Saturday 20 December 2014

திருவெம்பாவை - மானே நீ...

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

மான் போன்ற அழகிய பெண்ணே நீ நேற்று "உங்களை

நான் நாளை வந்து எழுப்புகிறேன்" எனக்கூறிவிட்டு 

வெட்கமின்றி இன்று எங்கு போனாய்?இன்னுமா உனக்கு

விடியவில்லை? வானும்,மண்ணும், பிறவுலகெல்லாமும்

அறிதற்கு அரியவரான சிவபெருமான், தானே இங்கு வந்து

கருணையோடு நோக்கி நம்மை ஆட்கொண்டு அருளுகிறான்

வானென நெடித்துயர்ந்து நிற்கும் அவர் தம் கழல் பாதங்களைப்

பாடி வரும் எங்களுக்கு பதில் சொல்! நீ உடல் உருக அவரைத்

தொழாது இருப்பதேன்! எங்களைப்போல எல்லாமே உனக்கும்

பொருந்தும்!வா எங்களுக்கும் ஏனைய எல்லார்க்கும் ஒருவன்

எம் தலைவன் ஈசனைப்பாடு எம்பாவாய்.


பாடல்: 06

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 

நென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்;
ஊன் - உடல்.





  



No comments:

Post a Comment