Thursday 18 December 2014

திருவெம்பாவை - ஒண்ணித்திலநகையாய்..

#திருவெம்பாவை_எளிய_தமிழில்

(தோழியர்)
முத்துச் சிரிப்பழகியே உனக்கு இன்னுமா விடியவில்லை?

(படுத்திருப்பவள்)

கிளியின் அழகு மொழி போல் உரையாடும் தோழிகளே

நீங்கள் அனைவரும் வந்து விட்டீர்களா.?!

(தோழியர்)

உள்ளதைத் தான் எண்ணிச் சொல்கிறோம் நீ கண்தூங்கி

காலத்தை வீணாக கழிக்காதே! விண்ணுலகம் போற்றும்

அருமருந்தை வேதத்தால் மேன்மையாக உணரப்படும்

பரம்பொருளை காண எங்கள் இனியவரான ஈசனை 

நெக்குருகி கசிந்து பாட வந்த நாங்கள் இதையெல்லாம்

செய்யமாட்டோம் வேண்டுமென்றால் நீயே வந்து எண்ணிக்

கொள் குறைந்தால் தூங்கிக் கொள்.. எம்பாவாய்.!



பாடல்: 04

ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம்; அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.




  



No comments:

Post a Comment