலா தடவி அருமையாக சுட்டுத் தருகிறார்கள்.

மீன் உணவுகளில் இத்தனை ரகங்களா என வியக்கலாம்.. காற்றில் மீன் சமைக்கும் வாசம் வீச.அப்படியே வயிற்றைப் பிரட்டி..ஓவ்.. என கூப்பிட்டு ஒரு சாலமன் ஃபிஷ் ஆர்டர் கொடுத்தேன்(ஹிஹிஹி) ஆக்டோபசும் டிரை பண்ணுங்க பாஸ் என்றார் மருது.. சரி என்ன தான் ஆகுதுன்னு பார்ப்போமே அப்படின்னு சாப்பிட்டா அட நம்ம தேங்காச்சில்லு மாதிரி செமையா இருந்துச்சு.. ஆக்டோபஸ் நம் உடலுக்கு சூடு தரும் உணவாம். அதனால்...

அடுத்த பிளேட் ஆர்டர் சொல்லலை. பாலத்தின் இறுதிப்பகுதிக்கு வந்தோம் கடலில் சீல் எனப்படும் நீர் நாய்கள் தென்பட்டன அவற்றின் அருகில் சிலர் படகில் சென்று படம் எடுத்துக் கொண்டிருந்தனர் நாங்களும் எடுத்தோம் பாலத்தின் நடுவில் கடலுக்கு அடியில் பார்க்கும்படி நம்ம ஊர் கிணறு போல ஒரு அமைப்பு உள்ளே எட்டிப்பார்த்தால் பாலத்தின் அடியில் ஏகப்பட்ட சீல்கள் இருந்தன.. ஆனால் அதைவிட ஆச்சரியம் என்ன தெரியுமா.?

பாலத்தின் தடுப்புப்பலகை கடலிலிருந்து 8அடி உயரம் அந்தக் கட்டையில் கை கால் இல்லாத சீல்கள் படுத்து சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தன..! இந்த சீல்கள் எப்படி இதில் ஏறியது.. அங்கு வருவதற்கு வேறு ஏதும் பாதைகள் இல்லையே என யோசித்துக் கொண்டிருந்த போது அடுத்த சீல் ஒன்று இப்போது அந்த கட்டையில் ஏறியதைப் பார்த்தோம்.. அட இது தானா அந்த டெக்னிக்..! அந்த டெக்னிக் பற்றி நாளை.. (வரும்...)

No comments:

Post a Comment