Monday 20 June 2016

Back Up 2

- சர் மைக் ஆர்தர் டேவிட்®

பெண்கள் எல்லாரும் தோனியைப் போல தங்கள் பிடிவாதத்தை எப்போதும் ஜடேஜா போல கூடவே வைத்திருப்பார்கள்.

கைதியின் கனவுகளுக்கு சிறைகளிலில்லை.

- சர் மைக் ஆர்தர் டேவிட்®

முற்றும் துறந்தவர் அக்காலத்தில் முனிவர் என்றும் இக்காலத்தில் கணவர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
- சர் மைக் ஆர்தர் டேவிட்®

ரெஃப்ரிஜிரேட்டர் வந்தபோது வந்தது தான்
உணவு பாதுகாப்பு மசோதா.
- சர் மைக் ஆர்தர் டேவிட்®

முயற்சியே செய்யாமல் "முடியாது" என்பவர்கள் எதையுமே முடித்ததில்லை...!

- சர் மைக் ஆர்தர் டேவிட்®
வெங்கடேஷ் ஆறுமுகம்®

மேலிருந்து கீழாக கணவனின் தலை ஆடும் வீட்டில்.. அவன் வாழ்க்கை மேலானதாகவே இருக்கும்.
- சர் மைக் ஆர்தர் டேவிட்®

நின்ற இடத்தில்  நிற்கும் சைக்கிளை ஓட்டுவது பைத்தியகாரனும் பணக்காரனும்.
- சர் மைக் ஆர்தர் டேவிட்®

ஒரு பொண்ணு 6 மணிக்கு சந்திக்கலாம்ன்னு சொன்னா 5 மணிக்கே போய் காத்திருந்தா அது காதலி.. சொன்ன நேரத்தையே மறந்துட்டா அது மனைவி..

- சர் மைக் ஆர்தர் டேவிட்®

ஆடம்பரம் என்பது அங்குசம் free என்பதற்காக யானையை வாங்குவதே.

மறதி என்பது மட்டும் இல்லாமலிருந்தால் மனிதர்கள் அனைவரும் மனநோயாளிகளாக மாறியிருப்பார்கள்.!

கடவுளை அறிந்து கொள்வதும் மனைவியைப் புரிந்து கொள்வதும் ஒன்றே.

நம் அப்பா சொன்னது எல்லாம் "பாடம்" என்பதை அவர் "படம்"ஆன பின்பே புரிந்து கொள்கிறோம்.
- சர் மைக் ஆர்தர் டேவிட்®

அகத்தின் அழகு முகத்தில் தெரியாது.. "புரொஃபைல் பிக்சர்"

நிஜத்தில் மனைவியின் "கமெண்ட்டுகளை" கணவன் "லைக்"  செய்வதில்லை.!

தன் பெற்றோர்களை அம்மா அப்பா எனத் தாய்மொழியில் அழைத்து வளர்ந்த குழந்தைகள் அவர்களை முதியோர் இல்லத்தில் விடுவதில்லை.

கணவன் முகத்தில் தொலைத்த"நகை"மனைவி கழுத்துக்கு இடம் மாறிவிடும்..!
 
விரும்புவதை செய்பவர்களை விட விரும்பியதை ரசித்து செய்பவர்களே வெற்றியடைகிறார்கள்....

பிறர் கட்டியிருக்கும் சேலையை பார்த்து ஆசைப்படும் பெண்கள்... அதே சேலையைத் தான் முன்பு தேர்ந்தெடுக்காது விட்டிருப்பார்கள்.!

அன்னிக்கு நான் ஃபேஸ்புக்கில் இருக்கேன்னு சொன்னா எல்லாரும் ஆச்சரியமா பாத்தாங்க இன்னிக்கு நான் ஃபேஸ்புக்கில் இல்லைன்னு சொன்னா ஆச்சரியமா பார்க்கிறாங்க.

நல்லவனாக வாழ்ந்தால் வாழும்போது நரகம் இறந்த பின்பு சொர்க்கம்.. கெட்டவனாக வாழ்ந்தால் வாழும்போது சொர்க்கம் இறந்த பின்பு நரகம்.

கோவிலுக்கு போயிருந்தேன் கோவில்,உண்டியல்,பிச்சைக்காரன் எல்லாரும் இருக்காங்க ஆனா என்ன ஸ்டேட்டஸ் போடுறதுன்னு தான் தெரியலை.

பூஜைகள் செய்து அபிஷேகம் நடத்தி அர்ச்சனை செய்ய கடவுளுக்கு பூசாரியும் கணவனுக்கு மனைவியும் அமைந்திருக்கிறார்கள்.

ஊர் ஊராக மனுஷன் நடந்தே போய்கிட்டு இருந்த காலத்துல வழிச்சோறு என்பது புளிச்சோறே.

வீட்டில் சிலபொருட்களை எதற்கு வாங்கினோம் என்றே தெரியாமல் வைத்திருக்கிறோம் நம் கிரிக்கெட் டீமில் ரவீந்திர ஜடேஜா போல.


