Thursday 9 June 2016

சாண்டாக்ரூஸ் சந்தோஷம் 3

#சாண்டாக்ரூஸ்_சந்தோஷம்

பார்ட் - 3

சீல்களின் வேகம் நீருக்குள் அபாரமானது.. டிஸ்கவரி சேனலில் பார்த்து இருப்பீர்கள் பெரிய சுறாக்களிடம் இருந்து அது நீருக்குள் தாவித் தாவி விரைவதை.. அதே போல மிருககாட்சி சாலை சாகச காட்சிகளிலும் சீல்கள் தாவுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்..8 அடி உயரம் என்பதெல்லாம் அதற்கு சாதாரணம் நீருக்குள் இருந்து தலையை மட்டும் உயர்த்தி தான் எங்கு தாவ வேண்டும் என தீர்மானித்து குறிப்பிட்ட தூரம் பின்னே சென்று..

அப்படியே நீருக்குள் ஒரு டைவ் அடித்து மூழ்கி கீழேயிருந்து ஒரு ராக்கெட் போல கிளம்பி நீரின் மேல் மட்டத்திற்கு வந்து "ஊஃப்ப்ப்ப்ப்"... லாவகமான தாவல்... தன் இலக்கான அப்பலகையில் உடலால் சறுக்கிக் கொண்டே லேண்ட் ஆகிறது... சில நேரம் சறுக்கி  மீண்டும் தண்ணீருக்குள் விழும் காமெடியும் உண்டு. சரி பாலத்துல நின்னு சீல்கள் தாவுவதை மட்டுமே பார்த்துகிட்டு இருந்தா போதுமா.. பீச்சுல போயி நாம தாவ வேணாம்.!

வாங்க பீச்சுக்கு.! மீண்டும் பாலத்தைக் கடந்து சாலைக்கு வந்தோம். இப்போது கூட்டம் அதிகரித்து இருந்தது.. மணல்வெளியை ஒட்டியுள்ள பீச் சாலையில் நடந்தோம்.. மணலில் பீச் வாலிபால் ஆடிக் கொண்டிருந்தனர் பெண்கள்.. ராஜதந்திரத்துடன் மருதபாண்டியன் குடும்பத்தை முன்னே போகச் சொல்லி பின் தொடந்தோம்.. இராணுவ அணிவகுப்பில் நேர் பார்வையில் நடந்து வரும் வீரர்கள் அதிபரை கண்டதும் அவர் பக்கம்...

திரும்புவார்களே அதுபோல பீச்வாலிபால் அதிபிகளை ஒன் சைடாகவே பார்த்துக் கொண்டு நடந்தோம்.. பின்னே டாப்லெஸ்சில் வாலிபால் ஆடினா! எங்களுக்கு பாட்டம்லெஸ் ஆகிக்கொண்டிருந்தது. அடித்த உச்சிவெயில் ஊட்டிக்குளிராக தெரிந்தது.. அவ்வப்போது மருது குடும்பத்தினர் எங்களை திரும்பிப்பார்க்க அப்போது மட்டும் நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும் போட்டோம்.10 நிமிடத்தில் கடக்க வேண்டிய பகுதி அது.!

ஒருவழியாக 40 நிமிடங்கள் எடுத்துக்கொண்டோம். பிறகு குளியல் ஆடைகள் வாங்க ஒரு பெரிய காம்ப்ளெக்சே இருந்தது.. குட்டி தீம் பார்க் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் அரங்கமும் இருந்தது... கரீபியன் கடற் கொள்ளை விளையாட்டு, ஸ்பைடர்மேன், பேட்மேன் அரங்குகள் இருந்தன. எங்களுக்கான குளியல் ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டு கடலுக்கு போனோம்.. புதுப்பெண் நாணத்தோடு நடந்துவருவது போல பூமி பார்த்து..

நடந்தோம்... ஏன் கீழே பார்க்குறிங்கன்னு கேட்கக்கூடாது சூரியக் குளியல் போட படுத்து இருப்பவர்களை மிதிச்சிட கூடாதில்லையா அதான் (ஹிஹி) எங்கள் கண்களில் இருந்து மலர்களாக கொட்டிக் கொண்டிருந்தன  (பாத்து பாத்து பூத்ததால்) கரையில் இருக்கும் அழகுப்பெண்களை காண பசிபிக் கடலே அடக்கிவாசித்து சிற்றலைகளை அனுப்பிக் கொண்டு இருந்தது. நீரில் இறங்கினோம்.. வாவ்.. என்னா குளுமை ஜில்லுனு ஐஸ் வாட்டர் அலை.

நம்ம ஊரு கடலில் சூடாக கால் பதித்து பழகிய எங்களுக்கு கடல் குளிர்வது அதுவும் மதியம் 1 மணி வெயிலில்.! நிச்சயம் ஒரு புதிய அனுபவம் தான். நல்ல குளியல்.வாண்டு கோபிகாவுடன் மணல்வீடு கட்டி வெளாண்டு நானும் மழலை ஆனேன்.. குளிரக்குளிர குளித்து, பராக்கு பார்த்து, விளையாடி கரைக்கு திரும்பினால் மல்லிகா மருது அவர்கள் வீட்டிலிருந்து சாதம், மீன் குழம்பு , சிக்கன்,ரசம் என ஹாட்பேகில் ஒரு மெஸ்சே கொண்டு வந்திருந்தார்.

அருமையான சாப்பாடு நாங்கள் ஹாட்பேகை பிரிக்கும் போதே எழுந்த மீன் குழம்பின் மணம் காற்றில் பரவ அருகில் இருந்த சீனர்கள் மெக்சிகர்கள் ஆவலுடன் எங்களை பார்த்தனர்.. நாங்கள் சாப்பிடும் அழகில் கொஞ்சம் அவர்களுக்கு நாவூறிகூட இருக்கலாம். பசிபிக் கடலோரம் எங்கள் பசியை தீர்த்துக் கொண்டோம்.. பார்த்து ரசித்த காட்சியில் கண்களும் மனமும் உண்ட உணவில் வயிறும் நிறைய தூக்கம் கண்களை நிறைத்தது.

பீச் மணலில் குடை விரித்து டவல் விரித்து நிம்மதியாக உறங்கினோம்.. கொர்ர்ர்.. (இனி கனவில்) டாப்லெஸ் பெண்கள் வாலிபால் ஆட எதிர் அணியாக இப்போது நாங்கள்.!  முதலில் அந்த நீல தொப்பிப் பெண் சர்வீஸ்.. பந்தை தூக்கி வீசி கையால் தட்டும் முன் சொல்கிறாள் லவ் ஆல்.. யெஸ்.... அதற்கு தானே இவ்வுலகம்..! (நிறைந்தது)

No comments:

Post a Comment