Monday 20 June 2016

நாகூர் அனீபா

#இசைமுரசு_நாகூர்ஹனீபா

சேலத்தில் சிந்தி இந்து நடுநிலைப் பள்ளியில் தான் படித்தேன்.. பள்ளி கேட்டின் எதிரில் நின்று இருகை விரித்தால் இடதுபக்கம் மாப்ஸ் Murali Munus வீடு.. வலதுபக்கம் திருமணி முத்(மூத்திர)தாறு.! ஆறு என்னும் பெயர் இருந்தாலும் ஒரு 8 அடி அகல ஓடை.. ஆற்றின் அந்தப்பக்கம் இஸ்லாமிய நண்பர்கள் வாழும் பகுதி துவங்குகிறது.! 

அந்த சாக்கடை நாற்றத்தை கடக்கும் எம் மதத்தவரும் மூக்கைப் பிடித்துக் கொண்டு தான் அப்பகுதியைக் கடப்பார்கள். அந்த ஆற்றுக்குள் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் செய்தி அப்போது ஒளிந்திருந்ததை இப்போது அறிகிறேன்..ஆனால் அங்கு விசேஷங்கள் நடக்கும் போது யாரும் காதுகளை மூடுவதில்லை..!

இயல்பிலேயே எனக்கு பாடல்கள் கேட்கப் பிடிக்கும்.. அதுவும் அங்கு திருமண விழா, இஸ்லாமிய பண்டிகைகள் நடக்கும் போது ஸ்பீக்கர் கட்டி பாடல்கள் ஒலிக்கும்.. அவையெல்லாம் காதுகளில் கேட்டு வளர்ந்தவன் நான்.. அதுமட்டுமின்றி எனது பள்ளியில் என்னுடன் படித்த நண்பர்கள்...

சையத் இர்பான், ஷாபுதீன், முகமத் ரஃபி, ரபீக் பாஷா, ஜாஹிர் ஹுசைன், நூருல்லா, அப்துல் ரஹீம், சுல்தான், போன்றோர்.. இன்னும் சொல்ல மறந்த பெயர்கள் பல இருக்கின்றன. இவர்களைப் பார்க்க போகும் போது அப்பகுதியைக் கடக்கும் போது காதுகளில் ஒலித்தது தான் இசை முரசு நாகூராரின் குரல் அவர் மறைந்த இந்நாளில் அவரது நினைவாக பலர் இறைவனிடம் கையேந்துங்கள் பாடலை முகநூலில் குறிப்பிட்டு இருந்தார்கள்.!

ஆனால் இன்றும் என் மனதிலும் செவியிலும் இருக்கும்.. அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே... திருமறையின் அருள் மொழியில் ஒளிந்திருப்பதென்ன.. அல்லாவை நாம் தொழுதால்.. ஈச்ச மரத்து இன்பச் சோலை... தமிழகத்து தர்காகளை பார்த்து வருவோம்... லப்பை லப்பை அல்லாஹு லா லப்பை.. இது போல இன்னும் பல பாடல்கள்... பிறகு திமுக பிரச்சார பாடல்களும் கேட்டதுண்டு .. அதில் எனது ஃபேவரைட் வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா.. தன் வெண்கலக் குரலால் பல இதயங்களைக் கொள்ளைகொண்ட குரலழகர்.!

குரலால் உருகி,குழைந்து, தொனித்து, கர்ஜித்து, கொள்கையை விளக்கி, உணர்ச்சியூட்டி, எழுச்சியூட்டிய பாடகர் அவர்.. பல மத நல்லிணக்க கூட்டங்களில் அவரது உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம் பாடலே இன்றளவும் தேசிய கீதம்.. அவரது இனிய குரலை விட்டுவிட்டு உடலாலும் உயிராலும் மட்டுமே பிரிந்துள்ளார்.. ஈடில்லாத இழப்பு தான் எனினும் அவர் குரலால் என்றென்றும் வாழ்வார் இதை எழுதும் போது முகவை சீனிமுகமது பாடிய ஒரு பாடலை அய்யா அவர்கள் ஒரு முறை பாடக் கேட்டேன் அவ்வரிகள் இன்றும் காதில் ஒலிக்கிறது...

இந்தியா எங்கள் தாய்நாடு 
இஸ்லாம் எங்கள் வழிபாடு 
தமிழே எங்கள் மொழியாகும் 
தன்மானம் எங்கள் வழியாகும்
யாரடா சொன்னது நம்மை
அந்நியன் என்று யாரடா சொன்னது..

கண்ணீர் அஞ்சலி ஐயா....

சேலத்தில் சிந்திஇந்து பள்ளியில் படித்தேன்.. இஸ்லாமிய பெருமக்கள் மிகுதியாக வாழும் பகுதி அது..அவர்கள் வீட்டு விசேஷம் என்றாலோ அல்லது இஸ்லாமிய பண்டிகை என்றாலோ.. இஸ்லாமிய பாடல்கள் ஒலிக்கும் மாதத்தில் ஒரு 10 முறையாவது இந்த பாடல்களை கேட்டு இருக்கிறேன்.. பெரும்பாலும் நாகூர் ஹனீபா பாடியவை..தமிழகத்து தர்காகளை பார்த்து வருவோம்.....திருமறையின் அருள் மொழியில் ஒளிந்திருப்பது என்ன.. அல்லாவை நாம் தொழுதால்....அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே.. லப்பை லப்பை அல்லாஹூ லா லப்பை.. இறைவனிடம் கை ஏந்துங்கள் ஆஹா ஒவ்வொன்றும் கல்கண்டு இதற்கு இணையான பாடல்கள் இதுவரை இல்லை..
------
பொதுவாக கட்டிட வேலை பார்க்கும் தொழிலாளர்களை கடின உழைப்பாளிகள் என்று சொல்வோம்.. அவர்கள் அனுபவிக்கும் பெரிய பிரச்சனை... கை ,கால் பொத்து போவது..... சிமெண்ட்கரைசல் கை கால் களில் பட்டு பட்டு தோலில் ஒட்டை  ஏற்படுத்தும்..சாப்பிட உணவை அள்ள முடியாது,தட்டு செங்கல் தூக்க முடியாது கால்களில் செருப்பில்லாமல் நடக்க முடியாது.சும்மா இருந்தாலும் கையில் மின்சாரம் பாய்வது போல வேதனை இருக்கும்.இது குணமாக ஒரே வழி 4 நாள் வேலைக்கு போகாமல் இருப்பது..ஆனால் யாரும் விடுமுறை எடுப்பதில்லை அந்த வேதனையோடு வேலை பார்க்கிறார்கள்.அவர்களைஅடுத்தமுறை சந்திக்க முடிந்தால் அவர்கள் கைகளை பாருங்கள் ஒட்டைகள் தெரியும்.. அது ஒட்டைஅல்ல அவர்கள் வாழ்க்கை...

No comments:

Post a Comment