Wednesday, 15 June 2016

டெரர் கனவு

#அதிபயங்கரக்_கனவு

மக்கள் நலக் கூட்டணியில் திமுக சேர்ந்து முழுமனதாக கலைஞர் வை.கோ வை தலைவராக ஏற்றுக் கொள்ள ஸ்டாலினும் இனி வை.கோ தான் என் தலைவர் எனச்சொல்ல ரஜினிக்கு போன் போட்டு இமயமலை போகும் போது என்னையும் கூட்டிட்டு போங்கன்னு அழகிரி வேண்டுகோள் விடுக்கிறார்.. கனிமொழி ஒரு பெரிய செல்போன் ஷோரூம் ஆரம்பித்து தொழில் அதிபர் ஆகிவிட.. கலைஞர் ஹாலிவுட் படங்களுக்கு தமிழில் வசனம் எழுதும் பணியில் பிசியாகிவிடுகிறார்..!

அத்வானியிடம் பிரதமர் பதவியை ஒப்படைத்து விட்டு மோடியும் ரஜினியிடம் இமயமலை பயணத்திற்கு புக்கிங் செய்ய.. இப்பவும் பயணம் தானா என ரஜினி வாய் விட்டு சிரிக்க நெருப்பு பறக்கிறது.. நெருப்புடான்னு எல்லாரும் அலற கடையில் ஒரு ரோஜா பாக்கு வாங்கி பொட்டலத்தை பிரித்தால் உள்ளே ஒரு மெமரிகார்டு.! என்னான்னு கேட்டா எல்லாம் கபாலி படப் பாடல்கள்.. என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்னு நொந்துகிட்டே..

நடந்தா எதிரில் ஒரு கோவில் வருது சார் சாமிக்கு ரெட் வெல்வெட் கேக் வாங்கி அர்ச்சனை பண்ணுங்க என்கிறார் பூக்கடைக்காரர்.. அப்படியே செருப்பு வைக்கிற இடத்துக்கு போன மணல்மூட்டை எல்லாம் அடுக்கி ஏ.கே 47 துப்பாக்கியோட இராணுவம் நிக்குது.! என்னான்னு கேட்டா செருப்புக்கு பாதுகாப்புன்னு சொல்ல இராணுவத்தின் வசம் செருப்பை கொடுத்துட்டு உள்ளே போனா அங்க D முன்னாடி E வரணுமுன்னு எல்லாரும் சாமி கிட்ட..

வேண்டிக்கிறாங்க.. பூசாரி தீபாராதனை காட்டிட்டு எல்லாருக்கும் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் பிரசாதமா கொடுக்குறாரு.. அப்போ பின்னாடி முப்பாட்டன் முருகன் கோவிலில் இருக்கும் வந்தேறி பெருமாளை வெளியேத்தணுமுன்னு ஒருத்தர் பஸ் கம்பியை பிடிச்சமேனிக்கு நின்னு கத்துறாரு... அப்போ த்தூன்னு" யாரோ துப்ப பார்த்தா கேப்டன்.!அம்மா முதலமைச்சர் ஆனதுக்கு அவரு அங்கபிரதட்சணம் செய்யறாரு அவரு முதுகில் ஒரு அம்மா ஸ்டிக்கர்.

மல்லையா தன் கடனெல்லாம் அடைச்சிட்டு போத்தீஸ் கடை எக்ஸ்லேட்டர் மேல நின்னு வெற்றி நிச்சயமுன்னு பாடிகிட்டுருக்க.. டோலி ஒருவர் புது சேலையில் வர நைஷ் டோலின்னு அவரை பாராட்டும் போது என் போன் ஒலிக்க.. என் மனைவி தான்.. சீக்கிரம் வீட்டுக்கு வாங்கன்னு அவ சொல்ல.. நான் அவசரமா வீட்டுக்கு போனா அங்கே 10ஆயிரம் வகையான உப்புமா செய்வது எப்படிங்கற புத்தகத்தை அவ படிக்கிறதை பார்த்துட்டேன்.

அலறி அடிச்சுக்கிட்டு எழுந்தேன்.. இப்ப மேல உள்ள ஹேஷ் டாகை திரும்ப படிங்க..

No comments:

Post a Comment