Wednesday 1 June 2016

பசிபிக் மீனம்மா 1

#பசிபிக்_மீனம்மா

பார்ட் - 1

அன்று சாப்ளின் வசித்த ஊரிலிருந்து ஏமாற்றமாக திரும்பினோம் அல்லவா அதற்கு பிறகு நண்பர் ராம் எங்களை வெளியே அழைத்துச் செல்வதாக இருந்தார். முதலில் நாங்கள் கெய்சர் எனப்படும் வெந்நீர் ஊற்றுக்களை பார்க்கப் போவதாகத்தான் முடிவெடுத்து இருந்தோம். ஆனால் தாமதம் ஆகிவிட்டதால் அங்கு போக முடியவில்லை.. முதலில் சாப்பிடுங்கள் பிறகு முடிவெடுப்போம் என்றார் ராம்.. அக்கடை ஒரு ஆந்திர உணவகம்.

சில்லி ப்ரான் சாப்பிடுங்க நல்லா இருக்கும் என்றார் ஏற்கனவே அவங்க சாதா வெரைட்டியிலேயே காரத்தில் செம ஹாட்டு மச்சி இதுல அங்கயே சில்லி வெரைட்டியா ஒருகணம் வெந்நீர் ஊற்று வயிற்றுக்குள் ஓடியது.. அட ஒண்ணு ஆர்டர் பண்ணுங்க புடிச்சா மறுபடியும் ஆர்டர் பண்ணிக்கலாம் என்றார் ராம். முத்து முத்தாக உடலெல்லாம் வியர்த்து வழிந்த அண்ணன் பட்வைசைரை கூலாக வயிற்றுக்கு கொடுத்தோம் ஓடிய வெந்நீர் ஆறியது.

இரண்டாவது பட்வைசரை திறக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருந்த போது.. மசாலா மணம் நாசியைக் கிளற சில்லி ப்ரான் வந்தது சற்று பெரிய இறால் மீன் மொத்தமே 4 துண்டுகள் தான் தோல் நீக்கப்பட்டு நன்கு மசாலா தடவப்பட்டு இருந்தது செடா சீஸ், மெக்சிகன் மிளகாய் வெங்காயத்துண்டுகள் அழகாக நறுக்கி வைத்திருந்தார்கள் ஆவி பறக்கும் சூடு வேறு அதை எப்படி சாப்பிடவேண்டும் என ராம் பாடம் நடத்தினார்.



நாம் பல் குத்த தரும் குச்சியைப் போல ஆனால் அதைவிட தடிமனான நீளக் குச்சிகள் அந்தத் தட்டிலேயே இருந்தது. முதலில் வெந்த இறால் மீது எலுமிச்சையை சில சொட்டுகள் பிழியச்சொன்னார்.. பிறகு கத்தியால் மீனை சிறு துண்டாக நறுக்கி அந்த குச்சியில் முதலில் ஒரு சீஸ் துண்டம் பிறகு மிளகாய் பிறகு வெங்காயம் பிறகு மீன் மீண்டும் மீன் மீது வெங்காயம் மிளகாய் சீஸ் என உல்டாவாக அடுக்கிவிட்டீர்களா ரைட் இப்ப நீங்க சாப்பிடலாம்.

முதல்மரியாதையில் சிவாஜிக்கு முன் ராதா மீன் சாப்பிடுவாரே அதே போல இந்த குச்சியை வாயில் வைத்து சர்ரென குச்சியை மட்டும் உருவினால்... ஆஹா.. இதுவரை நான் சாப்பிட்ட இறாலில் இது தான் சுப்ரீம்.. தட்டு விரைவில் காலியானது இரண்டாவது பட்வைசர் திறந்தது மீண்டும் 2 பிளேட் ஆர்டர் தந்தது மதிய உணவாக மட்டன் பிரியாணி & தயிர்சாதம் பார்சல் செய்தது எல்லாவற்றையும் ஃபாஸ்ட் ஃபார்வேர்டு செய்து கடந்து விடுவோம்.

