Friday 26 December 2014

திருவெம்பாவை - ஆர்த்த பிறவி...

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

ஆரவாரம் செய்யும் பிறவித் துன்பமது நீங்க நாம் ஆரவாரித்து

வழிபடும் தீர்த்தனவன்;தில்லை சிற்றம்பலத்தில் தீயேந்தி ஆடும்

கூத்தனவன்;இவ்விண்ணையும் மண்ணையும் நம் அனைவரையும்

காத்தும், படைத்தும், கவர்ந்தும் விளையாடல்கள் புரிபவனவன்

அவன் புகழைப் பேசியும், கை வளைகள் ஒலிக்கவும், மேகலைகள்

குலுங்கி ஆராவரிக்கவும், கூந்தல் மேல் வண்டுகள் ரீங்காரமிடவும்

மலர்கள் நிறைந்த இக்குளத்தில் ஈசனின் பொற்பாதங்களை நாம்

வாழ்த்திக் கொண்டே நீராடி மகிழ்வோம் எம்பாவாய்.

பாடல்: 12
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 
குவலயம் - பூமி; கரத்தல் - உள் வாங்குதல்; குழல் - கூந்தல்.

No comments:

Post a Comment