Monday 15 December 2014

திருவெம்பாவை - பாசம் பரஞ்சோதி

 #திருவெம்பாவை_எளிய_தமிழில்

அழகிய அணிகலன்கள் அணிந்த பெண்ணே..!

இரவும் பகலும் நாம் பேசும் போதெல்லாம் அந்த 

சிவனுக்குத்தான் என் அன்பெல்லாம் என்பாய்!

இப்போது ஏன் தூக்கத்தில் பற்று கொண்டாய்.!

(படுத்து இருப்பவள்)

சீ..ச்சீ..இதென்ன குறும்புப் பேச்சு நீங்கள் இங்கு

விளையாடலாமா.! இது விளையாடும் இடமல்லவே

(தோழியர்)

ஆம்தோழி! விண்ணவரும் வணங்கக் கூசும் மலர்ப் 

பாதமுடைய திருச்சிற்றம்பலத்துள் எழுந்தருளியுள்ள 

நம் ஈசனை வணங்குவோம் பக்தியை பெருக்குவோம் 

நாம் யார்? சிவனிடம் அன்புடையார் தானே எழுந்திரு 

எம்பாவாய்..


பாடல் -2

    பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
    பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
    நேசமும் வைத்தனையோ?நேரிழையாய், நேரிழையீர்
    சீசி யிவையுஞ் சிலவோ? விளையாடி
    ஏசு மிடமீதோ? விண்ணோர்க ளேத்துதற்குக்
    கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
    தேசன், சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
     ஈசனார்க்கு அன்பு ஆர்? யாம் ஆரேலோ ரெம்பாவாய்.
  



 





No comments:

Post a Comment