மனிதனை வெயிட் மிஷினில் குறைவாகவும் ATM மிஷினில் நிறைவாகவும் காட்டுகிற வாழ்க்கை வாழவேண்டும்.

மனிதனின் களவுள்ள நாக்கு பாம்பின் பிளவுள்ள நாக்கை விட கொடியது.

கோவில் கோபுரத்தை விட மனிதனுக்கு செல்போன் கோபுரங்கள் மதிப்புமிக்கதாக ஆகிவிட்டன..!

தேர்தலில் மூன்றாவது அணி அமைப்போம் என எந்த கட்சியாவது சொன்னால் அது எல்லா கூட்டணியிலிருந்தும் கழற்றி விடப்பட்ட கட்சி என்றறிக.

எல்லா பெண்களுக்கும் ஏன் டெடிபியர் பிடிக்கிறது என்றால் அவை பதில் பேசுவதில்லை.

உலகம் நம்மை உத்துப் பாக்கணும்ன்னா நாம கொஞ்சம் மங்கலா தெரிஞ்சா கூட போதும்.

நமது வாழ்க்கை கமல் படம் மாதிரி சில வருடங்கள் கழித்து தான் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு நண்பன் எதிரியாவதை விட மிகக் கொடூரமானது அவன் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் ஆவது.

மரங்கள் நடுவதிலாவது நாம் அசோகர் ஆவோம்.

எல்லா வாட்ஸ் அப் குரூப்பிலயும் ஒரு ரவீந்திர ஜடேஜா இருக்கிறான்.! எதுக்கு அங்க இருக்கான்னு யாருக்கும் தெரியாது.

தினமும் இரவு உறங்கும் போது நம் அருகிலேயே அமர்ந்திருக்கும் மரணம் நாம் காலையில் விழித்தவுடன் எழுந்து சென்றுவிடுகிறது.

பணமே குறியாக இருந்து அதை மட்டுமே சேர்ப்பவன் குடும்பத்தை தொலைத்து விடுகிறான்.

புரிதல் என்பது பிறருக்கு முன் விட்டுக் கொடுக்காமலும் தமக்குள் விட்டுக் கொடுத்தும் இருப்பதே.

- சர் மைக் ஆர்தர் டேவிட்®

அண்ணாந்து கடவுளை வேண்டுகின்ற அனைத்துக் கணவன்மார்களின் வேண்டுதலும் மேல் முறையீடு தான்.

வீட்டிற்குள் தன்னை பரபரப்பாக தேடிக் கொண்டிருபவனை ஒளிந்திருந்து பார்த்து ரசிக்கின்றது பைக் சாவி.

எல்லா அலுவலகங்களும் படு சுறுசுறுப்புடன் வேலை பார்ப்பது லஞ்சம் வாங்கும் போது மட்டுமே.

போதிமரங்களை வெட்டிவிட்டு புத்தர்களை தேடுவதும் புத்தர்களை வெட்டிவிட்டு போதிமரங்களை நடுவதும் உலகில் வாடிக்கையாகிவிட்டது.

- சர் மைக் ஆர்தர் டேவிட்®

மடியில் கனம் இருப்பதை விட தலையில் கனம் இருப்பதே ஆபத்து.

வரும் காலங்களில் தாய் தந்தையர் மடிகளில் குழந்தைகள் இருப்பதை விட அதிகநேரம் லேப்டாப்புகளே இருக்கும்.

வெற்றி கண்ணை மறைக்கும்.. தோல்வி கண்ணைத் திறக்கும்.

திருமணம் "ரொக்கத்தில்" நிச்சயிக்கப்படுகிறது.

பெண்ணியம் பேசும் பெண்களிடம் மட்டும் ஆண்கள் கண்ணியம் காட்டுகிறார்கள்.

மனைவியிடம் சொல்லும் உண்மைக்கு மரியாதை கிடைப்பதில்லை.

தோல்வியைக் கண்டு பயப்படத்தேவையில்லை வெற்றியைத்தக்க வைக்கவே பயப்படவேண்டும்.

மெளனம் சங்கடத்தின் அறிகுறியும் கூட.
- சர் மைக் ஆர்தர் டேவிட்®

சட்டத்தின் ஓட்டைகள் கரன்சிக்களால் மட்டுமே அடைக்கப்படுகிறது.

பிழைக்கத்தெரியாதவனா இருக்கியேன்னு யாரையாச்சும் கேட்டா அவன் நேர்மையானவன்னு அர்த்தம்.

வெள்ளைக்காரன் கிட்ட இருந்து நம்ம நாட்டுக்கு முதலில் மம்மி வந்தது... இப்போ மதர்ஸ் டே வருது.!

எந்தக்கவலையும் இன்றி மக்கள் சந்தோஷமாக இருக்கும் இடங்களில் நீதிமன்றமும் சேர்ந்துவிட்டது.

