Tuesday 16 December 2014

தேவதைகளின் தேசம் ஸ்விஸ் -1

#லுசான்_சுவிட்சர்லாந்து 

பார்ட் -1

முதன் முதலாக இந்த ஊருக்கு ஒரு டிசம்பர் மாதத்தில் 4 வருடங்களுக்கு முன் சென்றேன்.. (2010) ஐரோப்பிய நாடுகளுக்கு டிசம்பரில் செல்வது அவ்வளவு உகந்தது அல்ல பனி என்றால் பனி அப்படிப்பட்ட உறைபனி..! நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது..!

மைனஸ் 6 இல் இருந்து மைனஸ் 18 வரை வெப்பநிலை.. அதை வெப்பநிலை என்ற பெயரில் மட்டுமே வெப்பம் இருக்கும்..7 கிலோ உடை அணிந்தாலும் எலும்பில் குளிர் தெரியும்.!

முதன் முறை எங்கு பார்த்தலும் சுண்ணாம்பு அடித்த ஜகன்மோகினி பேய் போல எல்லாமே வெள்ளைப் பனி மூடி ஊரே உஜாலாவுக்கு மாறி இருந்தது.. ஊரின் நடுவே ரியஸ் ஆறு..!

ஒரு பெரிய கடல் போன்ற ஆறு.. ஆனால் பனியால் உறைந்து இருந்தது அந்த ஆற்றின் மேல் டேபிள் போட்டு இரவு நேர உணவகங்கள் தென்பட்டன..பனிச்சறுக்கு விளையாட்டு நடந்து கொண்டிருந்தது...14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மரப்பாலம் ஆற்றின் அழகுக்கு அழகு சேர்க்கிறது.. அங்கிருந்து ஆற்றின் அழகை வெகுவாக ரசிக்கலாம்.

முதன் முறை இந்த ஊரில் ஒரே ஒரு நாள் தான் இருந்தோம்.. அங்கு புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள்.. நகரின் முக்கிய அரசுப் பொறுப்புகளில் தமிழர்கள் இருக்கிறார்கள்.. ஸ்விஸ் பாராளுமன்றத்தில் ஒரு தமிழ் எம்பி இந்த தொகுதியைச் சேர்ந்தவர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்..!

ஸ்விஸ் நாட்டின் மிகப்பெரிய நகரமான ஜூரிச் நகரம் இங்கிருந்து வெறும் 60 கி.மீ என்பதால் எளிதாக இங்கு வரலாம்.. இங்கிருந்து தான் பேசல், பெர்ன் போன்ற நகரங்களும் உள்ளது ஆல்ப்ஸ் மலையின் உலகின் மிக உயரமான கேபிள் ஸ்டேஷன் அமைந்திருக்கும் இண்டர் லேகன் இங்கிருந்து அருகில் உள்ளது... லுசான் ஐரோப்பிய கலாச்சாரம் மிகுந்த மிக மிக அழகிய நகரம்.!

முதல் முறை பனி மூடி பார்த்த இதே ஊருக்கு அடுத்த முறை (அடுத்த ஆண்டே) மே மாதம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.. ஹுர்ரே என விசிலடித்தேன்.. பனிப் பர்தாவில் மறைந்திருந்த அழகு இப்போது பசேலெனப் பளிச்சிட்டது.. இது தேவதைகளின் தேசம் என்றால் அது மிகையில்லை...வாங்க லுசான் சுத்திப்பாக்க..

தொடரும்..

No comments:

Post a Comment