Monday 20 June 2016

Back Up 1

இ இ இ

எல்லா இடத்திலும் அடி வாங்கித் திரும்புபவனே போராளி எனப்படுவான்.

@venkatapy: ஆசிரியர் பேசுறது புரியலைன்னா வாயை திறந்து சந்தேகத்தை கேட்டுடணும்.!மனைவி பேசுறது புரியலைன்னா வாயை மூடிகிட்டு சத்தமில்லாம போயிடணும்.!

@venkatapy: மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்பதற்கு ஆதாரமே"ஆதார்அட்டைகள்"

@risevenki: இன்று இரண்டு குழந்தைகளுக்கான போதிய இடைவெளி என்பது மெகாத் தொடர் ஆரம்பத்திலிருந்து அது முடியும் வரையே!

@risevenki: "இங்க நாங்க சந்தோஷமா தாம்மா இருக்கோம்"என்று மகள் சொன்னவுடன்..! அம்மாக்களின் அடுத்த கேள்வி உண்மையாவா சொல்லுற.?

@risevenki: ஏன் லேட்டு?என்ற ஒரே கேள்விக்கு வருகிறது லட்சக்கணக்கான பதில்கள்.!

@risevenki: "கூட்டணி தர்மம்"என்பது சீட் பிச்சை இடுவதே ஆகும்.!

@risevenki: "என் கணவர் சிங்கம்" என்று எதிர் வீட்டு பெண்ணிடம் என் மனைவி  பேசிக்.கொண்டிருந்ததை பார்த்து பெருமையுடன் நான் சொன்ன ஒரு வார்த்தை "மியாவ்"!!

@risevenki: தமிழ் பேசுவது போல வருங்காலத்தில் ரீ-சார்ஜ் செய்வதும் பெண்களுக்கு மறந்து போகலாம்..!

 வகுப்புக்கு புது ஆசிரியர் வருவதும் குருபெயர்ச்சியே..!

@risevenki: தேர்தலில் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் அரசியல்வாதியும்.. ஓட்டலில் சாப்பிட்ட உடன் ஓடாத நண்பனும் கிடைப்பதரிது.!

@risevenki: மேலுதட்டுக்கு மேலே பாலின் நுரை படிந்திருக்கும் குழந்தைகளை பார்த்தால் நினைவுக்கு வருகின்ற வரி மீசை வச்ச குழந்தையப்பா..!

@risevenki: ராகுல்: மம்மி காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணவா.?

சோனியா:ஏன் வெட்டிசெலவு44பேர் தானேFBயில் ஒரு குரூப் சாட் போடு போதும்.!

அருமையா சமைச்சிருக்கே என மனைவிக்கு கணவன் தரும் ஒரு பாராட்டை விடவா திருக்குறள் இல்லறத்தை பற்றி சிறப்பாக கூறிவிடப் போகிறது!

தேவதைகளுக்கு தங்கை இருந்தால் தேவதை என்னும் பெயர் இடம் மாறிவிடுகிறது.

கண்ணில்லாதவர் எழுதப்படிக்க டச் செய்தால் அது பிரெய்லி... கண்ணிருப்பவர் எழுதப்படிக்க டச்ஸ்க்ரீன் தொடுவார் டெய்லி...

"காற்றடைத்த பையடா"என்பது மனித உடற்கட்டும்.. லேஸ் பாக்கெட்டும்.

¶ஜுனியர் சாக்ரடீஸ்¶

ஃபேஸ்புக் சூழ்நிலை எச்சரிக்கை...!

நாளை ஓட்டு எண்ணிக்கை எனும் குறைந்த அழுத்த காற்று மண்டலம் உருவாக இருப்பதால் ஃபேஸ்புக் முழுவதும் இடியுடன் கூடிய ஸ்டேட்டஸ் மழை பெய்யும்.. 

அவரவரின் இன்றைய கணிப்பு ஜெயித்து விட்டால் புயல் வீசவும் வாய்ப்பு உள்ளது.. நாளை மாலை இது கரையை கடந்து விடும் என்பதால் அதுவரை...

அரசியல் பிடிக்காத பதிவர்கள் லாக் அவுட், ஆஃப்லைன் போன்ற பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்களை காத்துக் கொள்ளும்படி ஃபேஸ்புக் சூழ்நிலை ஆராய்ச்சி மையம் வேண்டிக் கொள்கிறது..!