நாங்கள் போக முடிவெடுத்த இடம் எது தெரியுமா? மீன் சாப்பிட்டுக் கொண்டே பேசியதில் இறால் ஏற்றுமதி தொடங்கி கடல் மீன்கள் பற்றி பேசி சிங்கப்பூர் சந்தோஸாவில் ஆழ்கடல் மீன்கண்காட்சி போனோம் என்றபோது இங்கேயும் ஒரு ஆழ்கடல் அக்வோரியம் இருக்குன்னர் ராம்.! அட அப்ப அந்த  மீனகத்திற்கே (அட அக்வோரியத்துக்கு இந்த தமிழ் வார்த்தை சரியா இருக்கில்ல) போகலாமே என்றோம். இரண்டுமணி நேரக் கார்பயணம்

நாங்கள் கிளம்பிய நேரம் மதியம்12:30 கலிபோர்னியாவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் போகும் சாலை அது இதுபோல லாஸ் ஏஞ்சல்ஸ் போக 5 வழிகள் இருப்பதாகவும் அதில் ஒரு பாதை ஒரு புறம் கடல் ஒரு புறம் மலை என்று வரும் என பலத்தகவல்கள் கூறினார் ராம்.. அந்தப்பாதையில் போகலாமே என்றோம்.. அது நாம போற ஊருக்கு அடுத்துதான் ஆரம்பிக்கிது என்றார் கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருந்தது நேரம் இருந்தால் போகலாம்..

என்று எங்களை சமாதானப்படுத்தினார் ராம். அடுத்த ஒருமணிநேரம் நன்கு உறங்கிவிட்டோம்.. கார் ஓரிடத்தில் நின்றபோது விழித்தோம் அது ஒரு பெட்ரோல் பங்க் காருக்கும் எங்களுக்கும் உணவு இங்கு தான் மணி மதியம் 2ஆகி இருந்தது இன்னும் எவ்ளோ தூரம் என்றோம்.. கிட்டத்தட்ட வந்துவிட்டோம் இன்னும் 20 மைல்கள் தான் சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றார். பிரியாணி பொட்டலத்தை பிரித்தோம்.. ஆச்சர்யமடைந்தோம்.! 

ஆம் அதில் "ஆட்டுக்கால்" பிரியாணி வைத்திருந்தார்கள் மட்டனில் லெக் பீசா.! நல்லவேளை நான்கு பேருக்கும் சேர்த்து 2 பிரியாணி 4 தயிர்சாதம் தான் வாங்கியிருந்தோம்.. பிரியாணியை ஷேர் செய்து கொண்டோம் ஆனால் ஒரு கால் அப்படியே குப்பைக்கு தான் போனது. ஓட்டல் கடையில் 4 துண்டு இறாலை சாப்பிட்ட வேகத்தை பார்த்து நம்மை ராஜ்கிரண் ரேஞ்சுக்கு தவறாக எடை போட்டு பார்சல் கட்டித் தந்து விட்டார்கள்.



கிளம்பினோம்.. அடுத்த 20 மைலும் ஒருபுறம் கடல் எங்கள் காருடன் பிரயாணித்தது அவ்வப்போது கண்ணாமூச்சி போல ஒளியும் பின் தெரியும் 15 நிமிடம் தான் மீனகம் வந்துவிட்டோம். பசிபிக் கடலுக்குள்ளேயே அமைக்கப்பட்டு இருக்கும் இந்த மீனகத்தின் பெயர் Monterey Bay Aquarium சுற்றுலா பயணிகளும் தெரிந்தனர் எவரைப் பற்றியும் கவலைப் படாது பிரெஞ்ச் கிஸ் அடித்துக் கொண்டிருக்கும் ஜோடியை கடந்து இதோ நுழைவாயிலுக்கு வந்துவிட்டோம் அட என்னா கூட்டம்..! காத்திருப்போம்...

வரும்...

No comments:

Post a Comment