Sunday 7 December 2014

தீனா- டிசம்பர்

"தீனா கொரலு"

கண்ணால வுட்ற லுக்கு, காதால கேக்ற கொரலு, டேஸ்ட்டா துண்ற நாஸ்டா, மூக்கால புடிக்ற வாஸ்னை, ஒடம்பலா டச் பண்ற சொகம் இந்த அஞ்சயும் ஒண்ணா நான் பாக்குறது சொம்மா ஜகஜகன்னு மின்னினு கீற வளயலு போட்ட என் ஆளு கிட்ட ஒண்டி தான்.! "புலன் ஒனக்கு அஞ்சு.. அது அல்லாமே அவ தான் கொஞ்சு"
குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல் : குறள் எண் : 1101 ]

"தீனா கொரலு"


நாலெய்த்து பட்ச்சி நல்ய நல்ய பொஸ்தவத்தை கரய்ச்சி குட்ச்சி பெர்ய அறிவாளியா இல்லாம பாக்குறதுக்கு அயகான மூஞ்சியும் சோக்கான கலரும் மட்யும் இர்ந்தா அவுனும் மண்ணுல செஞ்ச அயகான பொம்மயும் ஒண்ணு.! "பட்ச்சா தான் நீ நெம்பர் ஒண்ணு.. இல்லாங்காட்டி நீ மண்ணு" சோக்கா சொல்லிக்கீரார்பா"தல"

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை யற்று.

[ பொருட்பால் : அதிகாரம் : கல்லாமை : குறள் எண் : 407 ]

"தீனா கொரலு"


அல்லாரும் நம்க்கு ஏதாவது ஒதவி செய்வாங்கன்னு எதிர்பாத்துகினா மழ பெய்து.! அத்தே மேறி தான் நாம ஆருக்காச்சும் ஒதவி செஞ்சா திருப்பி செய்வானா அப்டினு பாக்காம செய்யணும்.. மழய மேறி உதவு.. நீ மலயப் போல உசரு.. சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு.

[ அறத்துப்பால் : அதிகாரம் : ஒப்புரவறிதல் : குறள் எண் : 211 ]

"தீனா கொரலு"


ஒர்த்தன் அல்லாத்துக்கும் பொதுவா எது ரைட்டு எது ராங்குன்னு கரீட்டா பாத்து.. நேர்மியா நாயத்துக்கு பக்கமே நிக்கிறா மேறி வாழணும்.. அதுனால அவன் சோத்துக்கே வழி இல்யாம கஸ்டப்பட்டா கூடொ அவுன இந்தய ஒலகம் பெர்மியா பேசுமே ஒண்டி அவுன தப்பாவே பேசாது.! ஏழயா இர்ந்தாலும் நியாமா வாழு.. அப்ப இந்தய ஒலகமே உன்ன வாழ்த்தும் பாரு.. சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் வாழ்வு.

[ அறத்துப்பால் : அதிகாரம் : நடுவு நிலைமை : குறள் எண் : 117 ]

"தீனா கொரலு"


ரொம்ப காண்டா பேஸ்ற மேறி இர்க்கும் ஆனா பேஸ்றது கடுமையாவே இர்க்காது.. அப்டியே உன்னிய எதிரி மேறி பாக்குற லுக்கு.. உன்னிய யாருன்னே தெர்யாத மன்சன் மேறி வெளிய ஒரு ஆக்டு கொடுக்கறது.. இத்தெல்லாம் மெய்யாலுமே மன்சுல அன்பு வச்சிகினு இர்க்கவங்க தான் செய்வாங்கோ.. பொய் கோவத்தோட ஒரு லுக்கு.. மெய் காதலுக்கு அது கிக்கு..குஜாலா சொல்லிக்கீரார்பா "தல"

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

[ இன்பத்துப்பால் : அதிகாரம் : குறிப்பறிதல் : குறள் எண் : 1107 ]

"தீனா கொரலு"


இன்னா தான் நல்யா கேக்குற காது உனுக்கு இர்ந்தாலும்.. நல்ல மன்சங்கோ பெர்ய பெர்ய அறிவாளிங்கோ பேஸ்றத நீ கேக்காம இருந்தா.. உன் காது கேக்குற காதா இர்ந்தாலும் அத்து கேக்காத காது தான்.! சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

[ பொருட்பால் : அதிகாரம் : கேள்வி : குறள் எண் : 418 ]

"தீனா கொரலு"

இந்த லவ்வு கீதே அத்து பொல்யாத நோவு.. அத்த ஆருக்கும் தெர்யாம மர்ச்சி வைக்க வைக்க அது ஊத்து தண்ணி கணக்கா பெருகி பெருகி நமக்கு கஸ்டத்தை குட்த்துருமாம்.. இறைச்சா ஊருது வாட்டரு.. மறைச்சா. வளருது லவ் மேட்டரு.. சோக்கா சொல்லிக்கீரார்பா "தல"

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு

ஊற்றுநீர் போல மிகும்.

[இன்பத்துப்பால் : அதிகாரம் : படர்மெலிந்திரங்கல் : குறள் எண்: 1161]

No comments:

Post a Comment