பொய்யான வாக்குறுதிகள் தர அரசியல்வாதி ஆக வேண்டியதில்லை திருமணம் நடந்திருந்தால் போதும்.

மனதுக்குள் அழுவதை கண்டுபிடித்தவர்கள் கணவன்மார்களே.!

ரெண்டு பொண்டாட்டிக்காரன் அனுபவம் நாமும் பெற முகநூலில் ஆக்டிவாக இருந்தால் போதும்.!

ஆத்தா ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா ஆனா காய்கறி வளர்க்கலை..ஏன்னா ஆத்தா நான் வெஜ்.

கண்ணுக்கு தெரியாத கிருமியை விட கண்ணுக்கு தெரியும் கருமியே அபாயகரமானவன்.!

குடிக்கும் காபியை மீடியம்"ஆக குடிக்காதீர்கள் ஏனெனில் அதில்"ஆவி" பறக்கும்.!

மெதுவாக செய்து முடிக்க வேண்டிய வேலையை விரைந்து முடிப்பதும் பொறுப்பில்லாத செயலே.!

பெற்றோரின் அருமை பெருமைகளை அவர்கள் நம்மிடம் இல்லாதபோதே உணர்கிறோம்.!

முதல் குழந்தையின் மீது தாய் வைத்திருக்கும் பாசம் தான் உலகில் மிக உயர்ந்த பாசம்.!

தனிமை ஒரு இரட்டைவேடக்காரன்.. சிலருக்கு இனிமையையும் சிலருக்கு கொடுமையையும் வழங்கி ரசிப்பான்.!

10 வது மாடியில் இறங்க வேண்டியவனுக்கு லிப்டில் கதவுக்கருகே இடம் கிடைத்தால் அவன் ஒவ்வொரு மாடியிலும் கால் பதிப்பான்.!

உப்பு சப்பில்லாத என்பதற்கு உதாரணம் வானிலை அறிக்கையே.!

நம் ஊரில் இனி கொசுவர்த்தி ஸ்டாண்டுகளின் எண்ணிக்கையை செல்ஃபி ஸ்டாண்டுகள் முந்தக்கூடும்.!

செல்ஃபி ஸ்டாண்ட் பொருத்திய டேபிள் மேட் வந்தால் மிஸ்டு கால் குடுக்காம உடனே போயி வாங்கிருவாங்க.!

கோபத்தில் காதலி பேசும் வார்த்தைகள் ட்விட்டர்.. மனைவி பேசும் வார்த்தைகள் ப்ளாகர்.!

மங்கள்யானில் இருந்து சிக்னல் கட்டானா விஞ்ஞானிகளுக்கு கவலை.. செல்போன் சிக்னல் கட்டானா வலை ஞானிகளுக்கு கவலை.!

தேசிய வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை சுமாராக சுவாரஸ்யமில்லாம இருக்கும் ..ஏன்னா அங்க தான் இன்ட்ரஸ்ட் கம்மி..!

துணியை அடித்து துவைத்த காலங்களில் பெண்களுக்கு இப்போது இருப்பதை விட மன அழுத்தம் குறைவாக இருந்திருக்கலாம்.!

சிலநேரங்களில் முட்டாள் எனும் முகமூடியை அணிய புத்திசாலிகள் தயங்குவதில்லை.!

ஒரு ஆணை கடந்து செல்லும் ஸ்கூட்டிப் பெண்ணின் புன்னகை அந்த ஆணின் பைக்கிற்கு அதிக மைலேஜ் தந்துவிடுகிறது.!

எடுத்தேன்..கவிழ்த்தேன் என்பது குடிகாரனுக்கும் பொருந்தும்.!

இப்போதெல்லாம் நண்பர்கள் நெருக்கமாக இருப்பது செல்ஃபி எடுக்கும் போதுதான்.!

பெண்ணை காதலிக்கும் போது அபாரமான ஒலிகளும் திருமணத்திற்கு பிறகு அபாயமான ஒலிகளும் செல்போனில் ரிங் டோன்களாக வைக்கப்படுகிறது.!

கணவனுக்கு கத்து கிட்ட மொத்த வித்தை என்பது மனைவி கண்டுபிடிக்க முடியாதபடி பொய் சொல்வதே.! 

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்.. ஆனா இப்ப அதெல்லாம் ப்ளாட் ஆயிடுச்சு.!

