Sunday 21 December 2014

திருவெம்பாவை - அன்னே இவையுஞ்சில..

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

(தோழியர்)

பெண்ணே இதுவும் உன் குணங்களில் ஒன்றா? விண்ணுலக

தேவர்கள் பலர் நினைத்திடும் அரியவரான செம்பொருளாம்

ஈசனை நினைவூட்டும் சின்னங்களின் பேரைக் கேட்டவுடன்

சிவ சிவ எனச்சொல்லுவாய்.! தென்னாடுடைய சிவனே என்ற

வார்த்தையை சொல்லி முடிப்பதற்குள் தீயிலிட்ட மெழுகாய்

உருகிடுவாய்.. எம்பெருமானை நாங்கள் என் மன்னா! இனிய

அமுதம் போன்றவனே என பலவாறும் பாடித் துதிக்கின்றோம்

ஆனால் நீ உணர்வற்று இன்னும் தூங்குகிறாயே கடும் நெஞ்சம்

உடையவள் போல் அசைவற்று கிடக்கின்றாயே இத்தூக்கத்தின்

தன்மை தான் என்ன.! எழுந்து வா எம்பாவாய்.

பாடல்: 07 

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

No comments:

Post a Comment