Monday 15 December 2014

திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்..

#திருவெம்பாவை_எளிய_தமிழில்

அகன்ற வாள் போல் கண்ணுள்ள பெண்ணே

ஆதியும் அந்தமும் இல்லாதவன் எம்சிவனே.!

ஒளி வெள்ளமான அவன் புகழ் பாடுகின்றோம்

அதைக் கேட்டுமா நீ இன்னும் உறங்குகிறாய்!

மகாதேவன் அவன் வாழ்த்தைக் கேட்ட ஒருத்தி

பக்தி பரவசத்தில் விம்மியழுது மெய் மறந்தாள்

அவளுறங்கிய மலர்ப் படுக்கையிலிருந்து புரண்டு

விழுந்து மூர்ச்சையில் கிடக்கிறாள்!இவ்வாறிருக்க

நீ மட்டும் ஏனிப்படி தன்மையின்றி தூங்குகிறாய்

எம்பாவாய்...

பாடல் - 1


ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
    சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ?வன்செவியோ நின்செவிதான்?
    மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே,விம்மிவிம்மி மெய்ம்மறந்து
    போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனு மாகாள் கிடந்தாள்; என்னேயென்னே!
    ஈதேஎந் தோழி பரிசேலோ ரெம்பாவாய். 


No comments:

Post a Comment