பல ஆயிரம் செலவழித்து யாகம் நடத்தினால் கிடைக்கும் அதே புண்ணியம் பசித்த 4 பேருக்கு உணவளித்தாலே கிடைக்கும்.

தப்பு செய்யணுமுன்னு நினைக்கறவன் இருட்டுற வரைக்கும் எல்லாம் காத்து இருக்கமாட்டான்.!

உலுக்கி உயிர்பலி வாங்கிய பூகம்பத்தில்
உயர்ஜாதிக்காரனும் தாழ்ந்த 
ஜாதிக்காரனும் இறந்து கிடந்தனர்
அருகருகே.

வாழ்க்கை கமல் படம் மாதிரி சில வருடங்கள் கழித்து தான் புரிந்து கொள்ள முடிகிறது.

சாத்தான் வேதம் ஓதுகிறது என்பதற்காக கடவுள் ஒப்பாரி வைக்கமாட்டார்.

- சர் மைக் ஆர்தர் டேவிட்®

சாலை விபத்தில் சிதறிக்கிடந்த உயிர்களை படம்

எடுத்தாகிவிட்டது,பேருந்தில் யாருக்கும் தெரியாது

ஒரு பெண்ணை படம் எடுத்து பின்பு தெருவோரம்

நடந்த ஒரு கணவன் மனைவி சண்டையைப் படம்

பிடித்து வீட்டு மாடியில் நின்று போவோர் வருவோரை

காமிராவில் சிறை பிடித்து, மாலை கடற்கரை போய்

அங்கு காதலர் பலரை அவர்களுக்கு தெரியாமலேயே

திரைப்படமே எடுத்து, எடுக்க எதுவுமே இல்லாத போது

காமிராவை தன்பக்கமே திருப்பி தன்னையே செல்ஃபி

எடுத்து அவ்வப்போது குழம்புகிறான்! இந்த படங்களில்

எதை முகனூலில் பதிவிட்டால் லைக் அள்ளும் என்று.!


காந்தியின் சிரிப்பில் பிராந்தியை காண்போம்.

கூட்டணியில் சேரலாம் இதயத்தில் இடமுண்டு - அரசியல் வாழ்க்கை.!
கூட்டணியில் சேரலாம் இதயத்தில் இடமில்லை - திருமண வாழ்க்கை.!

முன்பு அம்மா ஆட்சியில்"பவர்கட்" யூபிஎஸ்சுக்கு.. இப்போ ஓ.பி.எஸ்சுக்கு.!

காந்தி நோட்டு வராத கடனே காந்தி கணக்கு எனப்படும்.!

பிடித்த புத்தகத்தை ஒரு லார்ஜ் ரெமி மார்ட்டின் பருகிக் கொண்டே வாசிப்பதே சொர்க்கம் எனப்படும்.. (பின் குறிப்பு... ஒரு லார்ஜ் மட்டுமே அனுமதி

பெண்கள் பொறுமையாக சமைப்பார்கள்..! ஆண்கள் அருமையாக சமைப்பார்கள்.!

#நளபாகம்

முதலாளி திட்டுவதும் "பாஸ் வேர்டே" #மறைத்து_வைத்துக்கொள்வதால்

எப்பவும் ஒரே மாதிரி"படம்"எடுக்கும் பாம்பை மட்டும் ஏன் நம் போராளிகள் முகநூலில் விமர்சிப்பதில்லை.!!!!

அன்று பேனா எழுதுதான்னு கிறுக்கிப் பார்த்தவங்க எல்லாம் இன்று வலைப்பதிவர் ஆகிட்டாங்க.!

மனிதனுக்கு வாழ்வில் பிரச்சனை வர இரண்டே காரணங்கள்.. ஃபிகர் வருவதும் சுகர் வருவதும்.!

காற்றடைத்த பையடா என்பது மனித உடற்கட்டும்.. லேஸ் பாக்கெட்டும்..!

எல்லா பெண்களும் ஃபிகர் அல்ல.. ஆனால் எல்லா எண்களுமே ஃபிகர்.!

OLD

அட! "பவர்கட்டு"ன்னு சரியாத்தான்யா சொல்லியிருக்காங்க...! #சம்சாரம்_அது_மின்சாரம்

லவ் பண்ற பொண்ணோட நம்பருக்கு கால் பண்ணும் போது நம்பர் ரொம்ப நேரம் பிசியா இருந்தா வருவதற்கு பெயர் தான் திகில்.!

பிச்சைப் பாத்திரம் போன்ற தோற்றத்தில் இருக்கும் DTH ஆண்ட்டெனாவுக்கு பொருத்தமான பேர் தான் "டிஷ் "ஆண்ட்டெனா.!

மனைவி குத்தி பேசுவதை விட குத்தலாக பேசுவது எவ்வளவோ மேல்!

இன்றைய காதலர்கள் தங்கள் சிம்கார்டை மட்டுமல்ல ஃபேஸ்புக் பாஸ்வேர்டையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதில்லை.!

டெலிட் பட்டன் இல்லையென்றால் எந்த மொபைலும் விற்காது.!

