Friday 5 December 2014

1947இல் முகநூல்

மகாத்மா காந்தியின் செல்போனில் நோட்டிஃபிகேஷன் சவுண்ட் ஒலித்தது எடுத்து பார்த்தார் வாட்ஸ் அப்பில் ஜவகர்லால் நேருவின் மெசேஜ்.. பாபுஜி அயம் கம்மிங் டூ யுவர் ஹோம் ப்ளீஸ் வெயிட்.. மெல்ல தனது லேப்டாபை ஆன் செய்தார் பாபுஜி.. 

டிவிட்டரில் காந்தியை தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 மில்லியனை தாண்டியது என்ற மெயிலை புன்னகைத்தபடியே பார்த்தார்.. பாபுஜி தங்கள் மொபைலில் சார்ஜ் ஏற்றட்டுமா ஆண்ட்ராய்டு போன்களில் அதிக நேரம் சார்ஜ் நிற்பதில்லை என்றபடி உள்ளே வந்தார் சர்தார் வல்லபாய் பட்டேல்.. 

அவரிடம் சார்ஜரை நீட்டிவிட்டு நேரு வருகிறார் தெரியுமா என்றார் பாபுஜி.. தெரியும் பாபுஜி எனக்கும் டெலிகிராம் க்ரூப்பில் தகவல் அறிவித்து இருந்தாரே என்றார் பட்டேல்.. நமது போராட்டங்களை பற்றிய புகைப்படங்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் வெளியாகிறதா படேல்ஜி என காந்தி கேட்க.. 

ஆம் பாபுஜி வெகு சீக்கிரம் இந்தியா முழுவதும் அது போய் சேருகிறது என்றபோதே..வெற்றி.. வெற்றி.. என கத்தியபடியே நேரு வர.. அவரை வரவேற்கிறார் காந்தி சொல்லுங்க பண்டிட் என்ன இவ்வளவு சந்தோஷம்.. பாபுஜி நாம் ஆரம்பித்த Freedom India ஃபேஸ்புக் பேஜிற்கு நாடு முழுவதும் அமோக ஆதரவு அதுவும் மதறாசில் இருந்து பேராதரவு.. 

இது வரை நமது பேஜ் 80 கோடி லைக்குகள் பெற்று விட்டன மவுண்ட்பேட்டன் குலை நடுங்கி ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் தருவதாக வாக்களித்துவிட்டார்.. என்றார்.. இப்போது காந்திஜி பதறினார் என்ன சொல்கிறீர்கள் இந்திய நாட்டின் மக்கள் தொகையே 30 கோடி தானே பிறகு எப்படி 80 கோடி லைக் விழும் எனக்கே குலை நடுங்குகிறதே என்று கேட்க.. 

அங்கு தான் தமிழர்களின் ராஜதந்திரம் இருக்கிறது பாபுஜி மற்ற 50 கோடி லைக்கும் ஃபேக் ஐடிக்கள்.. அனைத்தும் மதறாசில் விழுந்த லைக்குகள்... இது தமிழர்களின் அரிய கண்டுபிடிப்பு.. வெள்ளையனை வெளியேற்றிவிட்டோம் என மகிழ்வுடன் கூறினார் நேரு

#நாங்கெல்லாம்_அப்பவே_அப்படி

டிஸ்கி: இப்போதைய இணைய வசதிகள் சுதந்திர காலத்தில் இருந்து இருந்தால் என்ற கற்பனை இது.. தலைவர்களை பழிப்பதற்காக அல்ல.

No comments:

Post a Comment