புடவைக் கடையில் எது வேணுன்னாலும் வாங்கிக்கோ என்று மனைவியிடம் சொல்லும் தைரியம் எந்தக் கணவனுக்கும் இல்லை.!

மிகச் சிறந்த பொய்களெல்லாம் உண்மைகளின் பட்டியலில் உள்ளன.!

மனைவிக்கு முன் முட்டாளாக இருப்பதே புத்திசாலித்தனம்.!

மொபைல்களை பிரித்து மேயும் மெக்கானிசம் இன்றைய குழந்தைகளின் ஜீனில் கலந்து விட்டிருக்கிறது.!

நோக்கியா 1100 வைத்திருப்பது கஞ்சத்தனம்.. சொந்த ஆப்பிள் ஐ-போன் 6லிருந்து மிஸ்டுகால் கொடுப்பது வில்லத்தனம்..!

முகநூலில் உக்காந்து ஸ்டேட்டஸ் போட்டதுக்கு பதிலா அரசியல் தலைவர்களுக்கு போஸ்டர், பேனர் வாசகம் எழுதி குடுத்திருந்தா பணக்காரனாகி இருக்கலாம்.!

மனைவியிடம் அளந்து பேசிய யாரோ ஒரு கணவர் தான் ட்விட்டரை கண்டுபிடித்திருக்கக் கூடும்.!

உன் பார்வை என்னைக் கொல்கிறது என்றேன் முத்தமிட்டாள்.. இறந்தே போனேன்.!

New tweets

அன்று தொரட்டிக்குச்சியை கையில்பிடித்ததின் பரிணாம வளர்ச்சியே இன்றைய செல்ஃபி ஸ்டிக்.

இவன் 40,50 பெண்கள்கூட சாட் பண்ணிட்டு அந்த பொண்ணுக்கு 11 பேரான்னு கிண்டலடிக்குறான்.

மனிதனின் களவுள்ள நாக்கு பாம்பின் பிளவுள்ள நாக்கை விட கொடியது.

எல்லைகளை வகுத்துக்கொண்ட போதே பிரிவினைகள் தொடங்கிவிட்டன.

நீ ஃபீனிக்ஸ் பறவையாகவே இருந்தாலும் சோம்பேறியாய் இருந்தால் சாம்பலாகவே இருப்பாய்.

மனது வெள்ளையாக இருப்பதால் தான் சீக்கிரம் அழுக்காகி விடுகிறது.

சோகத்திற்கு வடிகால் என்பது ஆல்கஹால் எனத் தவறாகவே  புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது.

அதிர்ஷ்டமில்லாத மரங்கள் வெட்டி எறிந்து சிறு துண்டுகளான போதும் மீண்டும் சீவப்படுகிறது பென்சில்களாய்.

ஏன் சுவற்றோடு பேசுகிறாய் உன் சோகத்தை கடவுளிடம் போய் சொல்லி ஆறுதல் தேடு என்கிறார்கள் இரண்டும் ஒன்றுதான் எனத் தெரியாமல்.

கடமை என்பது நம் கண்ணுக்கு கொடுமையாகவே தெரியும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியாது.. "புரொஃபைல் பிக்சர்"

நம் சோகம் என்னவென்று தெரிந்துகொள்ள ஆவலாய் இருப்பவர்களிடம் இருந்து நமக்கு ஆறுதல் கிடைக்காது.

என்ன தான் முகம் மூடி ஹெல்மெட் போட்டாலும் என்னவளை எளிதாக அடையாளம் காண முடிகிறது. பிரேக் போடும் போது 2 காலும் சாலையில்.!

நடுத்தர வயதில் ஆணின் சமாதானக் கொடி நரையாக மாறி காதோரங்களில் பறக்கும்.

சூப்பர் சிங்கரில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் "பாட்டாளிகள்" தானே!

காதலில் தோற்றவனுக்கு ரோஜாப்பூவும் நிலாவும்  கவிதையாகத் தெரியாது.

சரி சரி... லேட்டானாலும் பரவாயில்லை மெதுவாவே வாங்கன்னு மனைவி சொன்னால் அவங்க வீட்டில் இல்லை வெளியே போயிருக்காங்கன்னு அர்த்தம்.

காதலில் தோற்றவர்களின் சோகம் முன்பு பாட்டில் இருந்தது தற்போது பாட்டிலில் இருக்கிறது.

"உங்கிட்ட எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருந்துச்சு"என்பது  நட்பே இல்லை.