பேட்டை ரவுடி கிட்ட போய் முறைக்கிறதும்.. கட்டின மனைவி கிட்ட எந்த விஷயத்தையாவது மறைக்கிறதும் ரொம்ப டேஞ்சர்..!

அண்ணா என்று சொல்லி கட்சிகள் பல வளர்ந்துள்ளன..! காதல்கள் பல அழிந்துள்ளன..!

"புதியகீதை"
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது.! #காப்பி&பேஸ்ட்

அடிக்கடி இரவு தாமதமாக வீடு திரும்பிய யாரோ ஒரு கணவர் தான் Self Serviceஐ கண்டுபிடித்திருக்கக்கூடும்..!

முதியோர் இல்லத்தில் பெற்றோர்கள் இருக்க பெயர்கள் மட்டும் குடும்ப அட்டையில்.!

OLD
உடல்கள் நெருங்கிய பின் உள்ளங்கள் விலகி விடுகின்றன.!

ஓவர்களை டர்ன் ஓவர்களாக மாற்றியவர்களே கிரிக்கெட் சூதாடிகள்.!

எதையும் கணவன் ஒழுங்காக செய்யமாட்டான் என மனைவிக்கும்... எவ்வளவு சிறப்பாக செய்தாலும் மனைவிக்கு திருப்தி இருக்காது என கணவனுக்கும் நன்கு தெரியும்.!

மனதில் உறுதி வேண்டும் என்ற வார்த்தை புடவைக் கடைகளில் காத்திருக்கும்  கணவனுக்கு அடிக்கடி நினைவில் வரும்.!

இதோ 5நிமிடத்தில் ரெடியாகிடுறேன் என்று மனைவி சொன்னவுடன்.. நீங்கள் அடுத்த 1 மணிநேரம் நிதானமாக உங்கள் வேலைகளை தொடரலாம்..!

மனைவியால் மட்டுமே கண்டுபிடிக்கப்படும் கணவனின் பொய்கள்.!

மேட்சிங் பிளவுஸ் எடுக்க பல மணி நேரம் செலவிடும் மனைவியிடம் தெரிகிறது இனியாவது நல்ல மேட்சிங் செலக்ட் செய்யணும் என்ற வெறி.!

நீங்கள் சொன்னதை செய்யாவிட்டால் மனைவிக்கு கோபம் வரும்..! இதையே அவர்கள் செய்யும் போது நம்மிடம் சொல்வதே இல்லை.!

5 நிமிடங்களில் ஒரு பெண் சேலை எடுக்கிறாள் என்றால் கட்டாயம் அதைக் கட்டப்போவது அவள் இல்லை..!

பிள்ளைகள் ஆசைப்படுகிறது என கேட்டதை சட்டென வாங்கித்தராதீர்கள்.! அது மனைவிக்கு தெரியாமல் நீங்கள் வைத்திருக்கும் சேமிப்பை கண்டறிய ஏவப்பட்ட சோதனை.!

மனைவிக்கு நாம் தரும் கிரெடிட் கார்டு உண்மையில் அவர்களுக்கு டெபிட் கார்டே.!

மாதம் 50ஆயிரம் சம்பாதிப்பவன் வீட்டிலும் 5லட்சம் சம்பாதிப்பவன் வீட்டிலும் ஒலிக்கும் பெண்களின் குரல் "சம்பளம் பத்த" மாட்டேங்குது..!

 நம் போனில் மனைவி அட்டெண்ட் செய்யும் போது யாரோ ஒரு பெண் ராங் நம்பரில் "அவரு இல்லிங்களா" என்று கேட்பதே ஏழரை எனப்படும்.!

தான் மாட்டிக்கொள்ளும் அத்தனை தடயங்களையும் விட்டுச்செல்லும் ஜீவராசிக்கு பெயர் கணவன்..!

மனிதனின் ரகசியங்கள் மனதிற்குள் மட்டுமல்ல செல்போனிற்குள்ளும் அடங்கியிருக்கும்.!

ஒரு வாரம் மனைவி ஊரில் இல்லாதிருந்தால் கொண்டாட்டம்.! ஒரு மாதம் இருந்தால் திண்டாட்டம்.!

மனைவியிடம் திட்டு வாங்க திட்டமிட்டு செய்யும் செயல் கணவன் மார்க்கெட்டுக்கு போய் வருவதே..!

"நல்லதா பாத்து எதையுமே வாங்கத் தெரியுதா" என மனைவி நம்மிடம் கேட்கும் போது அவளையே பார்ப்பது தான் அர்த்தம் பொதிந்த பார்வை..!

எந்த மனைவியும் தன் கணவனுக்கு நகைச்சீட்டு போட்டு நகை வாங்கித்தருவதில்லை..!

தமது மேலதிகாரிகளின் பெயருக்கு அர்ச்சனை செய்வதில் அனைவரும் கோவில் குருக்களை மிஞ்சி விடுகிறார்கள்.!

அரசனுக்கும் பெண்களுக்கும் புறமுதுகு காட்டுவதால் தெரிகிறது "அவ"மானம்..!

பெண்கள் புறமுதுகு காட்டுவதால் தான் அவர்களை விரட்டுகிறார்கள்.!

இன்று எல்லோரின் வீட்டிலும் ஒரு மினி சேலைக்கடை இருக்கிறது..!

மனைவியின் கோபம் அழகாக தெரிந்தால் அவன் இதுவரை அடி வாங்கியதில்லை என்றறிக.!

பழியை ஏற்க கருப்பு ஆடு இருக்கையில் எல்லா வெள்ளாடுகளுக்கும் கொண்டாட்டம் தான்.

வாழ்க்கை ஒரு ஆசிரியனாய் நடத்தும் பாடங்கள் நமக்கு தோற்றபின்பே புரிகிறது.!

டப்பா டப்பா வீரப்பா எப்படா கல்யாணம்... மாசம் பொறக்கட்டும் மல்லியப்பூ பூக்கட்டும்... எம்ஜிஆரு சண்டை... பானுமதி கொண்டை... கொண்டை மேல கொக்கு... கோழி...... (சென்ஸார் )

இது போல சிறு வயதில் விளையாடி பாடிய பாடல்கள் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்சில் போடவும் .. ரெடி ஸ்டார்ட் மீஜிக் ....

நான் ஒரு வாய் பேச முடியாத (!?!?!?) ஊமை என்னுடன் பிறந்தவர்கள் 6 பேர் அதில் மூவர் பெண்கள் அதில் என்னைப்போல குறைபாடு உடையவர்கள் இருவர்.. என் தாய் தந்தை இருவருமே ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார்கள்.. தம்பி ஒருவனுக்கு தொழிற்சாலை விபத்தில் கை ஊனமாகிவிட்டது.. மிகுந்த சிரமத்தில் இருக்கும் எங்கள் குடும்பத்துக்கு நீங்கள் செய்யும் சிறு உதவி... இது ஓல்டு ஸ்டைல் பாஸ்.. சுருக்கமா இப்படி கேளுங்க...

#ப்ளீஜ்_லைக்_மை_ப்ரொஃபைல்_பிச்சர்
------
பருத்திச்செடியில் பஞ்சாக இருந்தவரை பிரச்சனைகள் இல்லாமல் இருந்தன தாலியும் பூணுலும்.

தமிழக அமைச்சர்கள் அனைவருமே ஜான்டிரோட்ஸ்களே.


நமது பிரச்சனை என்னவென்று தெரிந்துகொள்ள ஆவலாய் இருப்பவர்களிடம் இருந்து நமக்கு ஆறுதல் கிடைக்காது.

- சர் மைக் ஆர்தர் டேவிட்®

அடிக்கடி டாப் அப் செய்பவர்கள் வாழ்க்கையில் டாப்பாக வருவதில்லை.

- சர் மைக் ஆர்தர் டேவிட்®

"கல்லானாலும் கணவன்" ஓ அதான் அம்மி மிதிக்கிறாங்களா..!

மனைவி நங்கென வைத்திடும் பாத்திரஒலி

போர் சங்கென முழங்கிடும் கேள்.
-----

ட்விட்டுஸ்...

தந்தையின் கஷ்டத்தை புரிந்து கொண்டால் வாழ்வில் பொறுப்பு வரும்.. அன்னையின் அன்பை புரிந்து கொண்டால் வாழ்வில் சிறப்பு வரும்.

சுத்தம் சோறு போடவில்லை 

காலியாக இருக்கிறது

அரிசிப்பானை.

பெண்ணியம் பேசும் பெண்களிடம் மட்டும் ஆண்கள் கண்ணியம் காட்டுகிறார்கள்.

சாவதற்கு வாழ்வது வாழ்க்கையல்ல.. சாவதற்குள் வாழ்வதே வாழ்க்கை.

அத்வானிக்கு பத்ம விபூஷன் விருது மத்திய அரசு பரிந்துரை - செய்தி.

அதான் ஏற்கனவே பத்ம விதூஷகன் விருது தந்துட்டாங்களே.

ஓட்டலில் ஒரு தம்பி சிக்கன்லெஸ் பிரியாணின்னு ஆர்டர் பண்றாரு.. அவருக்கு குஸ்கான்னு கேக்க கெளரவ குறைச்சல் போலிருக்கு.

IT கம்பெனி வேலையும் கிரிக்கெட் விளையாடுறதும் ஒண்ணு.! சீக்கிரமே ரிடையர்ட் ஆகிடலாம்.

கோழிக்கு நான்கு கால்கள் இருந்திருக்கலாம் என்று பிராய்லரில் லெக்பீஸ் வாங்கும் போது தோணுது.

அய்யப்பனுக்கு மாலை போட்ட பின் பிரியாணி கடையை கடக்கும் போதெல்லாம் மனதுக்குள் தோன்றும் வசனம்.. நீ மறுபடியும் பழைய பன்னீர்செல்வமா வரணும்..!