ஆங்கிரி பேர்டு விளையாடும் குழந்தைகளிடமிருந்து மொபைலை பறித்தால் நிஜ ஆங்கிரிபேர்டாக மாறிவிடுகிறார்கள்.

மனிதன் பறக்க முடியவில்லையே என ஏங்குவதுபோல் ஓட முடியவில்லையே என பறவைகளும் ஏங்கலாம்.

மனைவியிடம் அனுமதி பெற்று பார்ட்டிக்கு செல்வதே நிபந்தனை ஜாமீன் ஆகும்.

போன்கள் "ஸ்மார்ட்"ஆனது மக்கள் "வேஸ்ட்" ஆகிவிட்டனர்.

நல்ல அன்பான குடும்பத் தலைவனாக நடிக்கத் தெரிந்தவருக்கு அது போல நடக்கத் தெரியாததே வாழ்க்கை எனப்படும்.

ஆக்ச்சுவலி குத்துசண்டை மல்யுத்த வீராங்கனைகளை மணந்தவர்கள் தானே மாவீரர்கள்!

ரெண்டே நிமிடத்தில் தயாராச்சு 20 கோடியில் அழிஞ்சுபோச்சு.

பேண்ட் போட்டு பெல்ட் போட்டா "ஸ்டைலிங்" ஜட்டி போட்டு பெல்ட் போட்டா "ரெஸ்லிங்"

மதுவின் தீமைகளை பற்றி நெடுநேரம் நண்பர் எடுத்துரைத்தார் உடனே நிறுத்திவிட்டேன்!

சூப்பர் அந்த பழக்கத்தையா.?

இல்லை..அவருடன் பேசுவதை..

இந்தியாவிலுள்ள ஆண் ஜென் துறவிகள் அனைவருக்கும் திருமணமம் ஆகிவிட்டது.

குடித்துவிட்டு தாமதமாக வீடு திரும்புபவனுக்காக வாசலிலேயே வெறியோடு காத்து நிற்கும் மனைவி...

 இதான் "தெய்வம் நின்று கொல்லுங்கறதோ"

எந்தக் கூட்டணியிலும் சேர்த்துக் கொள்ளாமல் கழட்டி விடப்பட்டவர்கள் ஆரம்பிப்பதே மூன்றாவது அணி!

பேக்கப் இல்லாட்டி செயல்படுவதுஇல்லை யூ.பி.எஸ்சும் ஓ.பி.எஸ்சும்.

தன் தாயின் கைப்பக்குவத்தை அலட்சியப் படுத்தியவர்கள் மனைவியின் "கைப்பக்குவத்தில்" அடங்கிப்போகிறார்கள்.

வீட்டில் மனைவி"ஹாட்டாக"இருந்தால் சாப்பாடு"கூலாக"கிடைக்கும்..

இப்போதெல்லாம் நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கை வெளிச்சமாவது லைட் போட்டு எரியும் போது தான்.!

பவர்"பேங்க்"வாங்கலியான்னு நண்பர் கிட்ட கேட்டேன் சிலேடையா பதில் சொன்னார்... #அதுல_இன்ட்ரஸ்ட்_இல்லிங்க

அநேகமா இந்த காமிராவுக்கு ஒரு திருநெல்வேலிக் காரர் தான் பேரு வச்சிருப்பாரோ...! #நிக்கான் 

அந்தாளு தில் படத்து வில்லன் நடிகர் தானே..! அவருக்கு எப்படி நோபல் பரிசு கிடைச்சது.?!

யோவ் அது ஆசிஷ் வித்யார்த்தி இல்லை.. சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தி..
----
@venkatapy: சென்னை சென்ட்ரலில் குழந்தை கடத்திய பெண்ணின் முகம் காமிராவில் சரியாக பதிவாகவில்லை - செய்தி

அரண்மனை பொற்கொல்லன் செய்த கேமிராவோ.!

@venkatapy: ஓ.பி.எஸ் கார் முன்னால் படுத்து போராடுவேன்னு சொன்ன குஷ்புவை பார்த்து கேட்கிறேன் எங்கே நீங்க அதை சல்மான் காருக்கு முன்னால செய்யுங்களேன்..!

பூக்களைப் பறிக்காதீர்கள்
என்னும் அறிவிப்பை 
காற்று சட்டை செய்வதில்லை.