"காலையில வெள்ளென வந்து காசை வாங்கிக்கிறேன்"என்று அக்மார்க் மதுரை தமிழ்ல பேசுறாரு சேட்டு.. நம்பிள் தான் இன்னும் இந்தி கத்துக்கோ மாட்டேன்றான்!

மாப்ள நியூ இயர் நைட் தான் சரக்கடிக்கறது லாஸ்ட்டுன்னு சொன்ன இன்னிக்கு திரும்ப வந்துட்ட?"நேத்து அடிச்ச ஹேங் ஓவர் மச்சி நாளைக்கு பாரேன்! #கிழிஞ்சது

ஜவுளிக் கடையில் 2பெண்கள்.. அந்த யெல்லா பார்டரில் அரக்கு கலர் சேலை பாத்தியா எப்படியிருக்கு.? அட ஆமா சொல்வதெல்லாம் உண்மையில நம்ம லட்சுமி ராமகிருஷ்ணன் கட்டிகிட்டு வந்தாங்க அது தானே.. #இப்டி_பண்றிங்ளேம்மா

10 நிமிஷத்துல ரத்தம் கொடுக்காட்டி செத்துடுவான்னு ஒரு மெகா சீரியல்ல காட்டி தொடரும் போட்டாங்க இது பாத்து10 நாள் இருக்கும் இன்னிக்கு அதே சீரியல்ல ரத்தம் கேட்டு போன் பண்ணிட்டு இருக்காங்க.! இங்க10நாளுதான்10நிமிசம்போல!

தாமதத்திற்கு ஆபிஸில் தகுந்த காரணம் சொல்ல தயங்கும் நாளில் பஸ் ஸ்டிரைக் நடப்பது தான் அதிர்ஷ்டம் எனப்படும்.

அடித்து நொறுக்கப்பட்ட சேதாரம் 5 %முதல்.. அதெல்லாம் வேணாம் மொல்லாளி நீங்க அடிச்சு நொறுக்கி செஞ்ச நகையில சேதாரம் ஆன தங்கத்தை மட்டும் எங்களுக்கே தாங்க போதும்.

பெண்களுக்கு கனவுகளில் ராஜராஜ சோழன் போல வரும் ராஜகுமாரன் நிஜத்தில் 23ஆம் புலிகேசியாகவே வருகிறான்.

மைண்ட் வாய்சை கேட்ச் பிடிக்கும் தகுதி வந்து விட்டால் திருமணமாகி 10 வருடங்கள் முடிந்து விட்டது என அர்த்தம்.

மனைவியின் தனி ஆவர்த்தனம் சரி ஆனால் அதற்கு வாத்தியமே நாம் தான் என்பதே பீதியான விஷயம்.

வரும்போது ஒரு கிலோ ஆலிவ் ஆயில் வாங்கிட்டு வாங்க.. (ஊர்ல இருந்து அவங்கம்மா வர்றாங்க) வரும்போது அரைக்கிலோ பாமாயில் வாங்கிட்டு வாங்க..(ஊர்ல இருந்து எங்கம்மா வர்றாங்க)

பல கணவன்மார்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த ஒரே அரசியல் தலைவர் மன்மோகன் சிங் தான்.

புடவை எடுக்கப் போறேன் என் கூட வர்றீங்களா..? காய்ச்சல் வர்றா மாதிரி இருக்கும்மா.. மீனிங்ஃபுல் டயலாக் டெலிவரி

மனைவியை அசத்த காலையில எழுந்து காபி போட்டு எழுந்த பின் கொடுத்தேன்.. என்ன திருட்டுத்தனம் செஞ்சிங்க? திடீர்னு இந்த ஐசு.. சே என்ன உலகமடா இது!

தியேட்டர்ல ஒருத்தரு மொபைலில் பெண் முனகுவதை நோட்டிபிகேஷன் சவுண்டா வச்சிருக்காரு..அதுவும் அடிக்கடி முனகுது வேற ஏதோ படம் பாக்குற ஃபீலிங் வருது #மாத்தி_தொலைய்யா_சவுண்டை

மச்சி என் ஆளு டுபாக்கூரோன்னு ஒரு டவுட்.. ஏன் மச்சி அந்த டவுட்? நேத்து KFC போகலாம்ன்னா கையில அவ்ளோ காசு இல்ல.. நான் வாங்கிட்டு வர்றேன் டியர்ன்னு சொல்லி இருந்த காசுல தள்ளுவண்டி கடையில சிக்கன் 65 வாங்கி KFC டப்பால போட்டு எடுத்துட்டு போய் தந்தேன் சாப்ட்டுட்டு சூப்பர்டா செல்லம்ன்னு பாராட்டிட்டு போறா.. இவ KFC போர்டு தான் பாத்திருப்பா போல அதான் மச்சி டவுட்.!

பாஸ்ட் ஃபுட் எனும் போதெல்லாம் காதில் பாஸ்ட்டா புட்டுகிலாம்ன்னு தான் கேக்குது.