@venkatapy: தேதி குறிக்க முடியாத இரண்டு விஷயங்கள் சிம்பு பட ரிலீஸ் & திரிஷா திருமணம்.

@venkatapy: சோற்றுப் பருக்கைகள் சுற்றிலும் இறைந்து கிடக்க 
சாப்பிடுகிறது குழந்தை...எனக்கு நட்சத்திரங்களுக்கு 
நடுவில் இருக்கும் நிலா போல தெரிகிறது.

@venkatapy: ஊருக்கு வெளியே ஹார்லி டேவிட்சன் பைக்கில் அய்யனார் அமர்ந்திருக்கும் சிலையை பார்த்தான்!

"கி.பி. 2115"

@venkatapy: தமிழ் சினிமாவில் சொந்தக்குரலில் பேசாத ஹீரோயின்கள் தான் ரியல் டப் மாஷ் மாஸ்டர்கள்.!

@venkatapy: படம் ஓடி வசூலாக ஐடியா கேட்டா டிக்கெட் காசு ஃப்ரீன்னு அறிவிக்க சொல்றிங்களே எவ்வளோ கூட்டம் வந்தாலும் வசூல் ஆகாதே..!

தியேட்டர்ல படம் போட்டதும் வெளியபோக  காசுன்னு வைங்க வசூல் கொட்டும்.

@venkatapy: "முதலிரவில் சொம்பில் பால்" இது என்ன குறியீடாய் இருக்கும்..!

@venkatapy: யுவர் ஆனர் இங்கு மலை இருந்தபோது மறுபக்கம் போக மக்கள்17கிமீ சுற்றிப்போனார்கள் அதை தகர்த்தவுடன் இப்ப வெறும் 3 கிமீ தான் ஆகவே எனது கட்சிக்காரர்..

@venkatapy: பெண்களைக் கவர குன்ஹாவாய் இருப்பதை விட குமாரசாமியாய் இருந்துவிடு.

@venkatapy: உண்மையில் பிச்சைக்காரன் என்பவன் அனிருத் இசையைக் காப்பியடிப்பவனே.

@venkatapy: கேப்டன் தானய்யா தீர்க்கதரிசி அன்னிக்கே சிம்பாலிக்கா ஒரு படம் நடிச்சிட்டாரு.."நீதிக்கு தண்டனை"

@venkatapy: ஏழைக்கு மனமிரங்கி உதவும் நல்ல உள்ளங்களைப் பார்த்த பின்பும் எப்படிச் சொல்லுவேன் "கடவுள் இல்லையென்று"

@venkatapy: வீட்டுக்கு வாங்க என கோபத்துடன் மனைவி அழைத்ததால் வீடு திரும்பினேன் டிவியில்WWEஓடும் சத்தம் காலிங்பெல் அடிக்கவா வேணாமா.!

@venkatapy: நீங்கள் கடலையை சம்பளமாகத் தருவீர்கள் என்றால் உங்களிடம் குரங்குகள் மட்டுமே வேலைக்கு வரும்.

@venkatapy: உங்க மனசைத் தாங்க காதலிக்கிறேன்னு சொன்னா பொண்ணுங்க பை அங்கிள்ன்னுட்டு போயிடுறாங்க.

@venkatapy: கடைசியாக ஒரு கவிதை எழுதித்தான் அந்தக்காதலை முறிக்க வேண்டியதாக இருக்கிறது.

@venkatapy: பார்களில் நுழையும் வெளியேறும் வழிகளுக்கு IN -OUT என்று எழுதுவதை விட IN - FLAT என்று எழுதுவது பொருத்தமாக இருக்கும்.

@venkatapy: கொழுந்தியாவை "கொழுந்தியா"ன்னு பாக்காது"கொழந்தயா" பார்ப்பவனே நல்ல ஆண்மகன்.

@venkatapy: அப்பாவுக்கு சப்ஸ்ட்டிட்யூட்டாக அம்மாவிடம் திட்டு வாங்கியது மகன்களே... "அப்பனுக்கு பிள்ள தப்பாம பொறந்திருக்கு"

@venkatapy: பேக்கரில மிக்சர் சாப்பிடுற ஒரு தம்பி மொபைல் ஸ்க்ரீன் சேவர்ல திரிஷா படம் வச்சுருக்காரு.! அனேகமா திரிஷா இவருக்கு தான்.!

@venkatapy: சாத்தான் வேதம் ஓதுகிறது என்பதற்காக கடவுள் ஒப்பாரி வைக்கமாட்டார்.