உங்க மாமா அந்த எம்பியோட க்ளாஸ் மேட்டாமே ஒரு சின்ன உதவி.. சொல்லுங்க சார் யாருக்கும் வேலை வாங்கணுமா? இல்லிங்க.. அட்மிஷன் ஏதாவது? அதுவும் இல்லிங்க.. சிபாரிசு கடிதம் ஏதும்? அட எதுவுமே இல்லிங்க திருப்பதி போறேன் ஒரு 20 லட்டு வேணும் அதுக்கு சொன்னா போதும். #யோவ்_துப்பறதுகுள்ள_ஓடிடு

ஜவுளிக்கடை சேல்ஸ் மேன்: ஸார் நீங்க ஆட்டோ டிரைவர் தானே

வந்தவர் : அட ஆமாப்பா எப்படி கண்டுபிடிச்ச

சேல்ஸ் : பின்ன சட்டைக்கு 2 மீட்டர் துணி கிழிக்கும் போது தம்பி பாத்து மீட்டருக்கு மேல ஏதுவும் போட்டு கொடுன்னு கேக்குறிங்களே.!

சாரை தெரியுதுங்களா ஃபேஸ்புக் ட்விட்டர் எல்லாத்துலயும் பெரிய பிரபலம்..! அடப்பாவமே ஸார் சாப்பாட்டுக்கு என்ன பண்றாரு.?

தெளிவான முடிவுகள் கலக்கத்தை போக்கும்.. ஆனால் கலக்கத்தில் தோன்றாது.

"உன் வயசுல நான் ஸ்கூலில் படிக்குறப்ப" என்ற வார்த்தைக்கு பின் பேசுவது அத்தனையும் பொய்யே.

க்ளினிக் வந்து காத்திருந்த ஒரு அம்மா 9:00 மணிக்கு பரபரப்பானங்க குறுக்கும் நெடுக்குமா நடந்தாங்க அங்க காமெடி காட்சி ஓடிகிட்டு இருந்த டிவியை வெறிச்சு பாத்தாங்க ஒருவித படபடப்பு தெரிஞ்சது... நர்ஸ் ஓடிவந்து என்னம்மா ஏதும் பிரச்சனையான்னு கேக்க ஆமாம் சீக்கிரம் சன் டிவி போடு தென்றல் போட்டுருப்பாங்கன்னுது.! #இந்த_அம்மாவுக்கு_தீவிர_சிகிச்சை_தேவைப்படுமோ

மனநல மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு நம் மீது ஒரு சந்தேகம் நம்மைப் போலவே தானா பேசிகிட்டு போறாங்க ஆனா இவனுங்க மட்டும் எப்படி வெளியே இருக்காங்க.? #ஹெட்செட்_அலப்பறைகள்

OLD
டாஸ்மாக் பாரிலும் இருக்கும்  ப்யூட்டி பார்லரிலும் இருக்கும் #வெள்ளரித்துண்டுகள்

ஹாரன் அடிச்சு நகந்தவனும் இல்ல..! அலாரம் அடிச்சு எழுந்தவனும் இல்ல.!

டொம்..ணங்..பளார்..தொம்..டமார்.. படார்..ஜிலிங்.. இவை ஒலிகள் மட்டுமல்ல மனைவியின் கோப மொழிகள்...!

ரேஷன் கடையை தமிழில் நியாய விலைக் கடை என்பவர்கள் மறந்தும் நியாய எடைக் கடை என்று சொல்வதில்லை.!

என்னா வியாபார தந்திரம்..! பள்ளிக்கூடத்துக்கு பக்கத்திலேயே அடகுக்கடை.!சூப்பருங்கோ.!

- சர் மைக் ஆர்தர் டேவிட்....




பஸ் ஸ்டாப்புல நிக்க வேண்டிய பஸ்சும் "பாருக்கு" போறவன் பைக்கும் கொஞ்சம் தள்ளி தான் நிறுத்தப்படும்...!

பாட்டியும் வடை சுட்டுச்சு காக்காவும் வடை சுட்டுச்சு ஆனா திருட்டுப்பட்டம் காக்காவுக்கு தான்..!

நீதி: சுட வேண்டியதை தான் சுடணும்..!

ஒரு பெண் தனக்கு புடவை எடுக்கும் நேரம் மெகா சீரியல் போல"பல ரவுண்டு..! தன் மாமியார்க்கு எடுக்கும் நேரம் அட்வர்டைஸ்மெண்ட் போல"சில செகண்டு.!

பாட்ஷாக்களை மாணிக்கம் ஆக்குவதே திருமணம்!

பவுன்ஸ் ஆகும் செக் கொடுப்பவர்களும்"செக்கிழுத்த செம்மல்களே"

"எப்ப வீட்டுக்கு வருவிங்க" என்ற மனைவியின் கேள்விக்கும்... "எப்ப நீ ரெடியாவே" என்ற கணவனின் கேள்விக்கும்.. பொய்யே பதிலாக வரும்..!