@venkatapy: மோடி வெளிநாடு போகாமலிருக்க ஒரு ஐடியா ஏதாவதொரு ஐபிஎல் அணியில் அவரை சேர்த்துட்டா அது முடியறவரைக்கும் அவர் எங்கேயும் போக முடியாது.

@venkatapy: வயதான பெரியவர் மோர் விற்கிறார் "ஒளிந்திருக்கும் செய்தி" இவர் வயது வரை வாழப்போவதில்லை கோக் பெப்சி சாப்பிடும் எல்லோரும்.

@venkatapy: கோவில் கோபுரத்தை விட மனிதனுக்கு செல்போன் கோபுரங்கள் மதிப்புமிக்கதாக ஆகிவிட்டன..!

@venkatapy: அவள் தன் செருப்புகளை 
கையில் அணிந்து என் 
கன்னங்களில் நடந்தாள்.

"செருப்படி" என்பது பற்றிய கவிதை

@venkatapy: டைரக்டர் மணிரத்னம் நன்றியுள்ளவர்..! படிக்கும் போது பரிட்சையில் அவரை காப்பாற்றிய ஒன்வேர்டு கொஸ்டின்களின் நினைவாகத்தான் வசனம் எழுதுகிறார்.

@venkatapy: பல ஆயிரம் செலவழித்து யாகம் நடத்தினால் கிடைக்கும் அதே புண்ணியம் பசித்த4பேருக்கு உணவளித்தாலே கிட்டும்.

@venkatapy: தப்பு செய்யணுமுன்னு நினைக்கறவன் இருட்டுற வரைக்கும் எல்லாம் காத்து இருக்கமாட்டான்.!

@venkatapy: இனி வரும் காலங்களில் தாய் தந்தை மடிகளில் குழந்தைகள் இருப்பதை விட அதிகநேரம் லேப்டாப்புகளே இருக்கும்.!

@venkatapy: கரையான் புற்றை பாம்புப்புற்றுன்னு சொல்லுற மாதிரி படத்தை யார் டைரக்ட் பண்ணாலும் கமல் படம்ன்னு தான் சொல்லுவோம்.

G.K.வாசன் விரும்பினால் பா.ஜ.க. வில் இணையலாம் - பொன்னார்

இயக்குநர் ஷங்கர் விரும்பினால் என்னை இயக்கலாம் - நடிகர் ஸாம் ஆண்டர்சன்.

நம்ம நெட்வொர்க் வேலை செய்யாத போது அதே நெட்வொர்க் வேறு எந்த ஊரிலும் வேலை செய்யவில்லை அறிகின்ற வேளை #மைண்ட்ப்ளோயிங்

இவனுக்கெல்லாம் லவ்வரா என பொறாமைப்படுகின்றவன் தன் நண்பனின் காதலி ஒரு ஃபேக் ஐ.டி எனத் தெரியும் போது அவன் மனநிலை #மைண்ட்ப்ளோயிங்

ஹெல்மெட் அணியாது போய் டிராபிக் போலீசில் பிடிபட்ட போது அதே வழியில் ஹெல்மெட் அணியாது டிரிபிள்ஸ் வரும் அடுத்த பைக்காரனைப் பார்த்ததும் #மைண்ட்ப்ளோயிங்

நம்ம வீட்டுல நாம வாங்காத பொருளை எதிர்வீட்டுக்காரன் வாங்கி அது 2 நாளில் உடைஞ்சுடுச்சு என அறியும் போது #மைண்ட்ப்ளோயிங்

3ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின அதே சேலை ஒரு வாரம் கழித்து 2ஆயிரம் ரூபாய் விலையில் பாக்கும் போது #மைண்ட்ப்ளோயிங்
---------------
அடிக்கடி தாமதமாக வந்து காரணம் சொல்பவர்கள் மிகச்சிறந்த நடிகர்களாகி விடுகிறார்கள்.

ஆஸ்கர் விருதுக்கு அனுப்பவேண்டிய நடிப்பெல்லாம் மனைவி முன் பர்ஃபார்ம் செய்யப்படுகிறது.

போலியாக காட்டப்படும் சந்தோஷத்தில் ஜாலியாக இருக்கவே முடியாது.

துரோகங்கள் ஏற்படுத்தும் காயங்கள் தான் வலி மிகுந்ததாய் இருக்கின்றன.

No comments:

Post a Comment