மூன்றாவது நாளாக ஃபிரிட்ஜ்ல இருந்து எடுத்து சுட வைச்ச குழம்பு.!

ஓல்டு இஸ் கோல்டுங்கறத தப்பா புரிஞ்சுகிட்டவன் தமிழன்..!

கேட்பவர்களிடம் புடவை விலையை மட்டும் சற்று "அதிகமாக" சொல்லும் பெண்கள் தங்கள் வயதினை "குறைத்தே" சொல்கிறார்கள்.!

கேர்ள்பிரண்ட் இல்லாதவன் தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர்வதில்லை....!

நாலஞ்சு பேரு சேர்ந்தா தான் நமக்கு தைரியமே வருது இருட்டுக்குள்ள போறதுக்கும்...! இந்தியாவின் தேசியகீதம் பாடறதுக்கும்...!


சாப்பாட்டுக்கு மட்டும் வாயை திறந்து பழகி விட்டால் வீட்டில் சந்தோஷம் கரை புரண்டு ஓடும்..!

பறவைகளில் மிகவும் அறிவான பறவை காகம்..!

அது கரண்ட் கம்பத்துல உக்காந்து இருக்கும் போதே எங்களுக்கு தெரியும்...!

குழந்தைகளை மிரட்ட பூச்சாண்டியும் கணவனை மிரட்ட உப்புமாவும் கண்டுபிடிக்கப்பட்டது.!

"எப்பவேணா போகும்" இதன் சுருக்கமே EB எனப்படும்...!

இந்தியாவில் தனியார் தயாரிக்கும் சட்ட விரோதமில்லா ரூபாய் நாணயங்கள்! #ஹால்ஸ்மிட்டாய்

நம் பக்கத்து சீட்டில் அழகான பெண் உட்கார வருகையில் கூடவே ஸார் கொஞ்சம் சீட் மாறிக்கோங்க என்ற கண்டக்டரின் குரலும் சேர்ந்து வரும்.!

டெஸ்ட், ஒருநாள், 20-20என கிரிக்கெட் வேகமானது போல மனிதனின் ஆயுளும் வேகமாயிடுச்சு வயதுகள் 100,70,இப்ப 50ஐயே தாண்ட மாட்டேங்குது.

அவித்த முட்டையில் ஆம்லேட் போட முடியாது.

தேர்வுகளில் மார்க்குள் வைப்பதற்கு பதில் லைக்குகள் வைத்தால் ஃபெயில் என்பதே இருக்காது.

தென்றல், நிலா, வானம், ரோஜா
வசந்தம், பூக்கள், புறா, தேவதை
வாசம், நேசம், பாசம், சுவாசம்
அழகு, ஒளி, கண்கள்,மழை,காதல்
இதயம், நெஞ்சம், மனம், உள்ளம்
இந்த வார்த்தைகள் ஏதுமின்றி 
ஒரு கவிதை சாத்தியமானது
உன் பெயர் எழுதுகையில்.!

கஜா வந்து பேட்டையில உட்டான் பாரு டகுலு
அத்த கேட்டதுமே அல்லாரும் அட்ச்சாங்க பிகிலு
கஜாவொட தங்காச்சியும் அயகில்லை அட்டு
அப்டி இர்ந்தாலும் அவனுக்கவ சேட்டுக்கட லட்டு
இத்த மீறி ஆரும் நூலுவுட்டா எகிறிடுண்டா செவுலு.

#ஒபாமா_முரசு

இந்தியாவில் மிச்செல் ஒபாமா செருப்பு அறுந்தது.! ஐ.நா. கண்டனம்.

ஒபாமாவுக்கு கொடுத்த டீ ஸ்டிராங்காக இல்லை.! அமெரிக்க உள்குத்து துறை அமைச்சர் பேட்டி.

பெல்ஜியத்திலிருந்து வந்த மோப்பநாய்களின் அறையில் ஏசி வேலை செய்யவில்லை.!
நாய் பயிற்சியாளர் குரைப்பு.

பெட்ரோல் தீர்ந்ததால் ஓபாமாவின் பீட்ஸ் கார் ஓடவில்லை.! ஒபாமா டிரைவர் பரபரப்பு பேட்டி

ஓபாமா அறையில் புகுந்த கொசுக்கள்.! தீவிரவாதிகள் சதியா.! அமெரிக்க அரசு பீதி..

இன்னும் சில நாட்கள் இது போல செய்திகளை தாங்கி வெளிவரும்...


ஒரு ப்ளாக் ஃபிரைடே ஷாப்பிங்கில் க்யூவுல நிக்காத கணவர்கள் அதிசயமே 

டொனால்டு டிரம்பட்டு சொன்னதெல்லாம் நடந்தா அது இங்கு அதிசயமே..

பாட்லக்கு விருந்தில் தயிர்சாதம் கொண்டுவர போட்டியின்றி இருந்தா அதிசயமே..

கோக் குடிக்கலேன்னா அதிசயமே..

Wi-Fi இல்லைன்னாலும் அதிசயமே..

No comments:

Post a Comment